Friday, January 4, 2013

பெண்களுக்கான சுதந்திரமும் உரிமையும்

காட்டுக்குள்
வேட்டையாடச் செல்பவர்கள்
உல்லாசச் சுற்றுலா செல்பவர்கள்
முதலில் காடு குறித்த அறிவும்
மிருகங்களின் தடமறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
காட்டுக்கென பிரத்யேக உடைகளும்
கூடுமானவரையில் இரவுப் பயணம்  தவிர்த்தலும்
மிக மிக அவசியம்

ஏனெனில்
மிருகங்கள் பசி ஒன்றையே
பிரதானமாகக் கொண்டவை
கலை கலாசாரம் பண்பாடு என்கிற
பாசாங்கெல்லாம் அவைகளுக்கில்லை

அதைப் போலவே
நாட்டுக்குள்ளும்
பணி நிமித்தம் செல்லும் பெண்களாயினும்
பள்ளி செல்லும் பிள்ளைகளாயினும்
ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளாயினும்
முதலில் காடாகிப்போன நாடு குறித்த அறிவும்
இரண்டு கால் மிருகங்களின் வெறியறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக  நல்லது

எனெனில்
பசியெடுத்தபுலியும்  வெறி பிடித்தசிங்கமும்
பயமின்றி உல்லாசமாய் உலவித் திரிய
பாவப்பட்டஅணிகளும்  பரிதாபக்குருவிகளும்
பதுங்கித் திரிகிற "புண்ணிய பூமியில் "
பெண்களுக்கான சுதந்திரமும்  உரிமையும்
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?

47 comments:

Unknown said...

நாம் எச்சரிக்கை கொண்டு இருப்பது மிக்க நலம் வாய்க்கும்..! ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட வரிகள்!

நன்று..வாழ்த்துக்கள்!

கவியாழி said...

பெண்களின் பாதுகாப்புக்கு நல்ல யோசனை

G.M Balasubramaniam said...


காலத்திற்கேற்ற பதிவு. வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு எச்சரிக்கை கவிதை! நன்றி!

ஸ்ரீராம். said...


காடுகளில் இருக்கும் மிருகங்களுக்குக் கூட சில தர்ம நியாயங்கள் இருக்கும்.

//ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளாயினும்//

மிகுந்த வேதனை தரும் உண்மை வரிகள்.

பூந்தளிர் said...

நாமதாங்க கவனமாக இருந்து கொள்ள வேணும்.

vanathy said...

Well written. Keep going.

Avargal Unmaigal said...

மிக மிக சரியாய் சொல்லி இருக்கிறீர்கள் ரமணி சார் இதை உணர்ந்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

நாம் எச்சரிக்கை கொண்டு இருப்பது மிக்க நலம் வாய்க்கும்..! ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட வரிகள்!

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //.

பெண்களின் பாதுகாப்புக்கு நல்ல யோசனை//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

காலத்திற்கேற்ற பதிவு. வாழ்த்துக்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

நல்லதொரு எச்சரிக்கை கவிதை! நன்றி!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //


மிகுந்த வேதனை தரும் உண்மை வரிகள்./

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பூந்தளிர் //

நாமதாங்க கவனமாக இருந்து கொள்ள வேணும்.///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

Well written. Keep going.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

மிக மிக சரியாய் சொல்லி இருக்கிறீர்கள் ரமணி சார் இதை உணர்ந்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



Angel said...

உண்மையை தான் சொல்லியிருக்கீங்க
நல்ல எச்சரிக்கை பதிவு

RajalakshmiParamasivam said...

//முதலில் காடாகிப்போன நாடு குறித்த அறிவும்
இரண்டு கால் மிருகங்களின் வெறியறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்//

எத்தனை நிதர்சனமான உண்மையை அழகிய கவிதையாய் வார்த்தெடுத்து இருக்கிறீர்கள்.

எச்சரிக்கை உணர்வைக் கொட்டி எழுதிய கவிதைப் பகிர்விற்கு நன்றி.
உங்களின் பொறுப்புணர்வை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறது.

ராஜி

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புண்ணிய பூமி ஏனோ
பொய்யரின் கையில் போச்சி!
கண்ணிய கட்டுப் பாடு
காற்றிலே கரைந்து போச்சி!
பெண்ணிய உரிமை எண்ணிப்
பின்னிய கவிதை கண்டேன்!
தண்ணிய கவிஞன் என்னுள்
தக..தக மூளும் தீயே!

கரந்தை ஜெயக்குமார் said...

சிந்தனைக்கு உரிய பதிவு அய்யா. காட்டு மிருகங்களிடம் தப்பிப்பது எளிது. இது புலி, இது சிங்கம் வேட்டையாடும், இது மான் வேட்டையாடாது என்று வித்தியாசப் படுத்தி புரிந்து கொள்ள முடியும், தப்பிக்கவும் முடியும். ஆனால் நாட்டு மிருகங்களைப் பார்த்த மட்டில் சிங்கம், புலி, பாம்பு பல்லி என்று வேறுபடுத்தி அறிய முடிவதில்லை, ஏனெனில் அனைத்துமே மனிதன் என்னும் உருவத்தில் பதுங்கியிருப்பதால். நன்றி அய்யா

பூந்தளிர் said...

காலத்துக்கேற்ற நல்ல கவிதை. நன்றிங்க.

Yaathoramani.blogspot.com said...

angelin //


உண்மையை தான் சொல்லியிருக்கீங்க
நல்ல எச்சரிக்கை பதிவு//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

எத்தனை நிதர்சனமான உண்மையை அழகிய கவிதையாய் வார்த்தெடுத்து இருக்கிறீர்கள்.

எச்சரிக்கை உணர்வைக் கொட்டி எழுதிய கவிதைப் பகிர்விற்கு நன்றி.
உங்களின் பொறுப்புணர்வை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறது.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //

பெண்ணிய உரிமை எண்ணிப்
பின்னிய கவிதை கண்டேன்!
தண்ணிய கவிஞன் என்னுள்
தக..தக மூளும் தீயே!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான அழகான கவிதைப் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

..நாட்டு மிருகங்களைப் பார்த்த மட்டில் சிங்கம், புலி, பாம்பு பல்லி என்று வேறுபடுத்தி அறிய முடிவதில்லை, ஏனெனில் அனைத்துமே மனிதன் என்னும் உருவத்தில் பதுங்கியிருப்பதால்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பூந்தளிர் //

காலத்துக்கேற்ற நல்ல கவிதை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தக்குடு said...

உண்மையை சொன்னால் யார் கேட்கிறார்கள்! உண்மையான வரிகள்!

குலசேகரன் said...

இசுலாமிய இயக்கங்கள், மதுரை ஆதீனம், ம.பி அமைச்சர்கள், ஆர் எஸ் எஸ் தலைவர், வி ஹெச் பி தலைவர், போன்றவர்கள் தற்போது சொல்லிக்கொண்டிருப்பவைகளின் சாரமாக தங்கள கவிதையிருக்கிறது.

இப்படியோ போனால், வீட்டுக்குள்ளே பெண்ணைப்பூட்டிவைப்போம் என்றவர் தலைகுனிந்தார் என்ற வரியை தலை நிமிர்ந்தார் என்று மாற்றியாக வேண்டும்.

ரமணி!

காடும் நாடும் ஒன்றல்ல. காடு காடாகத்தான் இருக்கும். ஆனால் நாடு ஆதிகாலத்தில் ஆதிமனிதர்களாகவிருந்தவர்களை மாற்றி, குடும்பம், குழந்தை, உறவுகள், பெண்ணுரிமை என்றெல்லாம் மாற்றியபின் உருவானது. அதில் இன்னும் பலர் அக்காலச்சிந்தனையுடன், பெண்ணை அடிமைப்படுத்துவோம்; மீறினால் அவளை அடக்குவோம் (வன்புணர்வும் அவ்வடக்குமுறைகளில் ஒன்று) என்பவர் வாழ்வார். அவர்களை சட்டம் தன் இரும்புக்கரங்களைக்கொண்டு தடுப்பதும், அவர்களின் சிந்தனையை மாறுபடுத்த முயல வழிமுறைகளைக்காண்பதும்தான் சிறப்பு.

அஃதன்றி, கற்காலத்துக்கே போகிறீர்களே நியாயமா?

Yaathoramani.blogspot.com said...

குலசேகரன் //

எனெனில்
பசியெடுத்தபுலியும் வெறி பிடித்தசிங்கமும்
பயமின்றி உல்லாசமாய் உலவித் திரிய
பாவப்பட்டஅணிகளும் பரிதாபக்குருவிகளும்
பதுங்கித் திரிகிற "புண்ணிய பூமியில் "
பெண்களுக்கான சுதந்திரமும் உரிமையும்
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?


மிகச் சரியாக கடைசி பத்தியைப் படித்தால்
நான் சொல்லிச் செல்வதன் அர்த்தம்
நீங்கள் நினைப்பதுபோல் இல்லை எனத் தெரியும்
நம் நாட்டை"புண்ணிய பூமி "எனச் சொல்லி
காடாக்கிவைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற
ஆதங்கத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கமுடியாத
சூழலில் வாழ்வதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளேன்இன்னும் அதை அழுத்தமாக சொல்லி இருக்கலாம் எனபின்னூட்டங்களைக் கண்டு புரிந்து கொண்டேன்
வரவுக்கும் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தக்குடு //

உண்மையை சொன்னால் யார் கேட்கிறார்கள்! உண்மையான வரிகள்!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொடிய மனித மிருகங்கள் ஒழிக்கப் படவேண்டும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 6

அருணா செல்வம் said...

நல்ல கருத்துக் கவிதை இரமணி ஐயா.
த.ம. 7

Anonymous said...

நாட்டு நடப்பு தற்பாதுகாப்பு
கூட்டும் வரிகள் பதிவு.
மறுபடி மனிதன் ஆதிகாலம் போல்
புதிதாகக் கற்று எழுந்து வர வேண்டியுள்ளது போலத் தோன்றுகிறது.
நெற்றியில் திருநீறு பூசி
தோடுடைய செவியன் பாடிப் படிக்கட்டும்.
மிருகம் போன்று பின் தங்கிவிட்டான்.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

கொடிய மனித மிருகங்கள் ஒழிக்கப் படவேண்டும்.//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

நல்ல கருத்துக் கவிதை//.

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

நாட்டு நடப்பு தற்பாதுகாப்பு
கூட்டும் வரிகள் பதிவு.
மறுபடி மனிதன் ஆதிகாலம் போல்
புதிதாகக் கற்று எழுந்து வர வேண்டியுள்ளது //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் யாரோ ஏதோ சொல்லி இருக்காங்க இன்று என்னான்னு பாருங்களேன்

RAMA RAVI (RAMVI) said...

மனதை தொட்டது உங்கள் பதிவு. அருமையான கருத்து.

kowsy said...

உங்கள் வலையின் பெயரும் இதுவே . தீதும் நன்றும் பிறர் தர வாரா . நாம் சரியாக இருந்தால் நம்மை அணுகுபவர்கள் சிந்தித்தே அணுகுவார்கள். இதை விட நாட்டு நடப்புத் தெரிந்தே நாம் பழக வேண்டும். மனித மிருகங்கள் உலகில் எங்கும் நிறைந்திருக்கின்றார்கள் . அவசியமான பதிவு

Yaathoramani.blogspot.com said...

ரியாஸ் அஹமது //

வலையுலக ஜாம்பவான்களுடன் என்னையும் இணைத்து
பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

மனதை தொட்டது உங்கள் பதிவு. அருமையான கருத்து.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

நாட்டு நடப்புத் தெரிந்தே நாம் பழக வேண்டும். மனித மிருகங்கள் உலகில் எங்கும் நிறைந்திருக்கின்றார்கள் . அவசியமான பதிவு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக நல்லது//

கண்டிப்பாக பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிப் போன காலம் இது.

நல்ல கருத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

JAYANTHI RAMANI //

கண்டிப்பாக பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிப் போன காலம் இது.
நல்ல கருத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

ezhil said...

காடுகளில் இருக்கும் மிருகங்களுக்கு ஐந்தறிவு. ஆனால் நாட்டு மிருகங்களுக்கு ஆறாம் அறிவை புகட்டுவதை விடுத்து நீங்கள் கூறியிருப்பது வருத்தமளித்தாலும் பின்னூட்டத்தில் தாங்கள் அதை உணந்த விதமாகக் கூறியது ஆறுதல் அளிக்கிறது. ஒரு தோழி தன் முக நூலில் பகிர்ந்தது போல் "பெண்ணுக்கு அறிவுரை கூறும் அதே சமயம் ஆணுக்கான அறிவுறுத்தல்களை மறந்தது ஏனோ" உங்களைப் போன்றோர் அதற்காக் முயற்சிக்க்லாமே

Yaathoramani.blogspot.com said...



ezhil ''

"பெண்ணுக்கு அறிவுரை கூறும் அதே சமயம் ஆணுக்கான அறிவுறுத்தல்களை மறந்தது ஏனோ" உங்களைப் போன்றோர் அதற்காக் முயற்சிக்க்லாமே //

நான் பெண்ணுக்கு அறிவுறை கூறவில்லை
காடுபோல உள்ள நாட்டின் சூழலை சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் பின்னூட்டத்திலிருந்து மிகச் சரியாகச் சொல்லவில்லை
எனப் புரிந்துகொண்டேன்
வரவுக்கும் விரிவான தெளிவூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Post a Comment