Monday, November 8, 2021

சிங்காரச் சென்னையும் ஐப்பசித் துயரும்..

.


மன்னனின் அலட்சியத்தால்

கணவனை இழந்த கண்ணகி

தலைவிரி கோலமாய்

அடக்கவொணோ ஆக்கிரோசமாய்

மதுரை வீதி அலைந்த நிலையாய்..


மக்களின் அலட்சியத்தால்

தான் நடந்த வழிகளையும்

தங்கி வாழ்ந்த குளம் குட்டைகளையும்

இழந்த மழைநீர்

சென்னை வீதிகளில்

வெறிபிடித்து அலைகிறது...


ஒவ்வொரு ஆண்டும்

முறையாய் அதனை 

ஆற்றுப்படுத்த முயலாது

தலைமுடிபிடித்து தள்ளுதல் போல்

அலட்சியமாய் கடத்த முயல்வதால்


தொலைந்த குழந்தையைத் தேடி

பித்துப்பிடித்தலையும் தாயாய்

மீண்டும் மீண்டும் அது 

கூடுதல் பலம் சேர்த்து வருகிறது

மிக மிக ஆக்ரோஷமாய்....


அதற்கான முறையான வழிகாட்டாது

இருந்து போக இடம் கொடாது

சாமர்த்தியமாய் திரிகிற வரை

சிங்காரச் சென்னைக்கான

இந்த ஐப்பசித் துயரத்திற்கு

விடியல் என்பது கிடையாது


குற்றமுணர்ந்து நீதி வழங்கிய

பாண்டிய மன்னனாய்

நாமும் தவறை உணர்ந்து

திருந்தாத வரையில்

சென்னைக்கான இந்த ஐப்பசிச் சாபத்திற்கு

விமோசனம் என்பதே கிடையாது

Sunday, November 7, 2021

அறிவோம்...பகிர்வோம்

 1. The *STOMACH*

     is injured when

     you do not have

     breakfast in the

     morning.

காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.


2. The *KIDNEYS*

     are injured when

     you do not even

     drink 10 glasses

     of water in 24

     hours.


தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.


3. *GALLBLADDR* 

    is injured when

    you do not even

    sleep until 11

    o'clock and do not

    wake up to the

    sunrise.


இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.


4.  The *SMALL*

     *INTESTINE* is

      injured when you

      eat cold and stale

      food.

மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.


5.  The *LARGE*

     *INTESTINES* are

      injured when you

      eat more fried

      and spicy food.


அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.


6.  The *LUNGS* are

      injured when you

      breathe in smoke

      and stay in

      polluted

      environment of

      cigarettes.

புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும். 



7. The *LIVER* is

     injured when you

     eat heavy fried

     food, junk, and

     fast food.


துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு. 


8. The *HEART* is

     injured when you

     eat your meal with

     more salt and

     cholesterol.


அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும். 


9. The *PANCREAS*

     is injured when

     you eat sweet

     things because

     they are tasty and

     freely available.


அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும். 


10. The *Eyes* are

       injured when you

      work in the light

      of mobile phone

      and computer

      screen in the

      dark.


இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும். 


11. The *Brain* is

       injured when you

       start thinking

       negative

       thoughts.


எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும். 


12. The *SOUL* gets

       injured when you

       don't have family

       and friends to

       care and share

       with you in life

       their love,

       affection,

       happiness,

       sorrow and joy. 


நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.


     *All these body parts are NOT available in the market. நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*


 So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.


EFFECTS OF WATER      

தண்ணீரின் அவசியம்.             

💐 We Know Water is 

       important but never 

       knew about the 

       Special Times one 

       has to drink it.. !!

தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம். 


       Did you???  உங்களுக்குத் தெரியுமா???


 💦 Drinking Water at the 

       Right Time ⏰ 

       Maximizes its 

       effectiveness on the 

       Human Body;

சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.


       1⃣  1 Glass of Water 

              after waking up -

             🕕⛅ helps to 

              activate internal 

              organs..

காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும். 


       2⃣  1 Glass of Water 

              30 Minutes  🕧 

              before a Meal - 

              helps digestion..

உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது. 


       3⃣ 1 Glass of Water 

              before taking a 

              Bath 🚿 - helps 

              lower your blood 

              pressure.

குளிப்பதற்கு முன்னர் ஒஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 


       4⃣ 1 Glass of Water 

              before going to 

              Bed - 🕙 avoids 

              Stroke  or Heart 

              Attack.

இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.


      'When someone 

       shares something of 

       value with you and 

       you benefit from it, 

       You have a moral 

       obligation to share it 

       with others too.'

So..., DO yours!..


யாராவது நமக்கு ஏதாவது செய்தியைப் பகிர்ந்து, அதனால் நாம் பலனடைந்தால் அத்தகவலை மற்றவர்களுக்கும் பகிருவது நமது தார்மீகப் பொறுப்பாகும். எனவே நீங்களும் உங்களது பங்கைச் செய்யுங்க.....

Saturday, November 6, 2021

படித்துப் பதறினால்..உடன் பகிரத்துடித்தால் ..நீங்களும் நம் இனமே

 வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? - நேர்மையான  அலசல் !

கொரனா வந்து 3 மாதங்களாகிவிட்டது......

அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்......முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்... இதற்கு நடுவில் கொரனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு.....வேலையிழந்தோர் பல லட்சம் ......


இதற்கு பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தேடியுள்ளேன்...


1. மது..

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது... தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்... உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகாரர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது... குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரமோ செய்ய முடிவதில்லை.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை... அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்... வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று...

இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும், இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூக விரோதிகளாகவும் உருவாகும் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...


2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்... மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.


3. நூறுநாள் வேலை..


இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை... ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்.. வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...


4. இலவசங்கள்...

அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..


5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்.. அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை... 


6. ஆக்கிரமிப்பு இடமும் கோடி ரூபாய்க்கும் மேல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


இத்தகைய காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது...  சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்.. 10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பள பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்ததாக சொல்லுவார்கள்..


தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்... ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது... தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுனர்கள் ஒருநாளைக்கு பெறும் ₹850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட வடநாட்டவர்கள் ...... 2 மணிநேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்கு செய்கிறார்கள்.. தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்... 


இதுதான் பெயிண்டர், ஆசாரி, பிளம்பர், எலக்ட்ரீசியன்  வேலைகளுக்கும்... 


நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை... சொல்லப்போனால் இங்கு உள்ள 100% பானிபூரி வண்டிகளில்  30% கூட வட இந்தியர்களுடையதல்ல.. 70%க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்... 


கடைசியாக..


நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்... இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசுகளே சாராயத்தை விற்று லாபத்தை தேடுவதுதான் உச்சபச்ச கொடுமை...


கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள்  எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப்பிழைக்கும்...


ஆம்..


#தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு# என்னவாயிற்று தமிழர்களுக்கு?


 பணப்புழக்கம்.

ஏன் இங்கு இல்லை.


இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்கு காரணம் ஏன் எது?


தமிழர்கள்  உடல் உழைப்பை விரும்புவதில்லை.... அதோடு சாராயம் மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


ஒரு நண்பர் கீழ் கண்டவாறு கூறினார் .

நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன், வண்டி வாகனங்கள் இதையெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள், இப்பொழுது வேலை செய்வது  இல்லை, முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உடல் உழைப்பு தந்து தனது பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்... விரைவில் தமிழனும் பிச்சை எடுப்பான் அன்று புரியும்.


ஹார்டுவேர்ஸ், பெயின்டர்கள் கார்பெண்டர்,பெரிய ஆள் ஹெல்பர்கள் ,பிட்டர்கள், டெய்லர்கள் , மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர் , மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள்.


தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர் அவரிடம் பேசினோம் அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிறுகிறுத்தது,


மாதம் மாதம் 10,000.(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னார் அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன் .


வந்தப்பின்தான் யோசித்தேன் இந்த ஒருவர் மாதம் 10,000.அனுப்புகிறார் ,இப்படி 10.பேர் அனுப்பினால் #ஒருலட்சம் 


நூறுபேர் அனுப்பினால் # பத்து லட்சம்


ஆயிரம் பேர் அனுப்பினால் # ஒரு கோடி 


பத்து லட்சம் பேர் அனுப்பினால் #  ஆயிரம் கோடி 


மனம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது முதலில் இவரின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன். தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு

 #திருப்பூரில்  மூனு லட்சம் பேரும் #கோவையில்_ஏழுலட்சம் பேரும் 

#சென்னையில்_ இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள் அப்போ சேலம் ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்துபோன நான் , சென்னை ,கோவை, திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து , கணக்கு பார்த்தேன் மொத்தம் முப்பது லட்சம்பேர் ஒருவர் மாதம் மாதம் பத்தாயிரம் என்றால் 30லட்சம் பேர்க்கு கணக்கு போட்டேன் #மூனாயிரம்கோடி எனக் காட்டி விட்டு கால்குலேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது .


மாதம் மாதம் 3,000 கோடி என்றால் வருடத்திற்கு 36,000 கோடி இது அனைத்தும் #தமிழ்நாட்டில் #புழக்கத்தில் இருந்தால், அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு தமிழக மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப்பணம் #வடமாநிலங்களில் புளங்கிக் கொண்டிருக்கிறது .அங்கே இருக்கும் மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது .


இது வெறும் தமிழகத்தின் மூனு மாவட்டக் கணக்கு ,மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும். வடமாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து  கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி மயக்கம் வந்து மூர்ச்சையாகி இறந்தாலும்  இறந்துவிடுவோம். 


இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கணக்கெடுத்து அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை.


இன்னொரு பிரச்சினை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம் கைத்தொழில், எல்லாவகையான சிறு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது . அதனால் லட்சக்கணக்கான பொருட்கள் அதாவது, உளி , சுத்தியல் ஆரம்பித்து  மருத்துவர் போடும் ஊசி வரை. அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில் அது ஒரு தனி கதை.


சத்தமின்றி யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும் உழைப்பில்லாமலும் இந்த மாபெரும் பொருளாதார போராட்டத்தில் தமிழன் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது இதை தமிழன் எப்போது உணர்வது.?. 


மிகவும் கொடுமையானது ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர்கைகளில் சென்று கொண்டுள்ளது, களை எடுத்தல், அறப்பு அறுத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள் இனி என்னாகும் யோசியுங்கள்.


பட்டாலும் கெட்டாலும் வருந்தாத திருந்தாத தமிழன் இருக்கும்வரை தமிழனக்கு எதிரான இந்தப் பொருளாதாரப்போராட்டம் தொடர்ந்து நாம் பிச்சைக்காரர்கள் மாதிரி வாழ வேண்டும். இந்த பிச்சைக்கார நிலைமையில் அந்நிய சக்திகளின் தேசவிரோத நடவடிக்கைகளுக்கும் நம் தமிழர்கள் விலை போகிறார்கள். #தமிழா இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் குடியிருப்பு காலி மது பாட்டில்களால் நிரம்பி இருக்கும் அது உன் கண்களுக்கு தெரியாது உன்னால் தொடவும் முடியாது,  பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்.?.


வாழ்க தமிழ். தமிழ்நாடு. தமிழ் மக்கள்.

-------=====-------

 எனது நண்பரிடம் இருந்து எனக்கு வந்த பதிவு. மனம் சங்கடப்பட்டது. பகிரத் தோன்றியது பகிர்ந்தேன். 

*இது முற்றிலும் உண்மை*

Friday, November 5, 2021

நீட் குறித்து...நீட்டாக ஒரு பதிவு..

 *திராவிட கட்சிகளின் பொய்களைப் பொடிப் பொடியாக்கும் NEET முடிவுகள்:* 


மேடைகளில், தொலைகாட்சி. விவாதங்களில் , ராஜன் குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களைப் பொடிப் பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட் முடிவுகள்.* 


 பொய்# 1:

 நீட் தேர்வு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?. 


முடிவுகள் சொல்லும் உண்மை: 


 *இந்தாண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநில போர்ட்களில் படித்தவர்கள்.* 


பொய்# 2:

 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.


 முடிவுகள் சொல்லும் உண்மை:


 *திருச்சியில் மட்டும், அரசு நடத்திய பயிற்சி வகுப்புகளில்  பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.* 


 பொய்#3

 அரசுப் பள்ளி மாணவர்கள்  முதல் முறையில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது.


முடிவுகள் சொல்லும் உண்மை:  *அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* 

பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).

ஹரீஷ் குமார் (ஏழுமலை  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373) 

எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351) 

 *ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.* 

 *மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* 


பொய்#4 

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு.


முடிவுகள் சொல்லும் உண்மை: 


 கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறிய  பெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றுள்ளார்.* 

அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

கடந்த ஆண்டு விவசாயக் கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.


பொய்# 5:

தமிழக மாணவர்களுக்கு  நீட் தேர்வு கடினமானது.


முடிவுகள் சொல்லும் உண்மை:  *கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி  பெற்றுள்ளனர்.* 

 

 *கடந்த ஆண்டு : 57 216.* 

 *இந்த ஆண்டு: 58,922* 


அனைவரும் அறிய வேண்டியது:


 *முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.* 


செய்ய வேண்டியது: #1 


நீதிமன்றத்தில் இந்த தரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவ வேண்டும்.


#2  *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.* 


செய்வார்களா?


இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக்காட்சிகள் அலசுவார்களா?


 *சகோதரர்களே!!!* 

 *நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்* .🙏🙏

நன்றி...... 


மேலும் தகவல் களுக்கு

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா- !!!!


மேற்கண்ட நீட்  பற்றிய எனது முகநூல் பதிவு எழுத்தாளர் மாலன் அவர்கள்  பதிவிட்டது.  அதன் முக்கியம் கருதி எனது முகநூலில் மறு பதிவிடுகிறேன். மாலன்  அவர்களுக்கு நன்றி

ஏனிப்படி...

 #ஜெய்பீம் சூர்யாவுக்கு நறுக்கென சில கேள்விகள் :


ஜெய் பீம் படம் பார்த்தேன்.. பிரமாதமான மேக்கிங்.. விழுப்புரம் மாவட்டத்தின் பேச்சு வழக்கை எழுத்தாளர் #கண்மணி குணசேகரனின் உதவியுடன் தத்ரூபமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள்.. வட தமிழக பேச்சு வழக்கை வெள்ளித்திரையில் காட்டி இருப்பதற்கு மிக்க நன்றி... எங்கள் இருளர் சமுதாய சொந்தங்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருந்தீர்கள்.. அதற்காகவும் நன்றி... இப்படத்தின் மூலம் சம்பாதித்த பல கோடியில் ஒரு கோடியை எங்கள் சமுதாயத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள்.. ( இதை கணக்கு காட்டி வருமான வரியை குறைத்து செலுத்தலாம் என்பது தனிக்கதை ).. இருந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உதவியதற்கு நன்றி... 


சரி விஷயத்திற்கு வருகிறேன்... உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என்பதால் வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட அப்பாவி ராஜிகண்ணு என கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்... அதே வேளையில் நிஜத்தில் எங்கள் சொந்தம் ராஜி கண்ணுவை மிக மிக *கொடூரமாக அடித்துக்கொன்ற சப் இன்ஸ்பெக்டரின் பெயர் அந்தோணி சாமி* .. அவர் *கிறிஸ்தவர்* (தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்) .. ஆனால் *திரைப்படத்தில்* அவர் பெயரை *குருமூர்த்தி* என *மாற்றி* இருக்கிறீர்கள்.. அதோடு அவரை *இந்து வன்னியராகவும்* காட்டி இருக்கிறீர்கள்... அதேபோல எப்பொழுதும் *நமச்சிவாய* என சொல்லிக் கொண்டிருக்கும் *வழக்கறிஞரை* ஒரு சமூக *கோமாளி* போலவும் சித்தரித்து உள்ளீர்கள்... உங்களின் *சூரரைப்போற்று* திரைப்படமும் *தொழிலதிபர் கோபிநாத்தின்* வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.. கோபிநாத் தெய்வ பக்தியுள்ள *பிராமண* சமுதாயத்தைச் சேர்ந்தவர்.. ஆனால் படத்தில் *அவரை பெரியாரியவாதியாக*, கடவுள் மறுப்பாளராக காட்டியிருந்தீர்கள்.. 


அப்பாவி இந்து மதத்தின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு *வன்மம்*..? #ஜெய்பீம் திரைப்படத்தின் இறுதியில் நீங்கள் நன்றி சொல்லி போட்டிருக்கும் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களாக வருகின்றன... நீங்கள் ஸ்டாலினை சந்திக்கும் பொழுது உங்களுடன் அம்மதத்தை சேர்ந்த பெரியவர்கள் இருந்தார்கள்.. இதெல்லாம் உங்கள் மீது பெருத்த சந்தேகத்தை வரவழைக்கிறது... ஏற்கனவே அப்பாவிகளான இந்துக்களை, குறிப்பாக எங்களைப்போன்ற இருளர், மீனவர், பறையர் போன்றோரை ஏதேதோ பொய் புரட்டுகளையும், ஆசை வார்த்தைகளையும் கூறி மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்... மதமாற்றத்தால் அகண்ட பாரத தேசம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் , இலங்கை என சிதறுண்டு கிடக்கிறது... இந்தியாவில் மிச்சம் மீதி இருக்கும் இந்துக்களையும் மதம் மாற்றிக்கொண்டு இருக்கும் சதிகாரர்களுடன் கைகோர்த்து, நீங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது.. உங்கள் தந்தை எவ்வளவு பெரிய பக்திமான்.. நீங்கள் அவருக்கும் அவரது கொள்கைகளுக்கும் துரோகம் இழைப்பதாக தோன்றவில்லையா!? 

இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமா ?உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா ?



நாங்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டாலும் எங்கள் கலாச்சாரத்தை விட்டு எப்பொழுதும் விலகியது இல்லை ... எங்களுக்கும் பலமுறை பண ஆசை காட்டி மதம்மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள் .. சிவபெருமானின் வாரிசுகளான இருளர்ளாகிய நாங்கள் அதற்கெல்லாம் அடிபணியவில்லை... எங்களை வழிநடத்த எங்கள் குலதெய்வம் இருக்கிறது... எங்கள் கலாச்சாரம் , எங்கள் வாழ்வியல் தான் எங்களுக்கு அடிப்படை.. அதை மாற்றிக் கொண்டால் எங்கள் இனமே அழிந்து விட்டதாக அர்த்தமாகிவிடாதா ? 

எப்போதாவது எங்காவது இந்துக்கள், மற்ற மதத்தினரை கத்திமுனையில் மதம் மாற்றியதாக வரலாறு உண்டா ? பணம் கொடுத்தோ மற்ற மத தெய்வங்களை சாத்தான் என இகழ்ந்து பேசியோ மதம் மாற்றியதாக கேள்வி பட்டதுண்டா? தான் உண்டு தன் வேலையுண்டு என இந்தியாவில் மிச்சம் மீதி இருக்கும் எங்களை, எங்கள் வழியில் நிம்மதியாக வாழ விடுங்கள்... 

ஜெய்பீம் ! ஜெய் ஹிந்த்!


இப்படிக்கு ,


இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த உண்மைத் தமிழன் (வாட்ஸ் அப்பில் வந்தது) 

Thursday, November 4, 2021

நம்மவரின் நிகழ்ச்சி..



 இன்று 05/11/2021 வெள்ளிக்கிழமை  காலை   9.00 மணிக்கு மக்கள் தொலை க்காட்சியில்  நம் பதிவுல தோழர் கவியாழி கண்ணதாசன் அவர்கள் எழுதிய 'அம்மா நீ வருவாயா?  அன்பை மீண்டும் தருவாயா? எனும் தலைப்பில் (அவர்  எழுதிய  )புத்தகம் பற்றி 'என்னுள் என்நூல்' என்ற தலைப்பில்  பேசுகிறார்.பதிவர்கள்  கேட்டுவிட்டு தங்களின்


கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வோம்..