Wednesday, January 26, 2022

உயர்ந்த மனிதர்..

  இன்று ஜனவரி 27தமிழ் எழுத்தாளர்/திரைப்பட இயக்குனர் 

கோமல் சுவாமிநாதன் 

பிறந்த நாள்.


பிறப்பு:ஜனவரி 27, 1935

இறப்பு:அக்டோபர், 1995


        தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர்.

       முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

       திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். 

       இவரது எழுத்தில் கே.பாலச்சந்தரால் இயக்கப்பெற்ற தண்ணீர் தண்ணீர் முக்கியமான திரைப்படம் ஆகும்.

        கோமல் சுவாமிநாதன் 1935ல் காரைக்குடியில் பிறந்தார். 

        இவரது பெற்றோர் ஆடுதுறைக்கு அருகே கோமல் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். 

       1957 ல் நாடக ஆசையால் பெற்றோருடனேயே ஊரைவிட்டு வந்து சென்னையில்

 எஸ். வி. சகஸ்ரநாமத்தின் நாடக்குழுவில் சேர்ந்தார்.

       நாடகமே சிந்தனை, நல்ல சமூகமே லட்சியம்’ என்று வாழ்ந்தவர் கோமல் சுவாமிநாதன். 

        திரைப்பட இயக்குநர், நாடகவியலாளர், சமூகச் செயல்பாட்டாளர், பத்திரிகை யாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட அவரது அனுபவத்தின் கைவண்ணம் அவரத வசனங்களில் தெறிக்கும்.

        1957 முதல் இறுதி வரை சென்னையில் வாழ்ந்தார். வாழ்க்கையின் கடைசியில் கோமல் முதுகெலும்புப் புற்றுநோயால் அவதிப்பட்டார்.

        ஆனால் கடைசிக்காலத்தில் அவர் இமயமலைக்குச் சென்றுவரவேண்டும் என்று விரும்பினார். அவரது குடும்பம் சம்மதிக்கவில்லை. உடலை வதைக்கும் கொடும் வலியுடன் கோமல் இமயத்துக்குக் கிளம்பிச்சென்றார். பத்ரிநாத்துக்கும் கேதார்நாத்துக்கும் கைலாயத்துக்குமாக நாற்பதுக்கும் மேல் கிலோமீட்டர்களை அவர் நடத்தே கடந்தார். அந்தப்பயணம் பற்றி அவர் சுபமங்களாவில் எழுதினார். 


       இவரது படைப்புகள்:

சன்னதித் தெரு, 1971,

நவாப் நாற்காலி, 1971 (சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் படமாகியது),

மந்திரி குமாரி, 1972,

பட்டணம் பறிபோகிறது, 1972,

வாழ்வின் வாசல், 1973,

பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),

ஜீஸஸ் வருவார், 1974,

யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),

அஞ்சு புலி ஒரு பெண், 1976,

கோடு இல்லாக் கோலங்கள், 1977 (இவரால் முதலில் "இலக்கணம் மீறிய கவிதைகள்" என வழங்கப் பெற்றது),

ஆட்சி மாற்றம், 1977,

சுல்தான் ஏகாதசி, 1978,

சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் படமாகியது),

தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),

ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

நள்ளிரவில் பெற்றோம், 1984,

இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

கறுப்பு வியாழக்கிழமை, 1988,

நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

கிராம ராஜ்யம், 1989,

மனிதன் என்னும் தீவு, 1989,

அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,


           இவர் பணியாற்றிய மற்ற படைப்புகள்:


புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

டாக்டருக்கு மருந்து,

கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )

டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் "கற்பகம் வந்தாச்சு" என்ற பெயரில் படமாகியது),

அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)

அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)

கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)

என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது)


        தமிழ் நாடக உலகின் முத்திரை படைப்பாளி கோமல் சுவாமிநாதன் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  மரணம் அடைந்தார்.

( நிஜநாடக இயக்கத்தின் செயலாளராக நான் இருந்த நேரத்தில் கோமல் அவர்களுடன் கொஞ்சம் தனிப்பட்டு நெருங்கிப் பழகும் வாய்ப்பிருந்தது..அந்த உரிமையில் உண்மையில் தண்ணீர் தண்ணீர் சினிமாவுக்கு சிறந்த திரைக்கதை என தேர்ந்தெடுக்கப் பட்டது தங்களுக்கு உடன்பாடா என்றேன்..அவர் நாசூக்காக பதிலை தவிர்த்துச் சிரித்தார்..பின் உங்கள் கருத்தென்ன என்றார்.நாடகத்தில் தண்ணீர் பிரச்சனையே கடைசி வரை மையக் கருவாக இருந்தது..சினிமாவில் அது சரிதா பிரச்சனையாக திசை மாறிவிட்டது என்றேன்..லேசாக ஒப்புக் கொள்வதுபோலவும் தலையாட்டி விட்டு உரிமையை கொடுத்துவிட்டோம் அதற்குப் பின் அது குறித்து விமர்சிப்பது சரியல்ல என்றார்..தூய வெள்ளை ஆடை உடுத்தி இருந்த அந்த உயர்ந்த மனிதர் அந்தப் பதிலுக்குப்பின் இன்னும் உயர்ந்து தெரிந்தார்..)

4 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

தமிழ் எழுத்தாளர்/திரைப்பட இயக்குனர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்களைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். அனைத்தும் படித்து தெரிந்து கொண்டேன். அவரின் பிறந்த நாளுக்கு என் வாழ்த்துகளும், வணக்கங்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொகுப்பு அருமை...

PUTHIYAMAADHAVI said...

சரிதாவின் தண்ணீர் பிரச்சனை! ஆஹா..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான தொகுப்பு சுருக்கமாக சிறப்பாக இருந்தது!

Post a Comment