Wednesday, August 23, 2017

கலைஞர் செயல்(படும் ) தலைவராய் இருந்தால்...

அரசியல் என்பதே சந்தர்ப்பங்களை
மிகச் சரியாக தமக்கும் தம் கட்சிக்கும்
பயன்படுத்திக் கொள்வதே

இதில் நியாயம் தர்மம் நேர்மை
உண்மை என்பதெல்லாம் இரண்டாம்
பட்சமே(மிக முக்கியமாய் இந்தியாவில் )

அந்த வகையில் காங்கிரஸை முழுமையாக
எதிர்த்தது, பின் இந்திராவின் மகளே வருக
நிலையான ஆட்சித் தருக என்றதும்

மதவாதக் கட்சி எனச் சித்தரிக்கப்பட்ட
கட்சியுடன் கூட்டணி சேர்ந்து
ஆட்சிப்பொறுப்பில் இருந்தததும்

பின் அதே காரணம் காட்டி அந்தக்
கூட்டணி விட்டு விலகியதும்

(சரியான நபர் சரியில்லாத இடத்தில்
வசனம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்)

புரட்சித்தலைவர் உடல் நலம் இல்லாது
வெளி நாட்டில் மருத்துவ சிகிச்சைப்
பெற்ற போது வந்த தேர்தலில்
எனக்கு ஓட்டளித்தால் அவர் வந்தவுடன்
அவரிடம் ஆட்சிப் பொறுப்பை
ஒப்படைப்பேன் என்றதும்

இப்படிக் கலைஞரின் அரசியல் செயல்பாடுகள்
குறித்துச் சொல்லிக் கொண்டே போகலாம
அவரைப் பிடித்தவர்கள் இதனை அவரின்
இராஜதந்திரம் என்பர்

பிடிக்காதவர்கள் அரசியல் பித்தலாட்டம்
என்பர்

அதெல்லாம் நமக்குத் தேவையில்லை

இன்று அண்ணா தி. மு.க மூன்றாகப்
பிரிந்து தமிழக  அரசியல் சூழலையே
அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும்
வேளையில்

நிச்சயம் அவர் செயல் தலைவராக
இருந்தால் தளபதி அவர்கள் போல
நிச்சயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு
இருக்க மாட்டார் எனபது மட்டும் சர்வ நிச்சயம்

மாறாக வாஜ்பாய் அவர்களுக்கு ஆதரவு
தரச் சொன்ன வசனம் போல

எங்கள் இன முட்டை எதிரிக் கூண்டில்
என ஒரு புதுமையான வசனத்தைச் சொல்லி
அண்ணா தி. மு. க  தாழ்த்தப்பட்ட
இனத்தைச் சார்ந்த யாரையேனும்
முதல்வராக முன்னிறுத்துவார்கள் ஆயின்

(இப்போது ஒரு அணி சொல்வதற்கு
முன்பாகவே )

 தி. மு.க அண்ணா, பெரியார்
அவர்களின் ஆசையை நிறைவேற்ற நிச்சயம்
வெளியிலிருந்து தன் முழு ஆதரவைத்
தரும் என ஓரு குண்டைப் போட்டு
அவர்களை மேலும் ஒரு குழப்புக் குழப்பி
சிதற வைத்து இருப்பார்

அவர் போட்ட குண்டு செல்லுபடியாகும்
பட்சத்தில் சில காலம் சொன்னதுபோல்
ஆதரவளித்துப் பின் மிகச் சரியான நேரம் பார்த்து
ஒரு சரியான காரணமும் காட்டி
கவிழ்த்தும் விடுவார் எனபது என அபிப்பிராயம்

(வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்னமும்
ஒரு அணி இருப்பது கூடுதல் சாதகம்)

அப்படிச் செய்வார் எனில்
இதுவரை முதல்வர் பதவியை ஒரு தாழ்த்தப்பட்ட
இனத்தைச் சார்ந்தவர் அலங்கரிக்காததை
ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றியமைக்காகவும்

தாழ்த்தப்பட்டாருக்கு பிற்பட்டோர் நலத்துறை
ஒதுக்கி மற்ற அதிகாரமிக்கத் துறைகளைக்
காலம் காலமாய் அனுபவித்து வரும்
முற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
அரசியல் கட்சிகளுக்கு பாடம்புகட்டினார்
என்கிற வகையிலும்

இன்னும் ஒரு
தனிச்சிறப்பினைக் கலைஞர் பெறவும்
செய்திருப்பார் என்பதுவும் என் கருத்து

நலமாகி வீடு வந்துள்ள கலைஞர்
என்ன செய்கிறார் பார்ப்போம்

14 comments:

Unknown said...

ஓரளவு சரியே த ம 2

திண்டுக்கல் தனபாலன் said...

நடந்து இருக்கலாம்...!

ராஜி said...

பெருமூச்சு மட்டுமே

ஸ்ரீராம். said...

எது எப்படியோ.... பொழுதுபோக்கிநின்னொரு அம்சத்தை இழக்கிறோம்! நாலாம் வாக்கு.

ஸ்ரீராம். said...

எது எப்படியோ பொழுது போக்க இருக்கும் இன்னொரு அம்சத்தை இழக்கிறோம். (திருத்தப்பட்டது!)

தலை மறைவான அதிரா said...

வோட் போட்டேன்ன், அரசியல் என்பதால் படிக்க ஆர்வம் இல்லை , ஹா ஹா ஹா நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைத்தும் யூகம்தானே?

G.M Balasubramaniam said...

எல்லாம் செய்து வந்தவர்தானே கலைஞர். அவரது தமிழ் மட்டும்தான் எனக்குப் பிடிக்கும்

Yarlpavanan said...

காலம் பதில் சொல்லும்

தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

கலைஞரின் தமிழ் நன்றாக இருக்கும். ரசிப்போம் அல்லாதுஅ வரது அரசியல்...? ம்ம் பார்ப்போம் என்ன ச்ய்யப் போகிறார் என்று...

Unknown said...

என்ன வீடு திரும்பிட்டாரா ! தமிழ் நாட்டிற்கு விடிவு காலமே வாராதா? அந்த காலத்தில் ஆழி அலை வந்தப்ப திருவாரூரையும் கொண்டு சென்று இருக்கலாம்.

SUBBARAMAN. R said...

Long live your wonderful thoughts. Teach these to your descendants also. Take care of your health and live long. You are immortal.

Avargal Unmaigal said...

கலைஞருக்கு உடல் நிலை சரியாக இருந்திருந்தால் இந்தளவிற்கு தமிழக அரசியல் கேவலமாக போய் இருக்காது

Avargal Unmaigal said...

மிசா காலத்தில் ஜெயில் சென்ற ஸ்டாலினுக்கு இப்போது மீண்டும் ஜெயில் செல்ல விருப்பம் இல்லாததால்தான் இப்படி செயல்படாத தலைவராக இருக்கிறார்

Post a Comment