Sunday, March 5, 2017

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வதுப்   பூக்கையில்
சேர்ந்தே பிறந்துப்  பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர்ப்  போக்கி
ஏகாந்தச்  சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பாணமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உனக்கு ஈடாய்
உலகினில் மாற்று ஏது சொல்
எமக்கு  உன் அருளை
என்றும்போல்  வாரிவழங்கிச் செல்

10 comments:

ஸ்ரீராம். said...

நன்று.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிஞனும் கற்பனையும் கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும் அதிசயக் குழந்தைக்குப் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

kowsy said...


கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
எமக்கு உன் அருளை
என்றும்போல் வாரிவழங்கிச் செல்

அருள் பெற்ற அருளாளர் அல்லவா சார் நீங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

கவிதைக்கு ஈடாய் ஏது மாற்று
அருமை ஐயா

Yarlpavanan said...

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான
எழில்மிகு வாகனம்
கவிதை தான் ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

Nagendra Bharathi said...

அருமை

G.M Balasubramaniam said...

கவிதைக்கு மட்டுமா அந்தப் பேறு

Anonymous said...

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

Unknown said...

கவிதை அறிவு எனபது கடவுள் தந்த வரம் வாழ்த்துக்கள்

Post a Comment