Saturday, April 8, 2017

யார் மார்க்கண்டேயன் ?

அலுவலக மனக்கடி
போக்குவரத்து மற்றும்
நேர நெருக்கடி
மனச் சோர்வைக் கூட்ட...

உடல்வலி
சிறுநீர் மற்றும்
முலைக்காம்பின் அழுத்தம்
மூச்சிரைக்க வைக்க

இல்லம் நுழைந்ததும்
ஸோபாவில்
மெல்லச் சரிகிறேன் நான்

பாட்டியின் கொஞ்சலுக்கு
செப்புச் சாமானின் சப்தத்திற்கு
மயங்கியதாய்

நடித்துக் கொண்டிருந்த செல்லம்
சட்டெனத் தாவி
என்னைக் கட்டிக்கொள்கிறது
நான் அழுத்தமாய் அணைத்துக் கொள்கிறேன்

மெல்ல மெல்ல
உடல்பாரமும்
மனப்பாரமும்
குறைய்த் துவங்குகிறது

"தாவரதப் பாரேன்
சிவலிங்கம் பார்த்த
மார்க்கண்டேயன் மாதிரி "
என்கிறாள் பாட்டி

எனக்கு குழப்பமாய் இருக்கிறது
இருவரில்
யார் சிவலிங்கம் ?
யார் மார்க்கண்டேயன் ?

15 comments:

ப.கந்தசாமி said...

குழப்பம் எங்கு வந்தது?

Yaathoramani.blogspot.com said...

தாயைக் கண்ட சேயா இல்லை சேயைக்கண்ட தாயா.?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைவருக்கும் இயல்பாய் வரும் குழப்பமே

வை.கோபாலகிருஷ்ணன் said...

பொதுவாக சேய் சின்னதாக இருப்பதால் அதுவே மார்க்கண்டேயன் என்றும், தாய்தான் சிவலிங்கம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் அலுவலகம் போய் அலுப்புடன் திரும்பும் தாய்க்கும், அந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த தன் சேய் மேல், பக்திப் பரவசம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால், அவளுக்கு தானே மார்க்கண்டேயன் போலவும், தன் குழந்தையே சிலலிங்கம் போலவும் ... நினைக்கவும் வைத்திருக்கலாம்.

யோசிக்க வைக்கும் நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

இந்த இடத்தில் தாய் மார்கண்டேயன் ஆகிறாள் தன் குழந்தையைக் கண்டதும் சோர்வு நீங்கி மீண்டும் இளம்பருவம் போயது போல்....அருமை அருமை மிக மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

கீதா

Yaathoramani.blogspot.com said...

Dr B Jambulingam //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

அலுவலகம் போய் அலுப்புடன் திரும்பும் தாய்க்கும், அந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த தன் சேய் மேல், பக்திப் பரவசம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால், அவளுக்கு தானே மார்க்கண்டேயன் போலவும், தன் குழந்தையே சிலலிங்கம் போலவும் ... நினைக்கவும் வைத்திருக்கலாம்.



தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Thulasidharan V Thillaiakathu said...
இந்த இடத்தில் தாய் மார்கண்டேயன் ஆகிறாள் தன் குழந்தையைக் கண்டதும் சோர்வு நீங்கி மீண்டும் இளம்பருவம் போயது போல்//



தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Angel said...

மனபாரமும் உடல் அயர்ச்சியும் குறைந்ததால் தாய் மார்க்கண்டேயன் குழந்தையும் தெய்வமும் அதாவது சிவனும் ஒன்று

Kasthuri Rengan said...

ஆகா ..
யார் மார்க்கண்டேயன்

G.M Balasubramaniam said...

ஒருவருக்கொருவர் சிவலிங்கம் மார்க்கண்டேயன்

இராய செல்லப்பா said...

எப்படியோ எங்களைக் குழப்புவது என்று முடிவு செய்துவிட்டீர்கள்!...
இராய செல்லப்பா நியூஜெர்சி

srikanth said...

Very nice. I feel so when my son hugs me.

srikanth said...

Very nice. I feel so when my son hugs me.

Yarlpavanan said...

மார்க்கண்டேயன் - அவரை
என்றும் பதினாறு இளமைக்கு
எடுத்துக்காட்டினால்
பிள்ளையைக் கண்ட தாய்க்கு
இளமை வருமென உணரவே!

Post a Comment