Tuesday, January 8, 2013

அவரவர் அளவுக்கு

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

39 comments:

Unknown said...

சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க
“படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்”ன்னு.

யதார்த்த வரிகள்

வாழ்த்துக்கள் ரமணி சார்.

முத்தரசு said...

அவரவர் அளவு நாட்டு நடப்புகள்

பால கணேஷ் said...

சொல்வதற்கு ஒரு நியாயம், செய்வது அதே தவறை என்பதை உணராதவர்களே அதிகம் பேர் இருக்கிறார்கள். என்ன செய்ய...? உங்கள் பாணியில் அருமையாக இடித்துரைத்திருக்கிறீர்கள்.

உஷா அன்பரசு said...

இப்பத்தானிருக்கு சமுதாயம்... உள்ளே- வெளியே முகத்திரை கிழிச்சி சொல்லிட்டிங்க.

G.M Balasubramaniam said...


முன்பே படித்திருந்தாலும் இன்னுமொரு முறை படிக்கும்போதும் சுவை குறைய வில்லை. ஏனென்றால் எழுத்தின் கருத்து அம்மாதிரி. வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

Avargal Unmaigal said...

சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என்பதுதான் நமது கலாச்சரம் என்பதை அழகாக சொல்லி இருக்கீறீர்கள்

அருணா செல்வம் said...

மீள் பதிவு என்றாலும்
மீண்டும் மீண்டும் படிக்கத் துாண்டும் பதிவு.
அருமை இரமணி ஐயா.
த.ம. 3

கோமதி அரசு said...

சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்க வேண்டும். அது தான் நல்லது என்று சொல்லும் கவிதை அருமை.

சசிகலா said...

செய்யக் கூடாததையும் இப்போ செய்வது தான் கொடுமை . தெளிவாக உணர்த்தினீர்கள் ஐயா.

ezhil said...

அறிவுரையெல்லாம் அடுத்தவருக்குத்தானே இந்த மாதிரியான பெரிய(சிறிய) மனிதருக்கெல்லாம் ....

குட்டன்ஜி said...

முரண்கள்!
அருமை

நிலாமகள் said...

இவ்வுலகம் முரண்களால் நிரம்பியிருக்கிறது!

கவியாழி said...
This comment has been removed by the author.
கவியாழி said...

மீள் பதிவாக இருந்ததால் என்னைபோன்றோருக்கு மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி

Advocate P.R.Jayarajan said...

//ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி//

நல்ல ஜோக்... ஆனால் சிந்திக்க வைப்பது...!

மகேந்திரன் said...

வணக்கம் ரமணி ஐயா,
படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை...
ஆனாலும் படித்து முடித்ததும் சிரிப்பையும் தாண்டி
சிந்தனையைக் கவ்வுகிறது கருத்துக்கள்...
நான் இப்படித்தான் இருப்பேன்...
நீ ஒழுங்கா இருக்கவேண்டும்
என்று புலம்பித் திரியும்
மனிதப் பதர்கள் பற்றி
மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்....

சேக்கனா M. நிஜாம் said...

சமூகத்தில் நடக்கும் அவலங்கள் அனைத்தும் எளிய வரிகளில்...

// பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல் //

இறுதியில் 'நச்'

தொடர வாழ்த்துகள்...

Yaathoramani.blogspot.com said...

JAYANTHI RAMANI //

சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க
“படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்”ன்னு.
யதார்த்த வரிகள்
வாழ்த்துக்கள் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முத்தரசு //

அவரவர் அளவு நாட்டு நடப்புகள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

சொல்வதற்கு ஒரு நியாயம், செய்வது அதே தவறை என்பதை உணராதவர்களே அதிகம் பேர் இருக்கிறார்கள். என்ன செய்ய...? உங்கள் பாணியில் அருமையாக இடித்துரைத்திருக்கிறீர்கள்./

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //

இப்பத்தானிருக்கு சமுதாயம்... உள்ளே- வெளியே முகத்திரை கிழிச்சி சொல்லிட்டிங்க///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

முன்பே படித்திருந்தாலும் இன்னுமொரு முறை படிக்கும்போதும் சுவை குறைய வில்லை. ஏனென்றால் எழுத்தின் கருத்து அம்மாதிரி. வாழ்த்துக்கள்./

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பழனி.கந்தசாமி ///

ரசித்தேன்.//



தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என்பதுதான் நமது கலாச்சரம் என்பதை அழகாக சொல்லி இருக்கீறீர்கள்///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

மீள் பதிவு என்றாலும்
மீண்டும் மீண்டும் படிக்கத் துாண்டும் பதிவு.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்க வேண்டும். அது தான் நல்லது என்று சொல்லும் கவிதை அருமை//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

.

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

செய்யக் கூடாததையும் இப்போ செய்வது தான் கொடுமை . தெளிவாக உணர்த்தினீர்கள் ஐயா.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ezhil //

அறிவுரையெல்லாம் அடுத்தவருக்குத்தானே இந்த மாதிரியான பெரிய(சிறிய) மனிதருக்கெல்லாம் ..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

குட்டன் ''//

முரண்கள்!
அருமை//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

தத்துவம் மிக நன்று.

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

தத்துவம் மிக நன்று.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

இவ்வுலகம் முரண்களால் நிரம்பியிருக்கிறது!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான பின்னூட்டதிற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

மீள் பதிவாக இருந்ததால் என்னைபோன்றோருக்கு மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

Advocate P.R.Jayarajan //


நல்ல ஜோக்... ஆனால் சிந்திக்க வைப்பது..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

சிந்தனையைக் கவ்வுகிறது கருத்துக்கள்...
நான் இப்படித்தான் இருப்பேன்...
நீ ஒழுங்கா இருக்கவேண்டும்
என்று புலம்பித் திரியும்
மனிதப் பதர்கள் பற்றி
மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்.//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம் //.

இறுதியில் 'நச்'
தொடர வாழ்த்துகள்...//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

பூந்தளிர் said...

நான் முதல் முறையாகத்தான் படிக்கிறேங்க. நல்லா இருக்குங்க.

Yaathoramani.blogspot.com said...

பூந்தளிர் //

நான் முதல் முறையாகத்தான் படிக்கிறேங்க. நல்லா இருக்குங்க.


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டதிற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment