Thursday, June 22, 2017

. இது குறையாது இருக்கிற இடம் ...

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப்போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படிக்  கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்தக் " கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"மூன்றும்  மாறுபட்ட  நிலையாய் இருக்கிறதே
 இதில் எது சரி
மூன்றும்  சரியாய் இருக்கவோ
மூன்றும்  தவறாய் இருக்க   வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான நண்பன்

" இங்கு நம்பிக்கையின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை

வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்

அண்டாவுடன் வருபவர்கள்
அள்ளிக் கொண்டு போகிறார்கள்
.
இது என்றும் குறையாது
எல்லாம்இருக்கிற இடம்
ஆயினும்  கொடுக்கிற இடமில்லை

அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துச்  செல்கிற இடம் " என்றேன்

நண்பன் கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

15 comments:

KILLERGEE Devakottai said...

நம்புவோர்க்கு நாராயணா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"இதில் எது சரி .. எல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே" குழப்பத்தில் இருந்தான் நண்பன்//

நண்பன் மட்டுமல்ல .. நானும் தான் ஒரே குழப்பத்தில் .... தாங்கள் சொல்லியுள்ள விளக்கங்களான மீதி வரிகளையும் படித்தும்கூட :)

எல்லோரையும் நன்கு குழப்பி விடும் தெளிவானதோர் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தெய்வ சன்னதியில் எல்லாம்
இருக்கிறது என்கிற நம்பிக்கையுடன்
செல்பவருக்கு அவர் அவருடைய
நம்பிக்கையின் அளவுகளைப்பொருத்துப்
பெரும் அளவும் இருக்கிறது
என்பதைக் கூற முயன்றது சரியாக
சொல்லப்படவில்லைஎன நினைக்கிறேன்

மிகத் தெளிவாகச் சொல்லப்படுவது
கண்டுகொள்ளாமல் போய்விடும் என்பதும்
கொஞ்சம் குழப்பும்படி சொல்லப்படுவது
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியாக
மிகச் சரியாகப் படிக்கப்படும் என்பதும்
இப்படிச் சில சமயம் எழுதக் காரணம்

உடன் வரவுக்கும் மனம் திறந்த
வெளிப்படையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஹா ஹா ஹா.. இக்கவிதை படிச்சபின்.. நானும் குழம்பிட்டேன்ன்ன்:) என்று சொல்லவே மாட்டேன்ன்:)..

தெய்வத்தின் சன்னதிக்குப் போனால், போனமா சாமி கும்பிட்டோமா.. வீடு திரும்பினோமா என இருக்கோணும்:).. அதை விட்டுப்போட்டு சன்னதி வாசலில் நின்று .. ஊர் விடுப்ஸ் எல்லாம் பொறுக்கினால் இப்படித்தான் குழப்பம் வரும் ஹா ஹா ஹா:)..

பாருங்கோ... கோபு அண்ணனும் குழம்பிட்டார்ர்ர் கர்ர்:)..
நிறைகுடம் தளம்பாது.... இது என்னைச் சொன்னேன்:).. ஹா ஹா ஹா.. கடவுள் இருக்கார் குமாரூஊஊ:))...

கடவுள் இல்லை என நினைச்சாலே நம் நம்பிக்கை போய் விடும்:).. உண்மை .. பொய் எப்படியும் இருக்கட்டும்.. :)

தெய்வம் என்றால் அது தெய்வம்.. வெறும் சிலை என்றால் அது சிலைதான்:)..

ஹையோ இன்று என்னை அந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போயிடப்போகுதே:).

ஸ்ரீராம். said...

எதிர்பார்ப்பில்லாமல் இருப்போருக்கு எது கிடைத்தாலுமே பெரிதுதான்!

ஸ்ரீராம். said...

//தெய்வத்தின் சன்னதிக்குப் போனால், போனமா சாமி கும்பிட்டோமா.. வீடு திரும்பினோமா என இருக்கோணும்:).. அதை விட்டுப்போட்டு சன்னதி வாசலில் நின்று .. ஊர் விடுப்ஸ் எல்லாம் பொறுக்கினால் இப்படித்தான் குழப்பம் வரும் ஹா ஹா ஹா:)..//

ஆஹா.... வந்துட்டாங்கய்யா.... அதிரா வந்துட்டாங்கய்யா....!!!!

:)))

ஸ்ரீராம். said...

//நம்புவோர்க்கு நாராயணா... //

ஸூப்பர் கில்லர்ஜி..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

G.M Balasubramaniam said...

இந்தப் பதிவைப் படிக்கும் போது நடிகர் இயக்குனர் விசு எழுதி இருப்பது போல் இருப்பதை உணர்கிறேன் நம்பிக்கைக்கு இப்படியெல்லாம் விளக்கமா .

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஸ்ரீராம். said.....ஆஹா.... வந்துட்டாங்கய்யா.... அதிரா வந்துட்டாங்கய்யா....!!!!///

இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊஊஊ:)).. எங்கே என் முருங்கி:))?:).

திண்டுக்கல் தனபாலன் said...

சும்மா அதிரு(ரா)தில்லே...!!!

Unknown said...

# ஒரு கூன் விழுந்தபெரியவர்#ஒரு தொந்தி பெருத்தக் " கன "வான்#
உங்கள் சொல்லிலேயே தெரிகிறதே இவர்கள் இருவரும் எதிர்மறையானவர்கள் என்று !இவர்கள் எண்ணம் மட்டும் எப்படி நேர்மறையாய் இருக்கும் :)

தனிமரம் said...

சன்னிதானம் ஒரு புரியாதபுதிர் சில கறுப்புச்ச்சட்டைகளுக்கு)) அருமையான கவிதை ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

சன்னதியின் வாயிலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் எந்தக் குழப்பமும் வராது இல்லையா...நம்பிக்கைதான் வாழ்க்கை!

கீதா

Unknown said...

உண்மை

Post a Comment