கிழக்கு வெளுக்கத் துவங்கியது
தேவாலயம் கிளம்பிய அந்தோணி
நாட்காட்டியைப் பார்த்தார்
அது 2017 ஜூன் 25 என்றதுமசூதிக்கு
தொழக்கிளம்பிய ராவுத்தர்
நாட்காட்டியைப் பார்க்க
அது ஷவ்வால் ரம்ஜான் 29 என்றது
கோவிலுக்கு
கும்பிடக் கிளம்பிய ஏகாம்பரம்
அதனைப் பார்க்க
ஹேவிளம்பி ஆனி 11 என்றது
நாட்காட்டி அறியாதப்
பறவைகள் எல்லாம்
என்றும்போல
இந்தப் புத்தம் புது காலையை
நன்னாளை
வரவேற்கும் விதமாய்
உற்சாகமாய்
பாடியபடிச் சிறகு விரித்தன
நாளுக்கே காரணமானவன்
ஏதும் அறியாதவன் போல்
என்றும் போல்
ஒளியாய்
சிரிக்கத் துவங்குகிறான்
உலகம் மெல்ல மெல்ல
அழுக்கு உதிர்த்து
வெளுக்கத் துவங்குகிறது
16 comments:
நாளும், கோலும் நல்லோருக்கு ஒன்றே...
த.ம.2
வணக்கம்
ஐயா
சிந்திக்க வேண்டிய வியடயம் நாள் எல்லாம் ஒன்றுதான்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை... அனைத்தும் ஒன்றே...
அழகான கவிதை
நேரத்தைக் கூட மதம் கூறு போடுவது சரியில்லை :)
அடடா, என்னமாய் ஆன்மிகக் களை சொட்டுகிறது உங்கள் கவிதையில்! மனிதனாகப் பிறந்துவிட்டதால் அன்றோ இவ்வளவு வேற்றுமைகளும்! நாமும் ஊர்வனவாய், பறப்பனவாய், அல்லது வேறெந்த ஜீவனாய்ப் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? - இராய செல்லப்பா சென்னையில் இருந்து
அருமை
பார்வைகள் பலவிதம்.
ஒரே நாளினை மனிதர்கள் மட்டும், அவரவர் பிறப்பு, சம்பிரதாய வழக்கங்கள், ஜாதி, மத, இன, மொழிகளால் கூறுபோட்டு வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என்பதை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
சுட்டெறிக்கும் சூரியனும், மனிதனைத் தவிர பிற உயிரினங்களும், மரம் செடி கொடி முதலியனவும், பஞ்ச பூதங்களும் இதையெல்லாம் ஒன்றும் பார்க்காமல் எல்லா நாட்களையும் ஒன்றாக பாவித்து தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து கொண்டு வருகின்றன.
யோசிக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.
நெஞ்சம் தூய்மை என்றால், எல்லா நேரமும் நல்ல நேரமே..!
‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்’
அருமையான சிந்திக்கத் தூண்டும் பதிவு ஐயா.!
விடியும் பொழுது அனைவருக்கும் ஒன்று போலவேதான் விடிகிறது; அவரவருக்கு அவரவர் மதம் – என்பதை அழகாகச் சொன்னீர்கள். ( மன்னிக்கவும். புத்தம் புதுக்காலை > புத்தம்புது காலை என்று இருக்க வேண்டும்)
பொதுவான விடியலைக் கூறிய விதம் அருமை.
ஹா ஹா ஹா அருமை. நமக்குப் புரிந்தாலும் நம்மால் மாற முடிவதில்லையே... ஊறி விட்டோம்ம்:).
எந்நாளும் நந்நாளே எல்லோருக்கும் எல்லோருக்கும் அதேகாலை மாலை தட்பவெப்பம் ஆனால் சிலர் மட்டும் நேரம் காலம் என்று வேறு படுத்துகிறார்களே
நன்று
ஆய்வு நன்று!
Post a Comment