Wednesday, May 10, 2017

சுமைதாங்கியும்....

யாருமற்ற வெளிதனில்

சுமை தாங்காது
தத்தளிக்கையில்

கொஞ்சம் தாங்கி
ஆசுவாசப்படுத்தி

மீண்டும்
புதுத் தெம்புடன்

பாதசாரி பயணிக்கவே
சுமைதாங்கிக் கல்

உடன் சுமந்து வர
அது  சுமை  தூக்கி இல்லை

இதை அறிந்தவனுக்கு
குழப்பமில்லை

அறியாதவனே
அல்லற்படுகிறான்

அடுத்தவனையும்
அல்லற்படுத்துகிறான்  

10 comments:

ஸ்ரீராம். said...

உண்மை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுமை தூக்கி இவன் ... சுமை தாங்கி அது ... இதில் குழப்பத்திற்கே இடமில்லை.

இதை அறியாதவன் ஒருவேளை போதையில் இருந்திருப்பானோ என்னவோ ...

சுமையைத் தூக்கிச் செல்வதற்கு பதிலாக சுமை தாங்கியையே பெயர்த்துச் செல்ல முயற்சித்துப் பார்த்திருப்பானோ என்னவோ...

Rajeevan Ramalingam said...

அருமையான குறியீட்டுக் கவிதை....!

சுமைதாங்கிக் கல் எதை... அல்லது எதையெதையெல்லாம் குறிக்கும்? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

K. ASOKAN said...

மிகவும் நன்கு உள்ளன

இராய செல்லப்பா said...

ஒருமுறை நமக்கு உதவிசெய்தார்கள் என்பதனால், அடுத்தடுத்து அவர்களையே தொந்தரவு செய்வது சரியில்லை என்கிறீர்கள்....உண்மைதான். சுமைதாங்கிக்கல் என்பது எப்போதோ ஒரு அவசரத்திற்குத்தான்.

Unknown said...

பாதசாரிகள் அனைவரும் இதை புரிந்து கொண்டால் நல்லது :)

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //

பக்தி ஜனங்களும்....

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். அருமை.

ஆன்மீக மணம் வீசும் said...

அருமை
வாழ்க்கையும் அப்படியேதான்.
புரிந்தவருக்கு இன்பம்.
புரியாதவருக்கு துன்பம்.

நல்ல சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை. சிறப்பான சிந்தனை.

Post a Comment