Wednesday, January 19, 2022

....னால்..

 தன்னுள் அடைக்கலமான

ஜீவத் துளியினை

உயிரெனக் காக்கும்

தாயென மாறிப் போனால்....


கூட்டில் உயிரைவைத்து

குஞ்சுகளுக்கென

பலகாதம் கடக்கும்

பறவையென மாறிப்போனால்...


இன்னும் இன்னும் என

மிக மிக நெருங்கி

ஓருடலாகத் துடிக்கும்

காதலர்கள் ஆகிப் போனால்..


விட்டு விலகி

விடுதலையாகி

தாமரை இலைத் துளிநீர்

தன்மையடைந்து போனால்..


வேஷம் முற்றும் கலைத்து

ஜனத்திரளில்

இயல்பாய் கலக்கும்

மன்னனாகிப் போனால்..


தானே யாவும்

தானே பிரம்மன் என்னும்

தன்னம்பிக்கை மிக்க

தனியனாகிப் போனால்...


மொத்தத்தில்

தன்னிலை விடுத்து

கூடுவிட்டு கூடுபாயும்

வித்தையறிந்து போனால்..


காணும் யாவும்

கருவாகிப் போகவும்

எழுதும் எல்லாம்

கவியாகிப் போகவும்

நிச்சயம் சாத்தியம் தானே ?

5 comments:

ஸ்ரீராம். said...

நீங்கள் சொன்னால் சரிதான்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான கவிதை. ஒவ்வொரு உணர்விலும், முழுமையான ஈடுபாடு வரும் போது, எல்லாமே கவித்துவந்தானே..! ஒவ்வொரு நிலையையும் மிக அழகாக சுட்டிக் காண்பித்து சொல்லியிருக்கும் உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வெங்கட் நாகராஜ் said...

காணும் எல்லாம் கரு.... எழுதும் எல்லாம் கவிதை.... சிறப்பான சிந்தனை. ஒப்பீடுகள் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சிந்தனையில் விளைந்த கவிதைகள்.....

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை நன்று. காணும் எல்லாம் கருவாகி கவிதையாவது ஒரு சிலருக்கே சாத்தியமாகிறதோ!

கீதா

Post a Comment