Saturday, April 22, 2017

பதவியில் இருப்பவர்கள் எல்லாம்.....

பதவியில் இருப்பவர்கள்  எல்லாம்
காது  கேளாதவர்களா  ?
இல்லை கெட்டிக்காரர்களா   ?

இல்லை நாம் தான்
முட்டாள்களா
இல்லை ஏமாளிகளா   ?

"கல்வித்துறையில்  கொள்ளையை ஒழியுங்கள்
கல்விக் கொள்கையை மாற்றுங்கள் "
என்றால்

கல்விக் கடன் தருகிறோம்
கல்விக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் "
என்கிறார்கள்

வேலைக்கு உத்திரவாதம் தாருங்கள்
வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்
என்றால்

வேலைபெறாதோருக்கு உதவித் தொகை
வேலையற்றோரின் கடன் தள்ளுபடி
என்கிறார்கள்

சாலைகளைச் சீர்ப்படுத்துங்கள்
சாலைப் போக்குவரத்தை  மேம்படுத்துங்கள்
என்றால்

வாகனத்திற்கு மானியம்
பஸ் கட்டணச் சலுகை
என்கிறார்கள்

மது விலக்கை  அமல்படுத்துங்கள்
மதுக் கடைகளை மூடுங்கள்
என்றால்

கைம்ப்பெண்களுக்கு நிவாரணம்
தாலிக்குத் தங்கம்
என்கிறார்கள்

பள்ளி மற்றும் நெடுஞ்சாலைகளில்
மதுக்கடைகளை அகற்றுங்கள்
என்றால்

அதனை ஊருக்குள்ளும்
வீட்டருகிலும்  வைப்பதற்கு
ஆவன செய்கிறார்கள்

நீர் நிலைகளைப் பராமரியுங்கள்
நீ ஆதாரத்தைப் பெருக்குங்கள்
என்றால்

கடல் நீரிலிருந்து குடி நீர்
தெர்மாக்கோல் மூடி
என்கிறார்கள்

......................................
................................................

நிஜமாகவே
நம் கோரிக்கைகள் அவர்கள்
காதுகளில் மாறித்தான்  விழுகிறதா ?

அல்லது
 நமக்குத்தான் அவர்களுக்குப்
புரியும்படியாய் சொல்லத்தெரியவில்லையா  ?


6 comments:

இராய செல்லப்பா said...

சிலரின் காதுகளுக்கு கேட்கும் திறனை இறைவன் மறுத்துவிடுவான் என்று தெரிகிறது...

ஸ்ரீராம். said...

கல்வித்துறைக்கு ஆங்கிலம் பேசுவது புரியாமல் அசடு வழிந்த ஒருவர் அமைச்சர். வைகையில் தெர்மாகோல் மூடி போட்ட செயல் 'இவர்கள் யாரையாவது கலந்தாலோசித்து செய்வார்களா, மாட்டார்களா?' என்ற கேள்வியை முன் நிறுத்துகிறது.

தம +1

KILLERGEE Devakottai said...

ஊமையன் சொல்வது செவிடனுக்கு புரியாது....

Yarlpavanan said...

செவிடன் காதில்
சங்கு ஊதுவது போல
நாம் உரைப்பது
அரசின் காதில் விழுகிறதோ!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

கொள்ளு என்றால வாயைத் திறப்பது
கடிவாளம் என்றால வாயை மூடிக் கொள்ளுமாம்
கெட்டிக்காரக் குதிரை
அப்படித்தான் ஒரு திட்டம் வெற்றியடைந்தால்
அது தன் யோசனை என்றும் அது
அதிகாரிகளுடையது என்றும் அரசியல்
வியாதிகள் சொல்லிக் கொளவ்து உண்டு
இதுவும் இந்த வகையில்தான் சாரும்

குளம் குட்டையில் பரிசீலித்துப் பின்
அணைக்கு இது சரிப்பட்டு வருமா என


கொஞ்சம் யோசித்திருக்கலாம்

K. ASOKAN said...

வாக்குகள் போடும்போதுயோசித்தாலேஇதுபோல்நிலைவராது

Post a Comment