Wednesday, May 9, 2018

வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...

படைப்பாளிக்கு
இது வரமா இல்லை சாபம்தானா ?

முன்னிரவில் விசையுடன்
அடிமனத்திலேயே
மையம் கொண்ட  "அது "

வளர்ந்து நகராது
அல்லது
கரைந்து மறையாது

விசையுடன் அவனை  இம்சிக்க...

அதன்  போக்கை
கணிக்கத் தக்கவனாய் இராது
கவனிக்காத தக்கவானாய் மட்டுமே
இருக்க முடிவதால் ...

கனத்ததை விழுங்கிய
கருநாகமாய்
மெல்ல மெல்ல ஊர்கிறது
அவனது உறக்கத்தையும்  விழுங்கியபடி
இன்றைய இரவும் ..

துணைக்கு யாருமற்று
தானே பிரசவிக்க நேர்ந்த
ஒரு ஜீவனின் அவஸ்தையுடன்
உலாவத் துவங்குகிறான்
பேயாய் இந்த நடு இரவிலும்...

வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய்
இது படைப்பாளிகளுக்கேயான
வரமா இல்லை சாபம்தானா எனும்
விடைதரா கேள்வியைச் சுமந்தபடியும் ...


13 comments:

மனோ சாமிநாதன் said...

நிச்சயம் இது வரம் தான்!
கவிதையும் இனிமை!!

iramuthusamy@gmail.com said...

வேதாளம் சுமந்த விக்ரமாதிதனாய் நல்ல தலைப்பு. நல்ல கருத்து.

KILLERGEE Devakottai said...

ம்...

kankaatchi.blogspot.com said...

மனம் என்று ஒன்று இருக்கும்வரை வரம் சாபமாகும் சாபம் வரமாகும். மனத்தை கடந்தால் எதுவும் இல்லை. அமைதி அமைதி சொல்லில் எழுத்தில் வடிக்க இயலாத ஆனந்தம். அதுதான் நீ. நான் எல்லாம்.

கரந்தை ஜெயக்குமார் said...

நிச்சயமாக
வரம்தான் ஐயா
அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

மிகவும் பிடித்த வரிகள்:

//துணைக்கு யாருமற்று
தானே பிரசவிக்க நேர்ந்த
ஒரு ஜீவனின் அவஸ்தையுடன்
உலாவத் துவங்குகிறான்
பேயாய் இந்த நடு இரவிலும்...//

-o-

முதலில் வரமாக ஆரம்பித்ததுதான்.

நாளடைவில் நாலு-ஐந்து வருடங்களில் சாபமாக மாறமும் செய்கிறது.

’வேதாளத்தை சுமந்த விக்ரமாதித்தன்’ கதையே தான்.

புலிவாலைப் பிடித்த சிலரால் அதனை விடவும் முடியாமல், தொடர்ந்து பிடித்துக்கொள்ளவும் இயலாமல் கஷ்டமாகத்தான் உள்ளது.

மொத்தத்தில் இரவுத் தூக்கம் போச்சு என்பதே இதில் எனக்குக் கிடைத்ததோர் மறக்கமுடியாத பரிசு.

பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள் + நன்றிகள்.

அன்புடன் VGK

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வரமாய் சில சாபங்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வரமாய் சில சாபங்கள்

மணிவானதி said...

ஆகா அருமை. ஒட்டுமொத்த படைப்பாளர்களின் ஒற்றைவரி. வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வரம் சாபம் என இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம்.

Anonymous said...

Hi, I do believe this is an excellent site. I stumbledupon it
;) I may come back once again since I book marked it.
Money and freedom is the best way to change, may you be rich
and continue to help others.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை ரசித்தோம் கடைசி வரிகள்..

கீதா

Post a Comment