Tuesday, January 4, 2022

முதுமை அறிவோம்..

 !! 💖இரண்டாம் குழந்தை பருவம் 💖!! 


வயது கூடக் கூட நம் பெற்றோர்  குழந்தைகளாகி விடுவார்கள். 


முதுமை இன்னொரு குழந்தைப் பருவம். 


சொன்னது மறக்கும். சொன்னதையே திரும்பச்சொல்ல வைக்கும்.


நிறையப் பேச வைக்கும்.

பேசாமல் அடம் பிடிக்கவும் வைக்கும்.


உணவின் மீது பிரியம்/அதீத வெறுப்பு இரண்டும் வரும்.


நோய் கூடும்.

நோய் கூடியதை போலக் காட்டத் தோன்றும்.

நோய் வந்ததை மறைக்கக் கூடத் தோன்றும்.


கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த முதிர்ந்த குழந்தைகளை.


உங்களை வளர்த்தோரை நீங்கள் வளர்க்க இது ஒரு கிடைக்காத வாய்ப்பு.


அமர்ந்து பழங்கதைகள் பேசுங்கள். பிடித்தவற்றைத் தேடிச் செய்யுங்கள். வாங்கிக் கொடுங்கள்.


நானிருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள். 


எதிர்காலம் அல்லது இறுதிக் காலம் குறித்த பயம் வர விடாதீர்கள்.


எக்காரணம் கொண்டும் யாரிடத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.


எங்கும் விட்டு விடாதீர்கள்.


எது எப்படியோ இந்தத் தாய் தகப்பன் வழியே தானே நாம் வந்தோம்.


அந்த நன்றி மறவாமை வேண்டும்.


பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.


காலங்கடந்த பச்சாதாபத்திலும், கண்ணீரிலும் எந்தப் பயனுமில்லை.


காலத்தின் கட்டாயம்


எனக்கு பிடித்தவை

உங்களுக்கும் பிடிக்கும்


இந்த வரிகள் என்னைப் பெற்ற தாய் தந்தை இருவரும் மனம் குளிர அவர்களின்👴👵 


👣பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது🙇‍♂️(படித்ததில் பிடித்தது..)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அற்புதம்...

Jayakumar Chandrasekaran said...

நானும் ஒரு முதியவன் தான். முதுமை வரமா சாபமா  என்பது தான் புரியாத புதிர்.

வெங்கட் நாகராஜ் said...

முதிர்ந்த குழந்தைகள்.... சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் வீட்டிலும் மூன்று முதிர்ந்த குழந்தைகள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

முதுமையை இரண்டாம் குழந்தைப் பருவம் என்று சொல்வார்கள்.  சரிதான்.

Post a Comment