தமிழகப் பொது ஜனங்களே
நம் காவல் துறையினரைத்
தொந்தரவு செய்யாதீர்கள்
களவு, கொள்ளை
தகராறு,வன்முறை
செயின் பறிப்பு
கற்பழிப்பு முதலான
சிறுச் சிறு விஷயங்களையெல்லாம் விட
சிலைப்பாதுகாப்பு
முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு
பொதுக்கூட்டப் பாதுகாப்பு
இவை போன்ற
தவிர்க்க இயலாத விஷயங்களை விட
இப்போது
டாஸ்மாக் வரிசை ஒழுங்குபடுத்துவது
புதுக்கடை துவங்க நேரும்
தடைகளைத் தகர்த்தெறிவது
முதலான அத்தியாவசியப் பணிகள்
அவர்களுக்கு அதிகம் இருக்கிறது
மிக மிகக் குறிப்பாகப்
பெண்களிடம் தங்கள்
புஜ பலப் பராக்கிரமத்தைக் காண்பிப்பது உட்பட
என்வே
அப்பாவித் தமிழ் ஜனங்களே
சட்டம் ஒழுங்கினைக்
காப்பதுதான்
அவர்களுக்கிட்டப்பணி
என்பதனை
அவர்கள் மறந்தே
வெகு காலமாகிவிட்டது
அவர்கள் பிரிட்டிஷ் போலிஸாராகி
வெகு நாளாகிவிட்டது
எனவே அதைஅவர்களுக்கு
ஞாபகப்படுத்தி
அவர்களைக் கஷ்டப்படுத்தாதீர்கள்
அதனால்
நீங்களும் கஷ்டப்படாதீர்கள்
எனவே
ஊமை ஜனங்களே
இனியேனும்
தொந்தரவு செய்யாதீர்கள்
5 comments:
ஐயோ பாவம்! ...
-இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்
அருமையான நையாண்டிப் பதிவு!....ஆமாம் அவர்களுக்கு எவ்வளவு பணிகள் இருக்கின்றன....அவர்களுக்கும் இந்த மதுக்கடைகள் வேண்டாமா...ஆக்ரோஷம் வராமல் இருக்குமா...
அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்...
பெண்களை அடித்துக் கட்டுப்படுத்தும் காவல் அதிகாரியை தொந்தரவு செய்யலாமா
வேதனை ஐயா
வேதனை
"ஊமை ஜனங்களே
இனியேனும்
நம் காவல் துறையினரைத்
தொந்தரவு செய்யாதீர்கள்" என்றால்
அவர்கள் அடித்தால்
சனங்கள் சாக வேண்டி வருமே!
Post a Comment