இலாப நோக்கில்
கூடுதல் விலையில்
தரம் குறைந்த
சாமான்களத் தரும்
அரசியல் வியாபாரிகளே
உங்கள் மீது
வாடிக்கையாளர்களாகிய
நாங்கள் கொண்ட கோபம்
வால்மார்ட்டுக்கும் தெரிந்துவிட்டது
அனுபவமிருந்து
முதல் இல்லாதவர்களை
விலைக்கு வாங்கியேனும்
எப்போது வேண்டுமானாலும்
கடையைத் துவங்கும்
சாதுர்யமும் வால்மார்டிடம் இருக்கிறது
ஊழல் வியாபாரிகளே
கிடைத்த சந்தை வாய்ப்புகளை
அபரிதமான பேராசையால்
நீங்களே அழித்து ஒழித்துவிட்டு
வால்மார்ட் வருவது குறித்து
கூச்சலிடுவது
எந்த விதத்தில் நியாயம் ?
வாடிக்கையாளர்களாகிய எங்களின்
இப்போதையத் தேவை
எப்படியாவது உங்கள்
மோசமான வியாபாரம்
நாசமாகவேண்டும் என்பதுதான்
உங்கள்
போலிச் சரக்குகளால் உண்டான
ஒவ்வாமை நோயின் பாதிப்பை
உடனடியாக குறைக்க வேண்டும்
படிப்படியாய்
அழிக்க வேண்டும் என்பதுதான்
ஆம்
சொரிந்து சுகம் பெற
எங்களுக்கு ஒரு மாற்று
இன்றைய சூழலில்
அவசியம் தேவை
அவசரமாய்த் தேவை
வேறு வழி தெரியவில்லை
வால்மார்ட்
சேவை அமைப்பல்ல
அதுவும் இலாப நோக்கமுடையதே
என்பது எங்களுக்கும் தெரியும்
அப்படிப்பட்டதாயினும் கூட...
உங்கள் லொள்ளுக்கு ...
அது வந்தால் கூட
ஆம் அது
எப்படிப்பட்டதாயினும் கூட
அது வந்தால் கூட
தேவலாம் எனத்தான் படுகிறது எங்களுக்கு
20 comments:
ஐயோ... அதற்காக... ம்...
வை.கோபாலகிருஷ்ணன் //
கொஞ்சம் காரம்
குறைத்துவிட்டேன்
வை.கோபாலகிருஷ்ணன் said...//
தங்களின் ஆதங்கங்கள் கொப்பளிக்குது இந்த ஆக்கத்தில் ..... //
சிறிய மாற்றமும்கூட அருமையாகவே !
கோபம் வருவதில் நியாயம் உள்ளது!
ம்ம்ம்ம்....
எப்படியாவது
சாலையோர வியாபாரிகளின் மோசமான வியாபாரம்
நாசமாகவேண்டும் என்பதற்காகவா...
மாற்றம் தேவைதான் அதற்காக....இந்த மாற்றமா? இந்த மாற்றம் வொர்க் அவுட் ஆகும் என்று நினைக்கின்றீர்களா...முடிவு அரசாங்கம் என்றால் பல முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டுமே....இந்த மாற்றம் வொர்க் அவுட் ஆகுமா...
கீதா
அண்ணா உங்கள் ஆதங்கத்தில் கோபத்தில் தவறில்லை ... சாக்கடை நீரில் ஒருவர் கீரையை கழுவிய காட்சியை கண்டோமே :( வயலிலிருந்து தோட்டத்திலிருந்து பறித்து கூடையில் சுமந்து நமது சமையலறைக்கு வரும் கீரையும் கத்திரியும் இனி காணமுடியாதது வால்மார்ட்டில் பூச்சி மருந்தும் பதப்படுத்தும் செயற்கை பொருளும் சேர்த்து மினுங்குவதை இனி வாங்கப்போகிறோம் :( அதிக விலை கொடுத்து
மாற்றங்கள் தேவைதான் ஆனால் சில மாற்றங்கள் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் ..
யார் செத்தா என்ன?! அவங்களுக்கு கல்லா கட்டினா சரிதான்
உள்ளூர் திருடனுக்கு பயந்து உலகத் திருடனிடம் அடைக்கலம் ஆவதான்னு யோசனையா இருக்கு ஜி :)
கோபம் நியாயமானதுதான் ஐயா
கோவப்படுங்க. ஆனா சாபம் கொடுக்காதீங்க😥
Puthiyamaadhavi Sankaran //
அரசியல் வியாபாரிகளிடம்
கோபப்பட்டு ஆகப்போவதேதும் இல்லை
சாபமிட்டாவது ஆறுதல் கொள்ளலாம்
என்றுதான் இப்படி
எவ்வளவுதான் திருடினாலும் அவன் நம்ம ஆளு இல்லையா... ஆனாலும் அவன் திருடன்தான்.
மால்கள் வால்மார்ட் போன்ற இடங்களுக்குப் போகிறவர்களின் மைண்ட் செட்டே தனி. ஏதோ ஒரு சொல்லாதவறட்டுக் கவுரவம் புதிதாய்ப்புழங்கும் பணம் . ஆனால் இவைஎல்லாம் காலம்காலமாக தொடரும் வியாபாரத்தைக் குளைக்கும் என்பதே வருத்தமளிக்கிறது
மேலே குறைக்கும் என்று ஒருந்திருக்க வேண்டும்
Post a Comment