Tuesday, June 27, 2017

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

காலம் சிரித்தபடி எப்போதும்போல்
நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
பயனற்றதாகிப் போனது
அந்தக் குறிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

ஒரு பார்வையற்றவனின்
உன்னத இசையில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாம் நானே என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனமாயிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள் சுமைதாங்கிகள்
அளவீடுகளின் எல்லையினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழத்தெரிந்தவானாகிப்போக
அதை அறியாதவனே  அற்பனாகிப்போகிறான்

22 comments:

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் அருமை கவிஞரே
த.ம.2

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
பின்னூட்டதிற்கும் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

தலைக்கனம் கவைக்குதவாது என்பதை அருமையாகச் சொன்னீர்கள். வழக்கம்போல தம +1

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
தம+1

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கவனமாயிருந்தும் சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக, உடல்விட்டு திசை மாறிப்போக, ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்//

நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்... நாம் இந்த உலகில் என்றும் சாஸ்வதம் (நிரந்தரம்) என்று.

அந்த நம் நினைப்பும் நாம் ’அது’வாகிப் போகும் வரை மட்டும்தான் நீடித்து வருகிறது.

அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

கோமதி அரசு said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

Unknown said...

அதுவரை ஒரு பெயர் இருந்தது ,அது ஆனபின் பிணம் என்றானது :)

திண்டுக்கல் தனபாலன் said...

// அற்பச் சுமைதாங்கி //

வாழ்வே அவ்வளவு தானே...?

Rajeevan Ramalingam said...

'அது' வாகிப் போகும்வரைதான் எல்லா ஆட்டமும்..!

Rajeevan Ramalingam said...

அருமையான கவிதை ஐயா

Kasthuri Rengan said...

அருமை அய்யா

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...


கரந்தை ஜெயக்குமார் //

.உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //
அருமையான ஆக்கம். பாராட்டுகள்//.

.உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...
அருமையான கவிதை.//.

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...//
// அற்பச் சுமைதாங்கி //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Rajeevan Ramalingam said...
அருமையான கவிதை ஐயா//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Mathu S said...
அருமை அய்யா//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

கையில் கடிகாரம் கட்டியிருந்தால் காலத்தையே கட்டி ஆள்வதாக நினைக்கிறார்கள் சிலர்

Thenammai Lakshmanan said...

nach endru arainthah kavithai. innum biramiththu nikiren.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை யான நச் கவிதை...ரசித்தோம்

Post a Comment