கடலில்
சுட்டுக் கொல்லப்பட்டவன்
மீனவனா
தமிழனா
இந்தியனா
அந்தக் கொடும் செயலுக்கு எதிராக
கருத்துத் தெரிவிப்பதில் கூட
இதற்குள் அவன் எதில்
அடங்குகிறான் என அலசிக் கொண்டிருக்கிறோம் எனில் ...
இந்தக் கொலைக்கு எதிராக
எதிர்ப்பைப் பதிவு செய்வதில்
நமக்கு என்ன லாபம் இருக்கிறது
எனக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம் எனில்...
சந்தேகமே இல்லை
நாம் தமிழனும் இல்லை
நாம் இந்தியனும் இல்லை
காரணம்
நாம் தமிழனாகவோ
இந்தியனாகவோ
அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டுமெனில்
குறைந்த பட்சத் தகுதியாக
நாம் அவசியம்
மனிதனாக
மிக மிக முக்கியமாய்
மனிதத் தன்மை கொண்டவனாக
இருக்கவேண்டும் இல்லையா ?
சுட்டுக் கொல்லப்பட்டவன்
மீனவனா
தமிழனா
இந்தியனா
அந்தக் கொடும் செயலுக்கு எதிராக
கருத்துத் தெரிவிப்பதில் கூட
இதற்குள் அவன் எதில்
அடங்குகிறான் என அலசிக் கொண்டிருக்கிறோம் எனில் ...
இந்தக் கொலைக்கு எதிராக
எதிர்ப்பைப் பதிவு செய்வதில்
நமக்கு என்ன லாபம் இருக்கிறது
எனக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம் எனில்...
சந்தேகமே இல்லை
நாம் தமிழனும் இல்லை
நாம் இந்தியனும் இல்லை
காரணம்
நாம் தமிழனாகவோ
இந்தியனாகவோ
அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டுமெனில்
குறைந்த பட்சத் தகுதியாக
நாம் அவசியம்
மனிதனாக
மிக மிக முக்கியமாய்
மனிதத் தன்மை கொண்டவனாக
இருக்கவேண்டும் இல்லையா ?
5 comments:
சரி தான்...
மணிதம் மரித்து ஆயின பல ஆண்டுகள்.
முதலில் மனிதனே இல்லை என்பதை வெட்கத்துடன் நாம் ஒத்துக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம் ஐயா
மிக மிக முக்கியமாய் மனிதத் தன்மை கொண்டவனாக இருக்கவேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்.
முதலில் மனிதம் பிறகு மற்ற பேதங்கள்
Post a Comment