Tuesday, January 14, 2020

பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

(  அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )

19 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

கோமதி அரசு said...

ஜாதி மதம் கடந்து
//உழைப்பின் பெருமை சாற்றும்
தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்//

அருமை.
பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

ஏன் நன்றியையும்தெரிவித்துக் கொள்கிறேன்

ராமலக்ஷ்மி said...

நன்று. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

ஒவ்வொரு வாசகமும் அருமை.
முத்தாய்ப்பாக,

/நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது/

என்ற வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

தங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி...வாழ்த்துக்களுடன்

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் உற்சாகமூட்டும் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளுக்கு நன்றி.  இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய உழவர் தின வாழ்த்துகள்...

கீதமஞ்சரி said...

\\தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்\\ உண்மை ஐயா. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

பொங்கல் நாளில் நல்லதொரு கவிதைப் பகிர்வு... மகிழ்ச்சி ஜி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நாள் நல்வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது...மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Post a Comment