Thursday, March 9, 2017

இளைஞர்களே நாமொரு புதிய பாதையை வகுப்போமா ?...

கொள்ளையர்கள்
கொள்ளையடித்த பணத்தோடு
இன்னும் கொள்ளையடிக்க
அதிகாரம் கேட்டு
வரும் நாள் முடிவாகிவிட்டது

என்ன செய்யப்போகிறோம் ?

சொல்லாத சொல்லுக்கு
மட்டுமல்ல
விற்பனைக்கல்லாத பொருளுக்கும்
நிச்சயம் விலையில்லை

இனியும் நம் தலையில்
நாமே மண்ணை அள்ளிப் போடாதிருப்போமா ?

ஒவ்வொர் வீட்டு வாசலிலும்
"நாங்கள் விற்பனைப் பண்டமல்ல
எங்கள் வாக்கும்
விற்பனைக்கில்லை" எனும்
வாக்கியத்தை
அச்சிட்டு வைப்போமா ?

திருமங்கலம் ஃபார்முலாவுக்கு
நேர் எதிராய்
ஆர் .கே நகர் ஃபார்முலாவை உருவாக்கி

தமிழகம் கொண்டக்
கறையினைத் துடைப்போமா ?

இளைஞர்களே

நாமொரு புதிய
பாதையை  வகுப்போமா  ?

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதிய பாதையை வகுக்க, இன்றைய பேரெழுச்சி மிக்க, இளைஞர்களால் மட்டுமே முடியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

பணம் எனும் பாதையை மிதித்து முன்னேற வேண்டும்...

அன்பே சிவம் said...

நீறு பூத்த நெருப்பு அதை பத்திரமாக
காப்பது நம் பொறுப்பு.

G.M Balasubramaniam said...

/இன்னும் கொள்ளையடிக்க
அதிகாரம் கேட்டு
வரும் நாள் முடிவாகிவிட்டது/ எப்போது

Avargal Unmaigal said...

கேகே நகர் அல்ல ஆர்கே நகர் என்று அல்லவா வரவேண்டும்?

Avargal Unmaigal said...

இளைஞர்கள் மட்டுமல்ல முதியோரும் எங்கள் வாக்குகள் விற்பனை பண்டம் அல்ல என்று சொல்ல வேண்டுமல்லாவா?

Yaathoramani.blogspot.com said...

திருத்தம் செய்து விட்டேன்


Avargal Unmaigal //

இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
முதியவர்கள் தொடர வேண்டும்
பார்ப்போம்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

ஏப்ரல் பன்னிரண்டு
அது ஏப்ரல் ஒன்றாகிவிடக் கூடாது
எனப் பயமாக உள்ளது

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

எனக்கும் அந்த எண்ணம்தான் உள்ளது
முதல் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அன்பே சிவம் //

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

புதிய பாதையினை உருவாக்கியேத் தீர வேண்டும் ஐயா

Thulasidharan V Thillaiakathu said...

பார்ப்போம் மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று..

கீதா

வைசாலி செல்வம் said...

"நாங்கள் விற்பனைப் பண்டமல்ல
எங்கள் வாக்கும்
விற்பனைக்கில்லை"

இவ்வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது ஐயா.புதியதொரு விடியலை நோக்கி பயணிப்போம் நன்றி.

Yaathoramani.blogspot.com said...


வைசாலி செல்வம் //

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Thulasidharan V Thillaiakathu //

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Post a Comment