Friday, January 7, 2022

ஒதுக்கீடு அரசியல்..

 அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பாணையும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், 10 சதவீதம் இடஒதுக்கீட்டை பெறுவதற்கான தகுதி வரையறை குறித்து மார்ச் 3வது வாரத்தில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசிற்கு நன்றி தெரிவிக்க மனமில்லாத ஸ்டாலின், ஏதோ தனது கட்சியும் தானும் மேற்கொண்ட பெரிய முயற்சியால் தான் உச்சநீதிமன்றம் மூலமாக இது சாத்தியமானது போல் தன்னையும் தன் கட்சியையும் பாராட்டி கொள்கிறார். இதிலும் பொருளாதார ரீதியில் 10 ஒதுக்கீடு உறுதியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அனைத்து பிரிவினருக்கும் பொதுவான முதல்வர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரராக ஆக முடியாது, 


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தயாரித்த அம்பேத்கார் அவர்களே இந்தியாவில் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு நபர் இந்தியாவின் உயர்ந்த பதவி பெற்று விட்டால் தாழ்த்த பட்டவர்களுக்கான சலுகைகளை விடுவித்து விடலாம் என்ற கூறி உள்ளார் ஆனால் இதை யாரும் கண்டு கொள்வதே இல்லை.  நம் நாட்டில் உள்ள ஒதுக்கீட்டு முறையில் குறைபாடுகள் உண்டு. இட ஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் குடும்பமே மீண்டும் மீண்டும் பயனடைய கூடிய நிலை உள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு தலைமுறைக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற நிலை வரவேண்டும். அப்பொழுது தான் அந்த பிரிவில் உள்ள எல்லோரும் பயனடைவர். இல்லை என்றால் பிற்படுத்தபட்ட பிரிவிலும் ஒரு சிலர் மட்டுமே முன்னேற்றம் அடைவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடுவதாக சொல்லுபவர்கள் கூட இவர்கள் முன்னேறுவதை விரும்புவதில்லை....(படித்ததும் பகிரத் தோணியது..)

2 comments:

ஸ்ரீராம். said...

சில விஷயங்களை பேசவே முடியாது.

திண்டுக்கல் தனபாலன் said...

சனாதன சாக்கடை ஒழிந்தால் அனைத்தும் நலமாகும்...

Post a Comment