Tuesday, May 2, 2017

பயணச் சாலையும் பயணச் சூழலும் ஒன்றுதான் ஆயினும்...

பயணச் சாலையும்
பயணச் சூழலும்
ஒன்றுதான் ஆயினும்...

தனிமையும்
இருளும்
முன்னம் கேட்டுப்பதிந்த
பேய்க்கதைகளும்
மனமெங்கும்
அச்ச உணர்வைக் கூட்டிப் போக

கரவொலி எழுப்பியபடியும்
விதம் விதமாய்
சப்த மெழுப்பியபடியும்
விரைந்து நடக்கிறான் ஒருவன்

பயணப்பாதை
நீண்டு கொண்டே போகிறது
அச்சமூட்டியபடி...

தனிமையும்
இருளும்
முன்னர் கிடைக்காத
சந்தர்ப்பமாய்
மனமெங்கும்
இன்ப உணர்வை கூட்டிப் போக

தாளமிட்டபடியும்
அதற்கேற்ப
பாட்டிசைத்தபடியும்
மெல்லப் பயணிக்கிறான் ஒருவன்

பயணப்பாதை
சுருங்கிக் கொண்டே போகிறது
மகிழ்வூட்டியபடி

ஆம்
பயணச் சாலையும்
பயணச் சூழலும்
ஒன்றுதான் ஆயினும்...

10 comments:

ஸ்ரீராம். said...

... நபரைப் பொறுத்து மாறுகிறது!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

ஆம் ஒருவன் நடக்கிறான்
ஒருவன் பயணிக்கிறான்

முதல் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

’ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்ற தத்துவம் போல இருக்கிறது.

பயணப்பாதையை சுருங்கிக் கொண்டே போகவும்
அதனை மகிழ்ச்சி ஏற்படச்செய்வதும் அவரவர் கையில்தான் இருக்கிறது என்பது புரிகிறது.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

அருமையாகச் சொன்னீர்கள்
உயிரோடு இருப்பவருக்கும்
வாழ்பவருக்குமான வித்தியாசம் அதுதானே

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா

இராய செல்லப்பா said...

போகுமிடம் வெகு தூரமில்லை என்னும் உணர்வோடு போனால் பயணம் இனிமையாகிறது.

Kasthuri Rengan said...

அருமையான உளவியல்
நமது உள்ளீடுகள்தான் வாழ்வுப் பயணத்தை ரசிப்பதையும் பதைப்பதையும் சாத்தியமாக்குகிறது

ராஜி said...

பயணம் ஆளுக்காள், அவர்தம் மனநிலையை பொறுத்து அனுபவம் அமையும்.

ஆன்மீக மணம் வீசும் said...

அச்சமும், மகிழ்ச்சியும் அவரவர் எண்ணம் போல்.

வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஒவ்வொருவரது மனனிலை எண்ணங்கள் பொருத்துத்தானே பயணம் சூழல் எல்லாமே அமைகிறது...இல்லையா...அருமை..

Post a Comment