Friday, May 25, 2018

அமைதியில் நிலைப்போம்..

மன அமைதியை இரசிப்போம்
மன அமைதியில் இலயிப்போம்
மன அமைதியில் நிலைப்போம்

மன அமைதியே பேரானந்தத்தின்  ஊற்று
மன அமைதியே கலைகளுக்கு ஆசான்
மன அமைதியே சக்திக்கு ஆதார மையம்

பரந்து விரிந்த புல்வெளி
பனிபடந்த மலைச் சிகரம்
சலசலத்து ஓடும் சிற்றோடை
ஆரவாரமற்ற தெய்வ சன்னதி
மழலையின் மயக்கும் சிரிப்பு ...

இன்ன பிற  எல்லாம்
அமைதியின்
உற்பத்திச் சாலைகள் இல்லை

அமைதியின்
 சுகம்காட்டும்
அற்புத ஆதாரமையங்கள்

ஆதாரமையங்கள்  வழி
நம் மன இரசிப்பைத் துவங்குவோம்

மனம் அமைதியை இரசித்தல்
 வெறும் துவக்கமேஎன அறிந்தபடி...

மனம் அமைதியில் இலயித்தல்
ஒரு  தொடர்ச்சியேஎன உணர்ந்தபடி..

மனம் அமைதியில் நிலைத்தேலே
 முதிர்ச்சி எனத்  தெளிந்தபடி ....

8 comments:

ஸ்ரீராம். said...

அப்படி முடிந்தால் அது பெரிய வரம்.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய நிலையில் மனஅமைதி சிறிது சிரமம் தான்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

’அமைதியின்
சுகம்காட்டும்
அற்புத
ஆதாரமையங்கள்’

பட்டியலில்
தங்களின்
அன்றாட
ஆக்கங்களுக்கும் .....

அதனால்
எங்களுக்குள்
ஏற்பட்டுவரும்
தாக்கங்களுக்கும்
ஓர்
முக்கிய
இடம்
உண்டு.

வாழ்த்துகள் !

KILLERGEE Devakottai said...

மனஅமைதி இன்றைய வாழ்வில் அரிதான விடயமே.

கோமதி அரசு said...

அமைதி புறாவே! அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை என்று இப்போதைய நிலையில் அழைக்க வேண்டும்.

உங்கள் கவிதை அருமை.

Yarlpavanan said...

உள்ளத்தில்
அமைதி நிலைத்தால்
உடல்நலம் பெருகி
நீண்ட ஆயுளும் கிட்டி
மகிழ்வோடு வாழலாமே!

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல விஷயமே! அந்த அமைதியைத்தான் நாம் புறவெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்! அக அமைதி அது பெரிய விஷயம் தான்! கிட்டினால் பெரும் பேறு!!

கீதா

iramuthusamy@gmail.com said...

மன அமைதி... இன்று விரும்பிப் போனால் நம்மிடமிருந்து விலகிப் போகிறது.

Post a Comment