Monday, June 26, 2017

முகமற்று ஏன் முக நூலில்...

பார்வைக் குறையுடன்
பிறந்த குழ்ந்தைக்கு
கண்ணாயிரம் எனப் பெயர் வைத்த
பெற்றோரின் மன நிலையைப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

வீராச்சாமி எனப்
பெயரிடப்பட்டவன்
எதற்கும் எப்போதும்
பயந்தவனாய் உலவுவதைப்
புரிந்து கொள்ளமுடியவில்லை

மாண்பு மிகு என
அது கொஞ்சம் குறைவானவர்கள்
போட்டுக் கொள்வதனைக் கூட
மனச்சாட்சி உறுத்தல் எனப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

முக நூலில்
தங்கள் முகம் மறைத்து
காரசாரமாய்
பிரச்சனைக்குரிய பதிவுகளாய்
பதிவிடுபவர்களை ஏனோ
புரிந்து கொள்ளமுடியவில்லை

பெண்கள் யுவதிகள்
என்றால் கூட
அதற்குப் போதிய காரணங்களிருக்கின்றன
ஆண்கள் பதுங்கிட
அப்படி என்ன அவசியமிருக்கிறது

குற்றாலம் போய்
குளிரடிக்கிறது என
குளியலறையில் சுடு நீரில்
குளிப்பதைக் கூடச்
சகித்துக் கொள்ளமுடிகிற எனக்கு

அருவியில்
குளிருக்கு அடக்கமாய் இருக்கட்டுமென 
போர்வையினைப் போர்த்திக் குளிப்பவரை
காணச் சகிக்கவில்லை
சிரிப்புத்தான் வருகிறது

ஆம் முகம் மறைத்து
முக நூலில்
உலவுவோர் நிலையினைப் போலவும்...

27 comments:

ஸ்ரீராம். said...

நான் கூட முகநூலிலும் முகம் மறைத்துதான் உலா வருகிறேன். ஆனால் பிரச்னைக்குரிய பதிவுகள் எதுவும் வெளியிடுவதில்லை.

ஸ்ரீராம். said...

தம இன்னும் சப்மிட் செய்யப்படவில்லை.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தமிழ் மணம் முன்புபோல
சுற்றிக் கொண்டே இருக்கிறது
உடன் வரவுக்கும் மனம் திறந்த
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai said...

நான் பிரச்சனைக்குறிய. பதிவுகளை இடுவதில்லை அதேநேரம்
முகம் காட்ட மறுப்பதில்லை
முகவரியை மறைத்ததில்லை
பதிர்வுக்கு நன்றி
த.ம.3

ஸ்ரீராம். said...

தம +1 (ஆம் சுற்றிக்கொண்டே இருந்தது)

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //

இது முகம் மறைத்து
காரசாரமாகப் பதிவிடுபவர்கள் குறித்து

(அவர்களும் எப்படியும் அதற்கான
சரியான காரணம் வைத்திருப்பார்கள்
அதை அறிந்து கொள்ளும் பொருட்டும் )

தங்களைப் போன்றவர்களுக்கு இல்லை
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
நல்வாழ்த்துக்கள்

Rajeevan Ramalingam said...

ஆண்கள் பதுங்கிட
அப்படி என்ன அவசியமிருக்கிறது // நல்ல கேள்வி ஐயா..! முடிந்தவரை முகம் மறைக்காமல் ‘ஒரிஜினலாய்’ இருப்பதே சிறந்தது.

அப்படி இல்லாமல் முகத்தை மறைக்க நேர்ந்தால், சர்ச்சைக்குரிய கருத்தாடல்களில் சென்று தலையை நீட்டாமல் அமைதியாய் இருப்பதே சிறப்பு.

KILLERGEE Devakottai said...

இது என்னைப் போன்றவர்களுக்கு பொருந்தாது என்பது தெரியும் கவிஞரே நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் (தன் மேல் உள்ள) பயம் தான்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது முகம் மறைத்து காரசாரமாகப் பதிவிடுபவர்கள் குறித்து (அவர்களும் எப்படியும் அதற்கான சரியான காரணம் வைத்திருப்பார்கள்
அதை அறிந்து கொள்ளும் பொருட்டும்)//

நல்லதொரு முயற்சி. பாராட்டுகள். இதற்கு தாங்கள் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே.

-=-=-=-

மேலே தங்களின் ஆக்கத்தில் கூறியுள்ள உதாரணங்கள் சிலவும் மிகவும் அருமையாக உள்ளன. வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

மிகச் சரி
தன் கருத்துக்கு தைரியமாய்
பொறுப்பேற்கச் சங்கடப்பட்டும் இருக்கலாம்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

உதாரணங்களைப் பாராட்டி
உங்களிடமிருந்து ( தான் ) பாராட்டு வரும்
என எதிர்பார்த்திருந்தேன்
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

ஏதோ ஒருவித தயக்கம் சிலரை முகம் காட்டாமல் தடுக்கிறது ஐயா
தம+1

Yaathoramani.blogspot.com said...
Rajeevan Ramalingam //

அப்படி இல்லாமல் முகத்தை மறைக்க நேர்ந்தால், சர்ச்சைக்குரிய கருத்தாடல்களில் சென்று தலையை நீட்டாமல் அமைதியாய் இருப்பதே சிறப்பு.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
அவர்கள் முகம் மூடி எதையோ
சொல்லிப்போக , அதன் தொடர்ச்சியாய்
ஒட்டி மற்றும் வெட்டிக் கருத்திடும்
அடையாளம் உள்ளோர் பாதிக்கப்படுவது
தொடர்வது உண்மை
உடன் வரவுக்கும் அனம் திறந்த
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...
ஏதோ ஒருவித தயக்கம் சிலரை முகம் காட்டாமல் தடுக்கிறது ஐயா//

ஆம் அது எது எனத் தெரிந்து கொள்ளவே
இந்தப் பதிவை எழுதினேன்
அவர்கள் பக்கமும் ஏதோ ஒரு நியாயம்
இருக்கவும் சாத்தியமிருக்கிறது
அதை அவர்கள் சொன்னால்தான் தெரியும்

உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

இராய செல்லப்பா said...

பழக்க தோஷமாகவும் இருக்கலாம்!

இராய செல்லப்பா said...

பழக்க தோஷமாகவும் இருக்கலாம்!

Yaathoramani.blogspot.com said...

Chellappa Yagyaswamy //

மிகச் சரியாகப் புரியவில்லை

Unknown said...

தைரியமாய் கருத்தைச் சொல்ல முடியாதவர்கள் ,முகமூடி போட்டுக் கொள்வது கோழைத்தனம்:)

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //

சரியாகச் சொன்னீர்கள்
நாம் எதிர்பார்த்தவர்களிடம் இருந்துதான்
இன்னும் கருத்து ஏதும் வரவில்லை
வரவுக்கும் மனம் திறந்த
பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

முகம் காட்டாதவர்களை நான் சேர்ப்பதில்லை...பல பிரச்சினைகளை உருவாக இவர்களே காரணம் முகம் அறியாதவர்கள் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

முகநூலில் மட்டுமல்ல வலைத்தளத்திலும் இம்மாதிரி பலரும் இருக்கிறார்களே இது குறித்து நானும்முன்பே ஒரு பதிவெழுதிய நினைவு, தங்கள் கருத்துகள்லேயே நம்பிக்கை இல்லாதவர்களோ

Yaathoramani.blogspot.com said...

கவிஞர்.த.ரூபன் //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...


G.M Balasubramaniam //

நீங்கள் சொல்லுகிற கருத்தன் எனக்கும்
என்றாலும் அவர்கள் பக்கம் நமக்குத் தெரியாத
ஏதோ ஒரு நல்ல காரணம் கூட
இருக்கச் சாத்தியமிருக்குமோ
என்கிற எண்ணத்தில்தான் இதை எழுதினேன்

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

K. ASOKAN said...

கொரில்லா.போர்.என.நினைப்போ

Thulasidharan V Thillaiakathu said...

முகநூலில் முகம் காட்டினாலும் எதுவும் எழுதுவதில்லை...ஆக்டிவாக இருப்பதுமில்லை சமீபகாலமாய்...

Post a Comment