முன்னறித் தெய்வப்பட்டியலில்
இரண்டாவதாயிருப்பதுக் குறித்து
அவர்கள் கவலைப்பட்டதே இல்லை
குழந்தைகளின்முன்னேற்றம் குறித்துச்
சிந்திப்பதில் அவர்கள் எப்போதும்
முதலாவதாகவே இருக்கிறார்கள்
மாதா எனத் துவங்கி தெய்வத்தில் முடியும்
அந்த நால்வர் பட்டியலில்
குருவுக்கு முன்னர் இடம்பெற்றது
வெறும் வார்த்தை ஜாலத்திற்காக இல்லை
உலகைப் புரிந்து கொள்ளக்
கற்றுக் கொடுப்பதில் அவர்கள்
அனைத்து விஷயத்திலும் என்றென்றும்
குருவுக்கு முன்னால்தான் இருக்கிறார்கள்
அன்னையர் தினம் அளவு
தந்தையர் தினம் கொண்டாடப்படாதது குறித்து
அவர்கள் சஞ்சலப்படாதே இருக்கிறார்கள்
ஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்
சில விசித்திர விதிகளினால்
அவர்கள் உணர்வுகளை எப்போதும்
உள்ளத்தில் அடக்கிவைத்தே அலைகிறார்கள்
நம்மை வயிற்றில் சுமக்காது போயினும்
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்தே சுகங்காணும்
நமக்குப் பாலூட்டி வளர்க்காது போயினும்
காலமெல்லாம் சிகரத்தில் வைக்கத் தினம்சாகும்
தந்தையரின் தியாகங்கள்
யாருக்கும் எந்த விதத்திலும்
என்றும் சளைத்ததல்லை
ஆம் ...நிச்சயமாக
தந்தையராய் இருப்பது மாபெரும் தவமே
ஆணினத்திற்கு இறைவன் அருளிய ஆகப்பெரிய வரமே
அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
14 comments:
நன்னாளில் ஒரு நல்ல கவிதை. நன்றி.
’தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற ஔவைப் பாட்டியின் வாக்கிற்கு (கொன்றைவேந்தன்) விளக்கவுரை போல் அமைந்துள்ளது இந்த பதிவு. தந்தையர் தின வாழ்த்துகள்.
தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!
எல்லோருக்கும் நிழல் தரும் ஒரு ஆலமரம் தாய் என்றால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப்பிடிப்பது அதன் வேர்களான தந்தையல்லவா?
இதை ஒரு கவிதை சொல்கிறது. படித்துப்பாருங்கள். அதன் இணைப்பு:
http://muthusidharal.blogspot.ae/2010/08/blog-post_19.html
தாய் கொஞ்சகாலம் வயிற்றில் சுமக்கிறாள்.
தந்தை எப்போதும் தன் சிந்தனையில் சுமக்கிறான் என்பதை படமே சொல்கிறது.
அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்.
மனோ சாமிநாதன் //
அற்புதமான பதிவு
இன்றைய தினம் இதை மீள்பதிவாகத் தரலாமே
முன்பு படிக்கத் தவ்றியவர்களுக்கு
படித்து மகிழ ஒரு வாய்ப்பாக இருக்குமே
வாழ்த்துக்களுடன்...
நல்லதொரு கவிதை.
அருமை
தந்தையர் தினவாழ்த்துக்கள் ஐயா
தந்தையர் தின சிறப்பு பதிவு அருமை
த.ம.4
அருமையான பதிவு அய்யா.
நெஞ்சை உருக வைக்கும் கவிதை..!! எல்லா வரிகளுமே அற்புதமானவை. தந்தையாய் இருப்பது பெருமை - அந்தப் பெருமையை எனக்கும் வழங்கிய கடவுளுக்கு நன்றி.
தந்தையர்தின நல் வாழ்த்துக்கள்!
வணக்கம்
ஐயா
தந்தையர் தினத்தை நினைவு படுத்தும் அற்புத கவிமழையில் நான் நனைந்தேன்
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தன்னை விட தம்மக்கள் வளர்வதை தந்தையரே விரும்புவர்
அருமையான கவிதை, அழகான படம்.
தந்தையர் தின வாழ்த்துக்கள். (தாமதமாய்)
Post a Comment