Tuesday, August 8, 2017

புதிதாய்ப் பிறக்கவேண்டும்

''மொத்தம்
கழிந்தது
இருப்பு
இந்த மூன்றில்
எந்த இரண்டு இருந்தாலும்
மற்றொன்றை
எளிதாய் கண்டு விடலாம்
ஆனால்... "எனத் தயங்க

இதைக் கேட்ட நண்பன்
மிகப் பலமாய்ச் சிரித்தான்

"சுற்றி வளைத்து
எங்கு வருகிறாய் எனப் புரிகிறது
உனக்கு உன் மொத்த வாழ்நாள்
தெரிய வேண்டும் அப்படித்தானே "
என்றான்

நானும் மௌனமாய்த் தலையாட்ட


அவனே  தொடர்ந்தான்

"கழிந்த நாட்களை
கணக்கிட்டுக் கொள்

அதனுடன்
நீ விழிப்பதால்
சேருகிற நாளினை
கூட்டிக் கொள்

இப்போது கிடைப்பது
உன் மொத்த வாழ் நாள்

இப்போது இரண்டு கிடைத்து விட்டதல்லவா
இதில் கழிந்ததைக் கழி
இனி அடுத்தது கிடைப்பது
மிக மிக எளிதுதானே "
எனச் சப்தமாய் சிரிக்கிறான்

நான் மெல்லத் தயங்கியபடி
"அப்படியானால் விடை எப்போதும்
ஒன்றாகத்தானே இருக்கும் "

"ஆம் உண்மையும் அப்படித்தான்
மாறி மாறி இருக்காது
ஒன்றாகத்தான் இருக்கும்

புரிந்தவன் ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பிறக்கிறான்
கிடைத்த  நாளில்
முழுமையாய் வாழத் துவங்குகிறான்

புரியாதவனோ
உன்னைப் போல்
தேடி அலைந்து
அன்றையும்
கழிந்த நாளாக்கி
வாழாதுத் தொலைக்கிறான்" என்கிறான்

கொஞ்சம் புரிந்தது போலிருந்தது

நாளை முதலாவது
புதிதாய்ப் பிறக்கவேண்டும்

10 comments:

Unknown said...

கொஞ்சம் குழப்பம் தான்! த ம 2

ஸ்ரீராம். said...

ஒத்திப் போட்டே இழக்கும் மகிழ்ச்சிகள்.

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறோம்!.... உண்மை. ஆனால் புரிவதில்லை!

த.ம. நான்காம் வாக்கு.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

இவை போன்ற எண்ணங்கள் நமக்கு புத்துணர்வைத் தரும்.

Unknown said...

அனுபவித்துக் கழிக்கும் ஒவ்வொரு நாளும் புதிய நாளே :)

ராஜி said...

கணக்கு போடனுமா?! மீ எஸ்கேப்

Thulasidharan V Thillaiakathu said...

ஒவ்வொரு நாள் என்பதை விட ஒவ்வொரு நொடித் துளியிலும் நாம் புதிதாய்ப் பிறந்து கொண்டுதான் இருக்கிறோம்....அதை அனுபவிக்கத்தான் நமக்குத் தெரியவில்லை...
//புரிந்தவன் ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பிறக்கிறான்
கிடைத்த நாளில்
முழுமையாய் வாழத் துவங்குகிறான்
// அருமை!!

துளசி, கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு நாளும் சிறந்த நாளே...

G.M Balasubramaniam said...

/கொஞ்சம் புரிந்தது போலிருந்தது/

பூ விழி said...

புரிந்தது புரியவில்லை இந்த இரண்டையும் கூட்டி எதை கழிப்பது என்ற முழிப்பு

Post a Comment