Tuesday, August 28, 2018

வெள்ள நிவாரண சேவைப்பணி

உலகில் எங்கு தேவை உள்ளதோ
அங்கு நிச்சயம் உடன் உதவ அரிமாக்கள்  இருப்பார்கள்
என்பது உலகம் முழுதும் அறிந்த மொழி

மிகக் குறிப்பாக வில்லாபுரம் அரிமா சங்கமும்
அது துவங்கக் காரணமாக இருந்த
வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர்
நலச் சங்கமும் இருக்கும்   என்பது
மதுரை மாவட்டம் அறிந்தச் செய்தி

சென்னை நகரம் புயலால் பாதிக்கப்பட்டபோது
சுமார் பத்து இலட்சம் மதிப்பிலான
நிவாரணப்பொருட்களுடன் பாதிக்கப்பட்ட
பகுதிக்கு  (முடிச்சூர்) நேரடியாகச் சென்று
வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றதன்
தொடர்ச்சியாய் ..... அதன் மூலம் பெற்ற
அனுபவத்தின் தொடர்ச்சியாய் ...

(அப்போது வழிப்பறி கொள்ளையர்களாய்
சில கட்சிக்காரர்களே இருக்க அதனைத்
தடுக்கும் விதமாய் காவல்துறை
அதிகாரிகளை உடன் அழைத்துச் சென்றது,
வெறும் உணவுப் பொட்டலங்கள் மட்டுமின்றி
சமையல் சாமான்கள் பத்து நாட்களுக்கு
வரும்படியாக தனித்தனியாக பேக் செய்து
கொண்டு போனது ,  மெழுகுவர்த்தி
தீப்பெட்டி ,டார்ச் லைட் ,மருந்துப்  பொருட்கள்
என உடனடியாகவும்   தொடர்ந்து சிலநாட்களுக்கு
அவர்களுக்குத் பயன்படும்படியாய் பார்த்துப் பார்த்து
சேகரித்துக் கொண்டு போனது , மிகச் சரியாக
முறையாக பாதிக்கப்பட்டோரை நிவாரணப் பொருட்கள்
சேரவேண்டும் என்பதற்காக முடிச்சூரில் இருந்த
சேவை மனப்பான்மை கொண்ட அமைப்புடன்
இணைந்து பகிர்ந்தளித்தது இத்யாதி ..இத்யாதி )

..இம்முறை கேரளாவில் அதிகம் பாதிக்கப்பட்ட
ஆலுவா என்கிற பகுதியினைத் தேர்ந்தெடுத்து
அப்பகுதியில் சுமார் 1500 பேருக்குப் பயன்படும்படியாக
சுமார் பதினைந்து இலட்சம் மதிப்பிலான
நிவாரணப் பொருட்களை சேகரம் செய்து
மிகச் சரியாக முறையாக பகிர்ந்துதளித்து
திரும்பி இருக்கிற சேவைச் செம்மல்களை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்

இந்த மாபெரும் சேவைப் பணியினை
முன்னின்று முறையாகச் செய்து தந்த

வில்லாபுரம் புதுநகர் குடியிருப்போர் சங்க
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ,

வில்லாபுரம் புது நகர் அரிமா சங்க முன்னாள் ,
மற்றும் இவ்வருட  நிர்வாகிகளுக்கும்
துடிப்புமிக்க உறுப்பினர்களுக்கும்

வில்லாபுரம் புதுநகர் பேட்மிண்டன் சங்க
பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்

மிக  முக்கியமாய் இவர்கள் அனைவரையும்
மிகக் சரியாய் ஒருங்கிணைத்து இந்த
வெள்ள நிவாரண சேவைப்பணிமிகச் சரியாய்
நடைபெறக் காரணமாய் இருந்த
வில்லாபுரம் புது நகர் அரிமா சங்க
பட்டயத் தலைவர் /குடியிருப்போர் சங்கச்
செயலாளர் லயன் இப்ராகிம் சுல்தான் சேட்
அவர்களுக்கும்

எங்கள் மனமார்ந்த நன்றியினைக்
காணிக்கையாக்கி அது  தொடர்பான
புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்










:





6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பாராட்டத்தக்க சேவை. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

சேவைகள் தொடரட்டும்.

மனிதாபிமானம் மலரட்டும்.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //நான் தற்போது இவர்களுடன் இணைந்து
பணியாற்றமுடியாதபடி அமெரிக்காவில்
என்றாலும் இந்த அரிமா சங்கத்தைத்
தோற்றுவிக்கக் காரணமாக இருந்தவன்
என்கிற முறையில் எனக்கு கூடுதல்
மகிழ்ச்சியே

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்

மனமார்ந்த நன்றி

K. ASOKAN said...

அரிமாவின் சாதனை அருமை பாராட்டுக்குரியது

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

சம்பந்தப்பட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சிகரம் பாரதி said...

சேவை செய்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா
https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-08.html
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

Post a Comment