செய்யக் கூடாததை செய்துபாழ்படுத்தியவர்களை விடசெய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்
படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்
எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்
எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த அழிவுகளே உலகில் அதிகம்
இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
தெளிவாய் இதனை மனதில் கொள்வோம்.
ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்
2 comments:
நல்ல அறிவுரை. அன்று துரியோதனன் சபையில் வாய்மூடி மௌனமாக அமர்ந்திருந்த பெரியோர் நினைவும் வருகிறது!
சிறப்பான அறிவுரை.
Post a Comment