Monday, January 28, 2013

குப்பை முதல் காவியம் வரை

சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லும் திறனுமற்று
சொல்லிச் செல்ல முயலுகையில்
 அது"குப்பை"யாகிப் போகிறது

சொல்வதற்கு  நூறிருந்தும்
சொல்லும் திறனின்றி
சொல்லி விட  எத்தனிக்கையில்
அது"கூளம் "ஆகிப் போகிறது

சொல்லுகிற திறமிருந்தும்
சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லிவிடத் துடிக்கையில்
அது"மொக்கை"யாகிப் போகிறது

சொற்திறத்தின் சிறப்போடு
கருப்பொருளும் உடனமைய
சொல்லிச் செல்ல முனைகையில்
அது"படைப்பாகிப் "போகிறது

ஆயினும்
பயனதனைப் பண்பாகக்
கொள்ளுகின்ற படைப்பொன்றே
காலம் கடக்கவும் செய்கிறது
அதுவே
"காவிய "மாகியும் போகிறது


28 comments:

”தளிர் சுரேஷ்” said...

காவியத்தின் விளக்க கவிதை அருமை! நன்றி!

Admin said...

சொற்திறன் சுவை..

Seeni said...

azhakaa korthudeenga.....

முத்தரசு said...

//குப்பை முதல் காவியம் வரை//

வார்த்தைகள் அதன் கோர்வைகள் - கோர்த்த விதம் - பாராட்டுக்கள்

கவியாழி said...

குப்பையும் காவியமாகிறது உண்மை

Avargal Unmaigal said...

உண்மை உண்மை உண்மை

ரிஷபன் said...

கவிதை மனதில் தைக்கிறது

RajalakshmiParamasivam said...

வலைப் பதிவர்களின் மனதை வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது.
நன்றி பகிர்விற்கு.

அருணா செல்வம் said...

அருமை இரமணி ஐயா.
த.ம. 5

கோமதி அரசு said...

கவிதை அருமை.

RAMA RAVI (RAMVI) said...

காவியம் பற்றி கவிதை மிக சிறப்பாக இருக்கு.

ADHI VENKAT said...

அருமையான வரிகள்.

G.M Balasubramaniam said...


குப்பையும் கூளமும் காவியத்தின் படிக்கட்டுகளாகக் கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரிஷபன் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முத்தரசு //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhu Mathi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

படைப்புகளின் தன்மைகளை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்

Post a Comment