Sunday, June 18, 2017

பதினாறு வயது உளறல்கள் அல்லது ! விஞ்ஞானக் காதல்!

அவன் அவசரமாய்
அவளுக்குக்  குறுஞ்செய்தி அனுப்பினான்

"இப்போது வேதியல்  வகுப்பில்
உன்னைக் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் "

" என்னைக் குறித்தா?
அதுவும்வேதியல்  வகுப்பிலா ?"
அவள் பதில் செய்தி அனுப்பினாள்

"ஆம்.
தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
பக்கத்தில் இருக்கும் பொருளை
மாறுதலடைச் செய்யும் பொருளை
டீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்
நான் அது நீ என்கிறேன் சரியா ? "
அவன் இப்படிப் பிதற்றினான்

"இங்கு  இயற்பியல்  வகுப்பில் கூட
நம்  எதிர்காலம் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் " என்றாள் அவள்

"இயற்பியல் வகுப்பிலா ?
அதுவும் நம்   எதிர்காலம் குறித்தா "
அவன் அதிசமாய்க் கேட்டான்

அவள் இப்படி செய்தி அனுப்பினாள்
"எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்

 படிக்கிற நேரத்தில் இப்படிச்
செய்தி அனுப்பிக் கொண்டிருந்தால்
எதிர்விளைவாய் நாம்
 நடு ரோட்டில்தான்  இல்லையா  ? "

அவன் பதில் செய்தி அனுப்பவில்லை

15 comments:

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் said...
இனி எப்படி பதில் செய்தி அனுப்புவான். அந்தப் பெண் மிகவும் புத்திசாலி. உங்கள் சிந்தனையோ அருமையிலும் அருமை. கவிதையைப் படித்து முடிக்கையில் இதழ்களில் புன்முறுவல் வருவதை தவிர்க்க முடியவில்லை. அற்புதம்...! தொடருங்கள்...!

Yaathoramani.blogspot.com said...

அகல் said...
அழகாகச் சொன்னீர்கள்... ஆனால் என்ன செய்ய.. அது ஹார்மோன்கள் செய்யும் கலவரமாயிற்றே.. சிலர் கலவரத்தில் சிக்குவதில்லை, பலர் சிக்காமல் இருப்பதில்லை..

ஸ்ரீராம். said...

அழகாய் பதில் பிதற்றினான்!

ஹா.... ஹா... ஹா...

KILLERGEE Devakottai said...

அவன் பதில் செய்தி அனுப்பாததை ரசித்தேன் கவிஞரே...
த.ம

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
ஆகா
ரசித்தேன் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் இதனைச் சேர்க்கலாம் ஐயா, நல்ல பாடம்.

ஆன்மீக மணம் வீசும் said...

குறுஞ்செய்தியை கவிதையாக்கி விட்டீர்கள்.

வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளீர்கள்.

நாம் ஊதுற சங்கை ஊதி விடுவோம். விடியும் போது விடியட்டும் என்று இருக்க முடியவில்லை.

Rajeevan Ramalingam said...

ஹாஹா மிகவும் ரசித்தேன் ஐயா...நகைச்சுவையாக பெரும் தத்துவத்தையே சொல்லிவிட்டீர்கள்.

கிரியா ஊக்கி - அது நீதான் - ஹாஹா

G.M Balasubramaniam said...

அந்தவயதில் கற்பனைகள் தறி கெட்டோடும் அல்லவா

Angel said...

/எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு//ஹாஹா :) ரசித்தேன் அண்ணா ..

பெண் புத்திசாலிப்பெண்தான் ..

கெமிஸ்ட்ரி சிம்பல் ஈக்வேஷனையே வில்லங்கமா எழுதின மாணவர்களும் உண்டு ..இக்கவிதையில் வரும் பெண் போல அறிவுடன் நடந்தா பிரச்சினைகள் வரவேவராது

ராஜி said...

இதுலாம் எங்க உருப்படப்போகுதுப்பா?!

பிலஹரி:) ) அதிரா said...

ஹா ஹா ஹா மிக அருமை:).. இந்த வயதில் இப்படிக் குறுஞ் செய்தி அனுப்பாட்டில்.. எந்த வயதிலயாம் அனுப்புறது:)...

ஆனா இப்படியான பிள்ளைகள்தான் படிப்பிலும் கெட்டித்தனமாக இருப்பார்கள் என்பது என் கருத்து:)

கோமதி அரசு said...

அருமை.

kowsy said...

ரமணி சார் க்கு இதுவும் முடியும். அருமை

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ்ஹ ஆமாம் கெமிஸ்ட்ரி என்றுதானே இப்போது எதற்கெடுத்தாலும் சொல்லுகிறார்கள்!!!!!

மிகவும் ரசித்தோம்...
கீதா

Post a Comment