Thursday, January 6, 2022

நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம்

நாளை நம் தமிழக அரசு ...

தொற்று பரவலைத் தடுக்கும் நோக்குடனும்

நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை 

நமக்கு ஏற்படுத்தும் எண்ணத்துடனும்

பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதை

நாம் அனைவரும் அறிவோம்


இந்த பொதுமுடக்கத்தின் நோக்கத்தை

தெளிவாக அறிந்த  நம்மில் பலர் வீட்டை விட்டு

வெளியேறாமல் இருந்தாலும்......


அறியாமையின் காரணமாகவோ

அலட்சியத்தின் காரணமாகவோ.

பலர் இந்த பொது முடக்கத்தின் நோக்கத்தை

சிதைக்கும் வகையில் வெளியே தேவையின்றி 

அலைவதை காவலர்களின் துண கொண்டுதான்

கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.


இதற்காக காவலர்கள் அதிகாலை முதல்

மாலை வரை சாலைச் சந்திப்புகளில் நின்று

சிரமப்படுவதை நாம் இதற்கு முந்தைய

பொதுமுடக்கத்தின் போதே அறிந்திருப்போம்


இது போன்ற சமயங்களில் இவர்கள் யாருக்காகவோ வேலைபார்க்கிறார்கள் என எண்ணம் கொள்ளாது நமக்காக

நமது நலனுக்காக அவதியுறும் அவர்களுக்கு

உற்சாகம் தரும்படியாக அவர்களுக்கு ஏற்படும்

சிறு அசௌகரியங்களை நாம் நினைத்தால்

சரி செய்யலாம் ( அதனை அவர்கள்

எதிர்பார்பபதில்லை என்கிற போதிலும் )


நம் பகுதியில்  நம் வீட்டருகே பணியாற்ற வருகிற

காவலருக்கு அவர்கள் கேட்காமலேயே

இருக்கை கொடுத்து உதவலாம்.


பொது முடக்கத்தின் காரணமாக கடைகள்

ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்பதால்...


குடி தண்ணீர் பாட்டில்களை. கொடுத்து உதவலாம்


முடியுமானால் பதினொரு மணி அளவில்

பிஸ்கெட் அல்லது வேறு நல்ல ஸ்னேக்ஸை

கொடுத்து மகிழலாம்...


நமக்காக அல்லும் பகலும் உழைக்கும்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு இதுபோன்ற

சூழல்களில் சிறு சிறு கைமாறுகளைச் செய்வதன்  மூலம்

நமது நேசத்தையும் அவர்கள் பால்

நாம் கொண்டுள்ள நன்றியுணர்வையும்

வெளிப்படுத்தலாம்..


அதன் காரணமாகவே அவர்கள் பணி குறித்த

சிறப்பினை எண்ணி எண்ணி

அவர்களே பெருமிதம் கொள்ளச் செய்யலாம்


ஏற்கெனவே சொன்னபடி இதையெல்லாம்

அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்றபோதும்

நம் திருப்திக்காகவேணும்....


( இது போன்ற சமயங்களில்  எம் பகுதியில் இதைச்

செய்ததன் மூலம் நானும் எம் தோழர்களும் கொண்ட திருப்தியை

அனைவரும் அடையவேண்டும் என்னும்

நோக்கத்தோடு...அரிமா.வெங்கடசுப்ரமணியன் )


(இதனை தமிழகத்தில் அனைத்துப் பகுதியில்

உள்ளோரும் அறிந்து கடைபிடிக்கும்படிக்கும்படியாக

தங்கள் பக்கங்களில் பகிர்வது கூட ஒரு சேவைதான்)  

7 comments:

ஸ்ரீராம். said...

​நல்ல யோசனை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மை..

Bhanumathy Venkateswaran said...

அவசியம் செய்ய வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதே நடக்கட்டும்...

ராமலக்ஷ்மி said...

நல்ல ஆலோசனை.

Thulasidharan V Thillaiakathu said...

நம்மால் செய்ய இயன்ற நல்ல யோசனைகள்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அவசியமான செயல்

துளசிதரன்

Post a Comment