Tuesday, August 14, 2018

ஆயிரம் பதிவுகடந்தும்...

அறவுரையாய் அல்லாது
அறிவுரையாய் இல்லாது
அனுபவ உரையாய்...

அறிவுறுத்தியும் சொல்லாது
அலட்சியமாயும் சொல்லாது
எளிமையாய் மிக  இயல்பாய்..

கவிதையாயும் இல்லாது
உரையாயும் இல்லாது
இரண்டுக்கும் இடைப்பட்டதாய்..

இளக்கிய கவிதையாய்
இறுக்கிய உரையாய்
வசனகவிதை எனும் படியாய்

இழுத்தும் செல்லாது
ஒதுக்கியும் போகாது
உடன்வரும் வழிகாட்டியாய்..

பாண்டித்தியம் காட்டாதும்
"படி "இறங்கிச் சாயாதும்
தரமது நிலைக்கும்படியாய் ...

உயர்த்தும்படி இல்லையெனினும்
ஒதுக்கும்படி இல்லாது
தவறாது தொடரும்படியாய்

வேகமது குறைவெனினும்
விட்டுவிடாது தொடர்ச்சியாய்
எட்டாம் ஆண்டு எனும்படியாய்

ஆயிரம் பதிவுகடந்தும்
அயராது தொடர்கிறேன்
ஆரம்ப நாளைப்  போலவே

என்றும் குறையாது
தொடரும் உங்கள்
ஆதரவைப்  போலவே...

 வாழ்த்துக்களுடன்....


36 comments:

vimalanperali said...

அருமை/

Yaathoramani.blogspot.com said...

இது உங்கள் பாணியில் எழுத நினைத்து
எழுதியது.முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

ஸ்ரீராம். said...

எட்டாம் ஆண்டுக்கும், ஆயிரமாவது பதிவுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். இன்னும் பல்லாண்டுகள் பதிவுகள் தொடரவும், பல்லாயிரம் பதிவுகள் இடவும் வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வாழ்த்து கூடுதல் பலமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

kankaatchi.blogspot.com said...

எல்லாம் அவன் தருவது. நாம் விழி மூடி நின்று வழி விட்டால் போதும் அருவி போல் கொட்டும். அனைவரும் சுவைத்து மகிழ

Yaathoramani.blogspot.com said...

அருமையாகச் சொன்னீர்கள். தங்கள் வரவுக்கும் அற்புதமான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

K. ASOKAN said...

அருமையாய் வடித்து விட்டீர்கள் பாராட்டுகள்

KILLERGEE Devakottai said...

ஆயிரம் பதிவுகளை கடந்த கவிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வாழ்த்து மிகுந்த மகிழ்வளிக்கிறது மிக்க நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் ஐயா...

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி தனபாலன் வாழ்த்துக்களுடன்

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி தனபாலன் வாழ்த்துக்களுடன்

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்.

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி ஜி வாழ்த்துக்களுடன்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

தாங்கள் பதிவுலகத்தில் எட்டாமாண்டு தொடங்குவதற்கும். ஆயிரமாவது பதிவுக்கும் என் பணிவான வணக்கங்களுடன்,என் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிக அருமையாக கவிதையிலேயே தங்கள் எண்ணங்களை வடித்து தந்துள்ளீர்கள். கவிதையை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி .

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எட்டிப்பிடித்துவிட்ட
எட்டாம் ஆண்டுக்கும்

ஆச்சர்யம் அளித்திடும்
ஆயிரமாவது பதிவுக்கும்

எந்தன் மனமார்ந்த
பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

யாதோ என்று சொல்லி வெளியிட்டுக் கொண்டிருப்பினும்
ரமணி ஸாரின் பதிவுகள் ஒவ்வொன்றும் ரம்யமானவை +
ரமணீகரமானவை என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.

ஓடிப்போன இந்த எட்டு ஆண்டுகள், அடுத்து
ஓடிவரும் பதினாறு ஆண்டுகளாக ஆகவும்

மேலும் ஆயிரக்கணக்கான பதிவுகள் தாங்களே
வெளியிடவும், பிறரை வெளியிடத் தூண்டவும்
வழி காட்டியாக தாங்களே விளங்கிட
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் கோபு

Yaathoramani.blogspot.com said...

தங்கள் ஆசியும் பின்னூட்டம் மூலம் தரும் ஊக்கமுமே இவ்வளவு எழுத வைத்தது என்றால் நிச்சயம் அது சம்பிரதாயமான வார்த்தை இல்லை யாருக்கு எப்போது பின்னூட்டமிட்டாலும் மிகச்சரியாக பதிவின் அடிநாதம் அறிந்து பின்னூட்டமிடும் தங்கள் திறம் கண்டு வியந்திருக்கிறேன் வியந்துகொண்டும் இருக்கிறேன் தங்கள் ஆசிக்கு என் மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

வித்தை (பாண்டித்யம்) இருப்பவர்களிடம்
விநயம் (பெளவ்யம்) இருக்காது.

விநயம் (பெளவ்யம்) இல்லாதவர்களிடம்
வித்தை (பாண்டித்யம்) தங்கவே தங்காது.

வித்தையும் விநயமும், மிகச் சரியான விகிதாச்சாரத்தில் சேர்ந்துள்ள அபூர்வமான பதிவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை எனக்குத் தந்துள்ள மறுமொழியில் மீண்டும் என்னை உணர வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

என்னால் என்றுமே மறக்க முடியாத தலைசிறந்த ஒருசில பதிவர்களில் தங்களுக்கு ஓர் தனியான சிறப்பிடம் உண்டு. வாழ்க! வளர்க !!

நினைத்துப் பார்க்கிறேன்:

http://gopu1949.blogspot.com/2014/11/part-1-of-4.html

Yaathoramani.blogspot.com said...

பதிலுரைக்கு மிக்க நன்றி.மீண்டும் ஒருமுறை தாங்கள் அனுப்பியுள்ள சுட்டியைத் தொட்டுப் பதிவைப்படித்துப்பார்த்தேன்.மிக்க பெருமிதம் தருவதாக இருந்தது.உண்மையைச் சொல்வதென்றால் தொடர்ந்து ஹேட்டிரிக்காக மூன்று முறை தேர்வானவுடன் தாங்கள் எவ்வளவு சிறப்பாக நேர்மையாக தேர்வு செய்திருந்தாலும் ஒருசார்பாக என நினைத்து விடுவார்களோ என நினைத்துத் தொடர்ந்து எழுதாமல் இருந்தது எவ்வளவு பிசகு என இப்போது புரிகிறது.ஒரு அற்புதமான பதிவை இணைப்பாகத் தந்து மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

விரிவான அருமையான வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

11.12.2010 முதல் பதிவு தந்துள்ள
தங்களின் இன்றைய இந்தப் பதிவு
எண்ணிக்கையில் 1338-ஆவது பதிவாகும்.

இன்னும் எட்டு ஆண்டுகள் கூட முழுவதுமாக முடியவில்லை.

அதற்குள் அபாரமானதோர் சாதனைதான் !!!!!!

2016-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போதே
1000 பதிவுகளை எட்டி சாதனை செய்துள்ளீர்கள்.

நல்வாழ்த்துகள் !

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ரமணி சார்.

ராஜி said...

ஆயிரத்திற்கு வாழ்த்துகள்

நெல்லைத்தமிழன் said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள் சார்.... இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.

//விடாதுத் தொ// - த் வராது. //அயராதுத் தொ// - இங்கும் த் வராது.

நெல்லைத்தமிழன் said...

கோபு சார்... இடுகைக்கு ஏற்றபடி நீங்களும் வசன கவிதையில் எழுதியிருக்கீங்களே... பாராட்டுகள்.

நெல்லைத்தமிழன் said...

//வித்தை (பாண்டித்யம்) இருப்பவர்களிடம்
விநயம் (பெளவ்யம்) இருக்காது.

விநயம் (பெளவ்யம்) இல்லாதவர்களிடம்
வித்தை (பாண்டித்யம்) தங்கவே தங்காது.//

கல்வியோடு சேர்ந்தது செருக்கு அல்லவா? (உண்மையான அறிவு கல்வியினால் பெற்றவர்கள்). ஆனால் அது முதிரும்போது (அவர்கள் இன்னும் வளரும்போது) எண்ணங்கள் மென்மையாகி, விநயம் தன்னால் வந்து சேர்ந்துவிடும். உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன் கோபு சார் (வை.கோ என்று சொன்னால் உங்களுக்கும் ராசிக் குறைவு வந்துவிடப்போகிறது ஹா ஹா)

Yaathoramani.blogspot.com said...

ஆம் தவறே சரி செய்துவிட்டேன் மிக்க நன்றி வாழ்த்துக்களுடன்.

Yaathoramani.blogspot.com said...

பகிர்வுக்கு மிக்க நன்றி நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியவுடன் தான் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு பதிவு என்ற கணக்கில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் எனப் புரிந்து கொண்டேன்.பெரிதாக இலக்கியப் பரிச்சயமோ இலக்கண அறிவோ இல்லை என்றாலும் கூட அனுபவ அறிவையும் ஆர்வத்தையும் கொண்டுமட்டுமே ஆமை வெல்லும் கதையாய் இதைச் செய்திருக்கிறேன் என்றால் அது தங்களைப் போன்றவர்களின் தொடர்ந்த ஆதரவினால் தான் .மீண்டும் நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்.

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி

UmayalGayathri said...

இன்னும் தங்களின் கவிதைகள் ஆயிரமாயிரமாய் பெருகி...எங்களை மகிழ்விக்கட்டும் ஐயா.

வாழ்த்துகள்..... வாழ்த்துகள்

G.M Balasubramaniam said...

/
உயர்த்தும்படி இல்லையெனினும்
ஒதுக்கும்படி இல்லாது
தவறாது தொடரும்படியாய்/ இயன்றவரைஇப்படித்தான் எழுதுவதாக நினைக்கிறேன் விரைவில் ஆயிரத்தை எட்டும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நெடும்பயணத்தில் புதிய மைல்கல்...

வாழ்த்துக்கள் நண்பரே

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நடுநிலை மாறாத வேகத்தோடு பயணியுங்கள் வெற்றியோடு

வரதராஜன் said...

வணக்கம் நண்பரே!
முதன் முறையாக இன்று தங்களின் எழுத்தாற்றல் கண்டேன்.காதல் கொண்டேன்!
இளமையுடன் இனிமை கலந்த
சொற்றோவியம்!
நீவீர் நீடூழி வாழ்ந்து வரிகளை
வளமாக்குங்கள்! வாழ்த்துக்கள்!!

Post a Comment