Monday, June 19, 2023

கட்டுப்படாததுள் கட்டுப்படுதல்..

 பகலும் இரவும்

நம் கட்டுப்பாட்டில் இல்லை
பகலில் இரவில்
எதைச் செய்வது என்பது மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

பருவமும் காலமும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பருவத்திற்கும் காலத்திற்கும்
தகுந்தார்ப்போல நம்மை
தகவமைத்துக் கொள்ளும்
அதிகாரம் மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஆயுளும் முடிவும்
நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
ஆயுள் முடிவதற்குள்
எதைச் செய்து முடிப்பது என்பதை
முடிவு செய்யும்
அதிகாரம் மட்டுமே
நம் வசம் உள்ளது

வார்த்தைகளும் அதற்கான
அர்த்தங்களும் நம் கட்டுப்பாடில் இல்லை
அதனை முழுமையாகப் புரிந்து
மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....

3 comments:

Jayakumar Chandrasekaran said...


வார்த்தைகளும் அர்த்தங்களும் கட்டுப்பாட்டில் தான் உள்ளன மழலைகளுக்கு. அவர்கள் சொல்லும் வார்த்தைகள் அவர்கள் புரிந்து கொண்ட அர்த்தப்படி.

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்வன்மை முக்கியம்...

Nanjil Siva said...

மிக அருமையான சிந்தனை...
www.scientificjudgment.com/

Post a Comment