Saturday, January 1, 2022

தொடர்ந்து எழுதும் பதிவர்களுக்காக..

 


சமபந்திதான் ஆயினும்
ருசியான சத்தான சாத்வீகமான
உணவுதான் ஆயினும்..
சரிசமமாகப் பறி,மாறப்பட்டதே ஆயினும்

அள்ளியபடி பல கைகளும்
துழாவியபடி சில கைகளும்
இருக்கக் காரணம்
நிச்சயம் கைகளில்லை

மாறாக
பசித்த வயிறும்
ஏற்கெனவே
அஜீரணத்தில் அவதியுறும் வயிறும் என்பது
பறிமாறுபவனுக்குப் புரியும்..

எனவே
பறிமாறுபவன் தொடர்ந்து
பறிமாறுவதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

நியாயமானதுதான் ஆயினும்
நடுநிலையில் பயன்கருதி எளிமையாகச்
சொல்லப்பட்டதுதான் ஆயினும்

இரசித்துச் பலரும்
கண்டும் காணாதபடிச் சிலரும் 
இருக்கக் காரணம்
நிச்சயம் படைப்பில்லை

மாறாக
பரிசீலித்தேற்கும் மனநிலையும்
ஏற்கெனவே
கொள்கைகளால் நிரம்பிய மனமும் என்பது
படைப்பாளிக்கும் தெரியும்

எனவே
படைப்பாளி தொடர்ந்து
படைப்பதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

பதிவுலகில் தொடர்ந்து எழுதும்
நமதருமைப் பதிவர்கள்  போலவே....

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவர்களுக்கு வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து பகிருங்கள்....

Jayakumar Chandrasekaran said...

ஐயா தமிழ்மணம் indli வலைச்சரம் போன்ற திரட்டிகள் காணாமல் போனதோடு பல பதிவர்களும் பதிவுலகில் இருந்து மறைந்துவிட்டனர்.

 Jayakumar

Thulasidharan V Thillaiakathu said...

ஒப்பீட்டுடன் சொல்லியிருக்கும் கருத்து அருமை

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ.

புத்தாண்டு வாழ்த்துகளும்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கருத்து வருகிறதோ இல்லையோ தொடர்ந்து ஆர்வத்துடன் எழுதும் பதிவர்கள் அனைவரையும் வாத்துவோம்.

கீதா

மாதேவி said...

படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

சில பின்னூட்டங்கள் இந்தப் பதிவுக்கு காரணமாயிருக்கக் கூடும்!  படைப்பவர் ஒரு கருத்தில் படைத்தாலும், படிப்பவர் தன் அனுபவ, மற்றும் சொந்த மனநிலையில் அதைப் படிக்கிறார்; உணர்கிறார்!

பா.சதீஸ் முத்து கோபால் said...

நன்றி. கடந்த 11 ஆண்டுகளாக வலைப்பூ எழுதி வருகிறேன். நிறைய சுற்றுச்சூழல் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறேன். ஆனால் வாசிப்பவர்கள் குறைவே...

Post a Comment