Wednesday, August 14, 2024

நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

3 comments:

Jayakumar Chandrasekaran said...

வாழ்க்கை ஓடுவதற்கே. ஓட்டத்தின் முடிவு, இலக்கு அவனுக்கு புலப்பட மாட்டாது. ஆனாலும் ஓடுவதே கடமை.

ஸ்ரீராம். said...

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள்.  உண்மையான அர்த்தம் வேறாக இருக்கலாம்.  நாம் காலத்தின் கைகளில் இலக்கில்லாமல்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  எங்கு முடிகிறோமோ அதுதான் நம் இலக்கு.

வெங்கட் நாகராஜ் said...

இலக்கு - நன்று.

இன்றைக்கு எதை நோக்கி ஓடுகிறோம் என்ற புரிதல் இல்லாமலேயே தான் பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment