Tuesday, January 22, 2013

ஞானம் பெற எளிய ( ? ) வழி

தேவைகளை
எவ்வளவு சுமக்க முடியுமோ
எவ்வளவு குறைக்க முடியுமோ
அவ்வளவு குறைத்தபடி

சேர்த்தவைகளை
எவ்வளவு  இழக்க முடியுமோ
எவ்வளவு விலக்க முடியுமோ
அவ்வளவு விலக்கியபடி

நினைவுகளை
எவ்வளவு மறக்க முடியுமோ
எவ்வளவு துறக்க முடியுமோ
அவ்வளவு துறந்தபடி

அறிந்தவைகளை
எவ்வளவு எரிக்க முடியுமோ
எவ்வளவு புதைக்க முடியுமோ
அவ்வளவு புதைத்தபடி

திசைகளை
எவ்வளவு கடக்க முடியுமோ
எவ்வளவு  தகர்க்க முடியுமோ
அவ்வளவு தகர்த்தபடி

குருவற்ற  சீடனாய்
எவ்வளவு  ஓட  முடியுமோ
எவ்வளவு தேட முடியுமோ
அவ்வளவு தேடியபடி

அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்

45 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மகான்கள் எல்லாம் அலைந்து திரிந்தே ஞானம் பெற்றிருக்கிறார்கள்.அதனை அழகான வார்த்தைகளால் சொல்லிவிட்டீர்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.2

r.v.saravanan said...

சூப்பரா இருக்கு சார் டைரி யின் முதல் பக்கத்தில் எழுதி வைத்து கொள்ள வேண்டிய கவிதை இது

ஸ்ரீராம். said...

அலையாமல் கிடைப்பதில்லை ஞானம்.
தேடாமல் கிடைப்பதில்லை அறிவு!

அகலிக‌ன் said...

"தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்"
அடையக்கூடியவைகளை அடைவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று.சரிதானே சார்?

Anonymous said...

ஆகா அனுபவம் பேசுகிறது!.
நன்றி..நன்றி முத்துக்களைப் பொறுக்குவோம்.
தாருங்கள்.
இனிய அனுபவங்கள் பெருகட்டும்.
இஙையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

முத்திரைக் கவிதை !

அருமை..அருமை ..வாழ்த்துக்கள் !

RajalakshmiParamasivam said...

அருமையான கவிதை .
நீங்கள் சொன்னவை எல்லாம் முடியுமா ?
கொஞ்சமாவது முடிகிறதா என்று முயன்று பார்க்க வேண்டும்.

நன்றி பகிர்விற்கு,
ராஜி

கவியாழி said...

சார் தத்துவம் அருமை

Seeni said...

unmainga ayya!

saththiyamaa..

unmainga ayyaa..!

manam thottu ulukkiyathu ayya!

mikka nantri ayya..!

விச்சு said...

தேடுதல்தான் ஞானம்பெற வழி.. ஆனால் இன்றைய தேடுதல் வேறு தளத்தில் பயணிக்கிறது. அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

ADHI VENKAT said...

//அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்//

அருமையான வரிகள் சார்.
த.ம 7

Unknown said...

//அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்//

நீங்க அழைக்கும் போதெல்லாம் வந்து இங்கே படித்தும் ஞானம் பெறுகிறோம் இங்கே எவ்வளவு படிக்க முடியுமோ படித்தப்படி அவ்வளவையும் ரசித்தபடி ,,,,,,

நன்றி நன்றி அருமை ......
தமிழ் மனம் 8

Unknown said...

குருவற்ற சீடனாய்
எவ்வளவு ஓட முடியுமோ
எவ்வளவு தேட முடியுமோ
அவ்வளவு தேடியபடி

அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்

மனப்பாடம் செய்ய வேண்டிய வரிகள்! அத்தனையும் முத்தனைய! அருமை!

Unknown said...

//அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்//
அருமையான, மனதில் தைத்த வரிகள் சார்.....தொடர வாழ்த்துக்கள் !

கே. பி. ஜனா... said...

கவிதை அருமையாக இருக்கிறது!

”தளிர் சுரேஷ்” said...

//அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்//
சிறப்பான வரிகள்! அர்த்தமுள்ள கவிதை! மிக்க நன்றி!

அருணா செல்வம் said...

அருமையான கவிதை இரமணி ஐயா.

Anonymous said...

எளிய ( ? ) வழி ...

???

கொஞ்சம் கஷ்டம் தான் நமக்கு...


கோமதி அரசு said...

அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்//

அருமையான வரிகள்.
தேடினால் தான் கிடைக்கும்.
அறிந்து தெளிவதே ஞானம் அற்புதம்.

சேக்கனா M. நிஜாம் said...

இளைஞர்களுக்கு தன்னம்பிக்கைவூட்டும் கவிதை !

கல்வி ஞானம் குருஇடமிருந்து நன்கு கற்கவேண்டும்.

கல்வியை கற்போம் - கற்பிப்போம்

வாழ்த்துகள்...

சேக்கனா M. நிஜாம் said...

தம :12

தி.தமிழ் இளங்கோ said...

//அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்//

அங்கங்கே கலைகள் தேறும் அறிவன் (மாணவன்) போல அலைந்தால் நிச்சயம் ஞானம் (அனுபவம்) கிடைக்கும்.

G.M Balasubramaniam said...


/அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்/ உண்மை. ஆனால் அதற்கு ஞானம் பெறத்தான் செய்யவேண்டும் என்றில்லை. நிம்மதி பெறவும் அதையெல்லாம் செய்ய வேண்டும். நிம்மதி பெற்றுவிட்டால் ஞானம் பெற்ற மாதிரிதானோ.?

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //


சூப்பரா இருக்கு சார் டைரி யின் முதல் பக்கத்தில் எழுதி வைத்து கொள்ள வேண்டிய கவிதை இது//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //.

அலையாமல் கிடைப்பதில்லை ஞானம்.
தேடாமல் கிடைப்பதில்லை அறிவு!//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அகலிக‌ன் //

"தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்"
அடையக்கூடியவைகளை அடைவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று.சரிதானே சார்?//

மிகச் சரி
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi//

ஆகா அனுபவம் பேசுகிறது!.
நன்றி..நன்றி முத்துக்களைப் பொறுக்குவோம்.
தாருங்கள்.
இனிய அனுபவங்கள் பெருகட்டும்.
இஙையாசி நிறையட்டும்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி//

முத்திரைக் கவிதை !
அருமை..அருமை ..வாழ்த்துக்கள் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

அருமையான கவிதை .
நீங்கள் சொன்னவை எல்லாம் முடியுமா ?
கொஞ்சமாவது முடிகிறதா என்று முயன்று பார்க்க வேண்டும்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

சார் தத்துவம் அருமை//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni said...

unmainga ayya!saththiyamaa..unmainga ayyaa..!

manam thottu ulukkiyathu ayyamikka nantri ayya..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தேடுதல்தான் ஞானம்பெற வழி.. ஆனால் இன்றைய தேடுதல் வேறு தளத்தில் பயணிக்கிறது. அருமையாக சொல்லியுள்ளீர்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

அருமையான வரிகள் சார்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரியாஸ் அஹமது //

நீங்க அழைக்கும் போதெல்லாம் வந்து இங்கே படித்தும் ஞானம் பெறுகிறோம் இங்கே எவ்வளவு படிக்க முடியுமோ படித்தப்படி அவ்வளவையும் ரசித்தபடி ,,,,,,

நன்றி நன்றி அருமை ...

படைப்பின் தொனியிலேயே பின்னூட்டமிட்டது
மனம் கவர்ந்தது

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் ''

மனப்பாடம் செய்ய வேண்டிய வரிகள்! அத்தனையும் முத்தனைய! அருமை!//

தங்கள் வரவும் வாழ்த்தும் என் பாக்கியம்

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

அருமையான, மனதில் தைத்த வரிகள் சார்.....தொடர வாழ்த்துக்கள் !//

ஒரு வகையில் நீங்களும் அலைதலில் தேடுதலில்
ஆர்வம் கொண்டவர் என்கிற முறையில்
தங்கள் பின்னூட்டம் எனக்கு அதிக தெம்பளிக்கிறது

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

கவிதை அருமையாக இருக்கிறது!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

சிறப்பான வரிகள்! அர்த்தமுள்ள கவிதை! மிக்க நன்றி! ''

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

அலைந்து திரிந்து பெற வேண்டியது ஞானம்.... உண்மை தான்...

த.ம. 14

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

அலைந்து திரிந்து பெற வேண்டியது ஞானம்.... உண்மை தான்..//


ஒரு வகையில் நீங்களும் அலைதலில் தேடுதலில்
ஆர்வம் கொண்டவர் என்கிற முறையில்
தங்கள் பின்னூட்டம் எனக்கு அதிக தெம்பளிக்கிறது

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

/
G.M Balasubramaniam //.. உண்மை. ஆனால் அதற்கு ஞானம் பெறத்தான் செய்யவேண்டும் என்றில்லை. நிம்மதி பெறவும் அதையெல்லாம் செய்ய வேண்டும். நிம்மதி பெற்றுவிட்டால் ஞானம் பெற்ற மாதிரிதானோ.?//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
அமைதியும் ஞானமும் நாணயத்தின் இருபக்கங்கள்
போலத்தானே !

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ//

அங்கங்கே கலைகள் தேறும் அறிவன் (மாணவன்) போல அலைந்தால் நிச்சயம் ஞானம் (அனுபவம்) கிடைக்கும்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம் //

இளைஞர்களுக்கு தன்னம்பிக்கைவூட்டும் கவிதை !
கல்வி ஞானம் குருஇடமிருந்து நன்கு கற்கவேண்டும்.கல்வியை கற்போம் - கற்பிப்போம் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment