அந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்
அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்
அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப் பயந்து
படகுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்கள்
படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்
5 comments:
வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. படித்து ரசித்தேன்.
/படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்/
உண்மை. பயம் உல்லாசத்தை, அதன் விளைவாக மனதுக்குள் ஆரவாரமாக பொங்கி வரும் உற்சாகத்தை போக்கி விடும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிரமம்தான்.
உண்மை.அருமை
துளசி டீச்சர் அலாஸ்கா பயணம் சென்று வந்தது பற்றிய சமீபத்திய பதிவுகள் நினைவில் வந்தன.
Jayakumar
நீச்சல் தெரிந்து படகில் பயணித்தால் நல்லது தான். தெரியவில்லை என்றாலும், படகு செலுத்துவன் மீது நம்பிக்கை இருந்தாலும் போதும். மகிழ்ச்சியாக பயணத்தினை அனுபவிக்கலாம்.
Post a Comment