"வாடா போடா "
நண்பர்கள் அதிகம்
உடனிருக்கையில் இருந்த
இளமைத் துள்ளலும்
தைரியமும் மகிழ்வும்
"வா, போ "
நண்பர்களிடம்
விட்டக் குறையாய்
தொட்டக்குறையாய்
விடாதுத் தொடர்ந்ததும்
இப்போது
"வாங்க போங்க "
நண்பர்களிடமும்
இருப்பது போன்ற
பாவனையில் என்
நட்பைத் தொடர்கிறேன்
பிறந்த சூழலில் வாய்த்த
புழுதி வீதியும்
புழுதி வீதியும்
அந்த எருமை குளிக்கும் குளமும்
கிட்டிப் புல் விளையாட்டும் தந்த
நீங்காதச் சுகத்தை
இன்று வசதி வாய்ப்புகள் தரும்
பிரதான சாலைகளில்
பிரதான சாலைகளில்
நவீன நீச்சல் குளங்களில்
நவ நாகரீக விளையாட்டுகளில்
நாளும்தேடிச் சோரும்
என்வயதுப்பெருசுகள் போலவும்
( வலைத்தளம், மற்றும் முக நூல் நண்பர்கள்
அனைவருக்கும்
அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் )
15 comments:
நன்றி. வாழ்த்துகள்.
நண்பர்கள் தின வாழ்த்துகள்!
நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்...
த.ம. மூன்றாம் வாக்கு!
அற்புதமான உண்மையை அழகாய் விளக்கிய கவிஞருக்கு நன்றி.
அன்று வாழ்த்து அட்டைகள் ,இன்று சமூக வலைகளில் வாழ்த்து :)
நண்பர்தின வாழ்த்துக்கள் ஐயா
தம +1
நண்பர்கள் தின வாழ்த்துகள்!
இப்போதும்கூட ஒருமையில் அழைக்கும் இளமைக்கால நண்பர்களைச் சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்வினை உணர்கிறேன். இப்போதைய நட்பு என்பதெல்லாம் தாமரை இலைத் தண்ணீர்ப் போலவே.
நண்பர்கள் தின வாழ்த்துகள்...
உங்களால் நண்பனாஅ பாவிக்கப் படுவது மகிழ்ச்சி
நண்பர்தின வாழ்த்துக்கள் ஐயா...
நெகிழ்ச்சியான கவிதை...நன்று
நன்றி ! நண்பர் தின வாழ்த்து த ம 10
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
அருமைப்பா
அது ஒரு கால நட்புக்கொண்டாட்டம்))) அருமையான கவிதை ஐயா!
Post a Comment