Monday, April 17, 2017

மௌன மொழி







மௌன மொழி,பேசாமல் பேசுவது,
சொல்லாமல் சொல்வது ,இப்படியெல்லாம்
சொல்லக் கேட்டதுண்டு

அதனைஆன்மீகமீகவாதிகளின்அசட்டுப் புலம்பல்
எனக் கூடக் கருத்தில் கொண்டதுண்டுமௌன மொழி

ஆனால் இங்கு(அமெரிக்காவில் )
பதினைந்து  நாட்களுக்கு முன்பு
எங்கள் வீட்டுப் பால்கனியில் இருந்துக் கூட
புகைப்படம் எடுக்க இயலாதவாறு
பனிப்பொழிவு அத்தனைக் கடினமாக இருந்தது

என்னை முற்றிலுமாக மூடி மறைத்தபடி
ஒரு நொடி வெளியேறித்தான் இந்த புகைப்படங்களை
எடுத்தேன்

இந்தப் பனி இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்
எப்போது இயல்பாக நடமாடும் சூழல் வரும்
என எல்லாம் இங்கு விசாரித்துக் கொண்டிருந்தேன்
சீதோஷ்ண நிலை குறித்த அறிக்கைகளையும்
கவனித்துக் கொண்டும்தான் இருந்தேன்

இந்தச் சூழலில் வெளியில் இருந்த
செடியை மிகச் சரியாய்க் கவனிக்கவில்லை

கடந்த ஒருவாரமாய்  கொஞ்சம்
சீதோஷண நிலைமை சரியாகி வர
பால்கனி வழி அந்தச் செடிகளைப்
பார்க்க மிகஅதிசயித்துப் போனேன்

அத்தனையும் மிகப் பசுமையாய் துளிர்விட்டும்
பூத்தும் அற்புதக் காட்சியளித்துக் கொண்டிருந்தது

விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாய்
எத்தனையோ அதி அற்புதக் கருவிகளைக் கொண்டு
வருகிற வாரம் சீதோஷண நிலையில்
மாறுதல் இருக்கும் என நாம் கணித்துக்
கொண்டிருக்க, அதுவும் சில சமயம்
பொய்த்துக் கொண்டிருக்க,

இனிப் பனிப்பொழிவில்லை,நீ துளிர்க்கலாம்
பூக்கலாம் என வானம்  மௌன மொழியாய்ச்
சொன்ன உறுதி மொழி,செடிகளுக்கு
மட்டும் எப்படிக் கேட்டது ?

தட்சிணாமூர்த்தியும் சீடர்களும் போல்
வானமும் மண்ணும் பரிமாறிக் கொள்ளும்
மௌனமொழி அறியும் பக்குவம்தான்
நம் புராணக் கால ஞானிகள் கொண்டிருந்த
ஞானமா ?

மௌன மொழி குறித்தும்
பேசாமல் பேசுவது குறித்தும்
சொல்லாமல் சொல்வது குறித்தும்
மாற்று எண்ணம் மெல்ல மெல்ல வளர்வதைத்
தவிர்க்க இயலவில்லை

10 comments:

KILLERGEE Devakottai said...

இயற்கை பேசிய மௌனமொழி அருமை

இராய செல்லப்பா said...

நியூயார்க்கின் பனியில் இப்படியும் கவிதை பிறக்குமா? இயற்கை, தனது படைப்புகளுடன் மௌன மொழியில்தான் பேசுகிறது..

-இராய செல்லப்பா நியூஜெர்சி

Angel said...

இங்கே லண்டனில் எல்லா செர்ரி மரங்களும் பூத்து இதழ்கள் கார் மீதும் தரைமீதும் பட்டு பாய் விரித்த காட்சி தான் ..அங்கே சீதோஷ்ண நிலை ஏப்ரலிலும் பனியா !!
இயற்கைக்கும் செடிகளுக்கும் காலநிலைக்குமான இடையேயான மவுன மொழி விந்தை தான் !!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் மௌன மொழி...

வெங்கட் நாகராஜ் said...

மௌன மொழி... இயற்கை காலம் காலமாக சொல்லும் மொழி....

ரசித்தேன் ஜி!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

கோமதி அரசு said...

மெளனமொழி அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

இயற்கையின் மொழியே மௌனம்தானே!!! அருமை!

தனிமரம் said...

இயற்க்கை பேசும் மொழி அழகு .அருமையான காட்சிப்படங்கள் ஐயா!

Yarlpavanan said...

மெளனமொழி - அது
அருமையான ஒன்று - அதன்
பெறுமதி அதிகம்!

Post a Comment