Friday, March 17, 2017

அறியாமையில் விளைந்த குழப்பம்

சென்ற முறை அமெரிக்கப்பயணத்தின் போது
சென்னையில் கொஞ்சம் வேலை இருந்ததால்
சென்னை வரை காரிலேயே வந்துப் பின்
விமானம்பிடித்தோம்

இந்த முறை சென்னையில் வேலையில்லாததாலும்
கூடுதலாக ஆறு மணி நேரக் கார் பயணம் கூடுத்ல்
அலுப்பைச் சேர்க்கும் என்பதாலும் மதுரையிலிருந்தே
விமானம் மூலம் கிளம்பிவிடுவது என முடிவெடுத்து
டிக்கெட்டும் எடுத்து விட்டோம்

கிளம்புகிற தினத்திற்கு முதல் நாள் காலை திடுமென
உடனெடுத்துச் செல்லும் பெட்டி எண்ணிக்கை குறித்தும்எடை குறித்தும் ஒரு சிறு குழப்பம்

குழப்பதிற்குக் காரணமுமிருந்தது

சென்ற முறை அமெரிக்காவிலிருந்து திரும்பியதும்
விமானத்திலேயே மதுரை திரும்பிவிடலாம் என
டிக்கெட் புக் செய்ய முயல அவர்கள் உள்ளூர்
விமானத்தில் ஒருவருக்கு ஒரு பெட்டிதான் எனவும்
அதுவும் பதினைந்து கிலோவுக்கு மேல்
இருத்தல் கூடாது என்றும் அப்படி இருப்பின்
கூடுதல் எடைக்கு கிலோவுக்கு ஐநூறு ரூபாய்
கூடுதல் கட்டணம்செலுத்த வேண்டும் எனவும்
திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர்

எங்களிடம்   வெளி நாட்டுப்பயணத்திற்கு
அனுமதிக்கிறபடி22 கிலோஎடையில்
இரண்டு பெட்டிகள்இருந்ததால் கார் பயணமாகவே
மதுரை வந்து சேர்ந்தோம்

இந்தமுறையும் அப்படி ஏதும் இருக்குமா என்கிற
குழப்பம் வர , முதல் நாளே அந்த
விமான அலுவலக்த்தில்பணிபுரிகிறவரிடம்
கேட்க முயல அவரைத் தொடர்பு
கொள்ள இயலவில்லை

நானும் அப்படி ஏதும் இருந்தால் தொடர்ந்து
பயணிக்கிற பெண்ணும் மாப்பிள்ளையும் ஞாபகப்
படுத்தி இருப்பார்களே என அலட்சியமாக
இருந்து விட்டேன்

மறு நாள் காலையில் எத்ற்கும் அந்த விமான
அலுவலக்த்தில்பணி புரிகிறவரிடம்
கேட்டு வைக்கலாமே என கேட்டு வைக்க
அவர் திட்டவட்டமாக" ஒருவருக்கு ஒரு பெட்டிதான்
அதுவும் பதினைந்து கிலோதான் கூடுதல்
எடைக்கு கிலோவுக்கு ஐ நூறு கட்டவேண்டி இருக்கும்
அந்த வகையில் உங்களிடம் இருக்கும் எடைக்கு
கூடுதலாக இருபத்தைந்தாயிரத்துக்குக் குறையாமல்
கட்டவேண்டி இருக்கும் " என ஒரு பெரிய
அணுகுண்டாகத் தூக்கிப் போட்டுவிட்டார்

நான் ஒருகணம் ஆடிப் போனேன்

(தொடரும் )

12 comments:

ஸ்ரீராம். said...

இருபத்தையாயிரமா... அடேங்கப்பா...

KILLERGEE Devakottai said...

தொடர்கிறேன் நானும்...

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ...

Avargal Unmaigal said...

நீங்கள் அமெரிக்க வர டிக்கெட் புக் பண்ணும் போது மதுரையில் இருந்து அமெரிக்கவரடிக்கெட்ஓரே டிக்கெட்டாக புக் பண்ணி இருந்தால் இந்த பிரச்னையே இருக்காது காரணம் அது இன்டர்நேஷனல் டிக்கெட்டாக கவுண்ட் செய்யப் படும் அதனால் நோ எக்ஸ்ட்ரா சார்ஜ்

Avargal Unmaigal said...

அப்படி இல்லை என்றால் அது டொமஸ்டிக் டிக்கெட்டாக கணக்கில் எடுத்து கொண்டு லோக்கல் வெயிட்ன்படி சார்ஜ் வசூலிக்க படும்

இராய செல்லப்பா said...

?...அப்புறம் என்ன ஆயிற்று?

கரந்தை ஜெயக்குமார் said...

என்ன ஆயிற்று
காத்திருக்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களின் பதிவு மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என்று நினைக்கிறேன்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அந்த ஆட்டத்தை அறிய ஆவலாக உள்ளேன் ஐயா தொடருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

விமானப்பயணங்களில் இதெல்லாம் மிகவும் சகஜமாக நடப்பதும், நமக்கு மிகப்பெரிய டென்ஷனை ஏற்படுத்தும் விஷயங்களும் ஆகும்.

எங்களுக்கும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இதே போன்ற வேறொரு அனுபவம் ஏற்பட்டது. ப்ளேன் கிளம்ப கொஞ்ச நேரமே இருக்கும் போது, என் மூத்த மருமகள் புத்திசாலித் தனமாக அந்தப் பிரச்சனை எதிர்கொண்டு, நமக்கு நஷ்டமேதும் இல்லாமல், மிகவும் சாமர்த்தியமாக சமாளித்து என்னையே வியக்க வைத்தாள்.

ஒவ்வொரு இடத்திலும் உள்ள அவர்களின் சட்ட திட்டங்களை முன்கூட்டியே விசாரித்து, நாம் எதிலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

பிறகு என்ன நடந்தது என்று சொல்லுங்கோ.

Thulasidharan V Thillaiakathu said...

மதுரையிலிருந்து நேரடியாக ஒரே டிக்கெட்டாகப் புக் செய்திருந்தால் குழப்பம் இல்லையே! டொமெஸ்டிக் என்றால் ஒரு பெட்டிதான்...அப்புறம் சென்னை வந்தபின் தான் இன்டெர்நாஷனல்....மதுரையிலிருந்தே இன்டெர்நாஷனல் ஃப்ளைட்டாகப் புக் செய்திருந்தால் பிரச்சனை இல்லை..

சரி அப்புறம் என்னாயிற்று?

கீதா

ராமலக்ஷ்மி said...

அடுத்து என்ன நடந்தது? தொடர்கிறேன்...

Post a Comment