Monday, August 6, 2018

சாய்வு நாற்காலியில் இருந்து ...

இளமையில்
நல்லவைகள் எதைச் செய்யவும்
வரையரை வைக்காதீர்கள்

இளமையில்
நல்லவைகள்  எதை இரசிக்கவும்
எல்லைகள் வகுக்காதீர்கள்

ஏனெனில் முதுமையில் ...

நினைத்ததையெல்லாம்
முன்போல உங்களால்
சொல்லச் சாத்தியமில்லை

சொல்ல முடிந்தவைகள் மட்டுமே
நினைவுகளாய்...

விரும்பியதையெல்லாம்
முன்போல் உங்களால்
உண்ணச் சாத்தியமில்லை

உண்ணமுடிந்தவைகள்  மட்டுமே
விருப்பங்களாய்...

நண்பர்களையெல்லாம்
முன்போல் உங்களால்
சந்திக்கச் சாத்தியமில்லை

சந்திக்க முடிந்தவர்கள் மட்டுமே
நண்பர்களாய்...

இலட்சியங்களையெல்லாம்
முன்போல் உங்களால்
அடையச் சாத்தியமில்லை

அடைய முடிந்தவைகள் மட்டுமே
இலட்சியங்களாய்...

ஆம் ...

நினைத்ததையெல்லாம்
மிகச் சரியாய்ச் சொன்னதும்..

விரும்பியதையெல்லாம்
அதிகம் இரசித்து  உண்டதும்

நண்பர்களையெல்லாம்
தவறாது தினமும் சந்தித்ததும்

இலட்சியங்களையெல்லாம்
விடாதுத் தொடர்ந்து அடைந்ததுமே

முதிர்ந்த  நிலையில்
மனதுக்கு இதம் தருவதாய்..

தொடர்ந்து இயங்குவதற்கு
உடலுக்கு உரம் தருவதாய்...

வாழ்ந்த,
வாழும் வாழ்க்கைக்கு

முழுமையான அர்த்தம் தருவதாய்...
இருக்கச் சாத்தியம்  என்பதால் ..

இளமையில்
நல்லவைகள் எதைச் செய்யவும்
வரையரை வைக்காதீர்கள்

இளமையில்
நல்லவைகள்  எதை இரசிக்கவும்
எல்லைகள் வகுக்காதீர்கள்

9 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல ஒரு வாழ்வியல் அறிவுரை கூறும் கவிதை.

நல்ல செயல்களையெல்லாம் செய்து விட்ட திருப்தியை மனதாற ரசித்து வாழ்வின் பின பகுதியில் நிம்மதியை பெறுவோம்.

/வாழ்ந்த,
வாழும் வாழ்க்கைக்கு

முழுமையான அர்த்தம் தருவதாய்...
இருக்கச் சாத்தியம் என்பதால் /

இளமையில்
நல்லவைகள் எதைச் செய்யவும்
வரையரை வைக்காதீர்கள்

இளமையில்
நல்லவைகள் எதை இரசிக்கவும்
எல்லைகள் வகுக்காதீர்கள்.

அருமையான, உண்மையான வரிகள். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//முதிர்ந்த நிலையில்
மனதுக்கு இதம் தருவதாய்..

தொடர்ந்து இயங்குவதற்கு
உடலுக்கு உரம் தருவதாய்...

வாழ்ந்த,
வாழும் வாழ்க்கைக்கு

முழுமையான அர்த்தம் தருவதாய்...
இருக்கச் சாத்தியம் என்பதால் .. //

ஆம். முதுமையில் பசுமையான பழைய நினைவுகளை அசைபோட்டபடி மட்டுமே வாழ வேண்டியுள்ளது.

வயதாக வயதாக, சாய்வு நாற்காலியில் இருக்கும்போது, கூடவே மறதிகளும் ஏற்பட்டு விடாமல், நல்ல நினைவுகளுடனும் இருக்கவும் கொடுப்பிணை வேண்டும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

காலைகளின் நினைவு சாயங்காலங்களில்... அதுவும் ஒரு சுகம்தான்.

கோமதி அரசு said...

வாழ்ந்த,
வாழும் வாழ்க்கைக்கு

முழுமையான அர்த்தம் தருவதாய்...
இருக்கச் சாத்தியம் என்பதால் ..

இளமையில்
நல்லவைகள் எதைச் செய்யவும்
வரையரை வைக்காதீர்கள்

இளமையில்
நல்லவைகள் எதை இரசிக்கவும்
எல்லைகள் வகுக்காதீர்கள்//

உண்மையான வரிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

மனோ சாமிநாதன் said...

யதார்த்தத்தை மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!
சகோதரர் வை.கோ சொல்வது போல சாய்வு நாற்காலியில் அமர்ந்து கடந்த கால நினைவலைகளை ரசிப்பதற்கும் கொடுப்பினை வேண்டும்!

G.M Balasubramaniam said...

முதுமையில் நினைவுகச்ளின் இதம்தரும் வருடல் இருக்கும் ரசிக்கும் மனப்பான்மை இளமையில் வர வேண்டும்

K. ASOKAN said...

மிகவும் நன்று பாராட்டுகள்

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நினைவோட்டங்களை...

Post a Comment