Tuesday, June 6, 2017

"கவிஞர்கள் எல்லாம் பைத்தியங்கள்தான்

"கவிஞர்கள் எல்லாம்
ஒரு வகையில்
பைத்தியங்கள்தான் " என்றார்
நான் விரும்பும் கவிஞர்

நான் குழம்பிப் போய்
"ஏன் அப்படி ? " என்றேன்

"விரும்பிய ஊருக்குப் போகாமல்
கால்கள் வேறு ஊர் போக
மனம் குழம்பாது
இதுவும் முன்பு
வர விரும்பிய ஊர்தான்
இங்கும் வந்த வேலையைப் பார்ப்போம்
என்பவனை என்ன சொல்வாய் " என்றார்

"நிச்சயம் பைத்தியம்தான் "என்றேன்

"தேடிய பொருள் கிடைக்காது
வேறு பொருள் கிடைக்க
மனம் சலிக்காது
இதுவும் முன்பு
வாங்க விரும்பிய பொருள்தான்
என மகிழ்வாய்  வாங்குபவனை
என்ன சொல்லி அழைப்பாய் " என்றார்

"சத்தியமாய் பைத்தியம்தான் " என்றேன்

"இப்போது பாரேன்
நான் விரும்பியது சரியாய் வராது
வேறொன்று மனதில் தோன்ற
மனம் சலிக்காது
இதுவும் முன்பு எழுத நினைத்ததுதான்
இதை ஒழுங்காய் எழுதுவோம்
என எழுதத் துவங்குகிறேன்
என்னை என்ன சொல்வாய் ?"என்றார்

இப்போது எனக்கு
என்ன சொல்வதென்று தெரியவில்லை

15 comments:

KILLERGEE Devakottai said...

இது இறுதிவரை மாறாது கவிஞரே
த.ம.2

Unknown said...

கரு எதுவானால் என்ன சுகப் பிரசவமானால் சரிதானே :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இப்போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை//

எனக்கும்தான்.

ஆனாலும் ஒன்று. எல்லோராலும் உங்களைப்போல மிகச்சிறப்பாக யோசித்து எழுத முடிவது இல்லை.

படைப்பாளிகளான அவர்களே இப்படி அழைக்கப்படுவார்களானால் அதனை வாசிப்பவர்களை என்னவென்று சொல்ல முடியும்?

அதனால் உங்களைத்தவிர மற்ற
கவிஞர்கள் பக்கமோ கவிதைகள் பக்கமோ என்னால் செல்ல முடிவதே இல்லை.

தங்களின் பெயர் காரணப்பதிவுனைப் படித்த பின்புதான் நான் ஒரு தெளிவுக்கே வர முடிந்தது.
என்னால் என்றும் மறக்கவே முடியாத அதற்கான இணைப்பு இதோ:

http://yaathoramani.blogspot.in/2011/03/blog-post_05.html

மேற்படி பதிவினில் நான், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துள்ள பின்னூட்டம் இதோ:

வை.கோபாலகிருஷ்ணன் said...

யாதோ பற்றிய விளக்கம் வெகு அருமையாக உள்ள்து. இதைப்பற்றி எனக்கும் நிறைய அனுபவங்கள் உள்ளன. பிறகு நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பத்திரிகைத் துறையினர் சிலருடன் நான் படாத பாடு பட்டுள்ளேன். அன்று என் படைப்புக்களை புறக்கணித்த அவர்கள், இப்போது தொலைபேசியில் என்னை அழைத்து சிறுகதைகள் அனுப்புங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள். யாருமே எளிதில் ஆரம்பத்தில் அங்கீகாரம் தர மாட்டார்கள்.

உங்களின் இந்தப் பதிவும், இந்த என் பின்னூட்டமும் மற்றவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை அளிக்கட்டும், என்றே இதை எழுதியுள்ளேன்.

வாழ்த்துக்கள்.
March 5, 2011 at 8:28 AM

திண்டுக்கல் தனபாலன் said...

மௌனம் தான் சரி...

பிலஹரி:) ) அதிரா said...

///என எழுதத் துவங்குகிறேன்
என்னை என்ன சொல்வாய் ?"என்றார்//

ஹா ஹா ஹா அவர் மட்டும் விதிவிலக்கா என்ன?:).. அவரும்........ தேன்ன்ன்:).

Yarlpavanan said...

எதிர்பார்த்த பொருளுக்கு
கவிதை அமையாவிட்டாலும்
எதிர்பாராமல் வந்தமைந்த
கவிதையை எழுதலாம்
கைக்கெட்டியதைக் கையாளுபவனும்
கவிஞனே!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

K. ASOKAN said...

உண்மை ஒப்புதல் என்னுடையது

Avargal Unmaigal said...

TM 6 //இப்போது எனக்கு
என்ன சொல்வதென்று தெரியவில்லை//


எனக்கும்தான்

தனிமரம் said...

உண்மை ஒப்புதல்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
மாற்றம் ஒன்ரே மாறும்...சொல்ல வந்த விடயத்தை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Nagendra Bharathi said...

அருமை

G.M Balasubramaniam said...

நிச்சயம் பைத்தியம்தான்

Unknown said...

நாமும் பைத்தியம் தான் நண்பரே!

Rajeevan Ramalingam said...

அப்படிப் பார்த்தால் எல்லோருமே அப்படிதான் சேர் :)

Post a Comment