Friday, June 30, 2017

கணினி உலகம்

உலகைச் சுற்றி
உலகை அறிந்து கொள்வதை விட
"மௌசைத் "தட்டி
அறிந்து கொள்ளுதல்
எளிதாகவும்
விரைவாகவும்
முடிவதை நினைக்க

ஞானப் பழம் பெற
உலகைச் சுற்றிய முருகனும்
தாய் தந்தையரைச் சுற்றி
ஞானப் பழம் பெற்ற
"மூஸிக "வாகனனும்
நினைவில் வந்து போவதைத்
தவிர்க்க இயலவில்லை

உடன்
கணிப்பொறி இல்லையெனில்
உலகின் இயக்கமே
இல்லையென்றாகிப் போன
இன்றைய சூழலில்

அம்மையப்பன் தான் உலகம்
உலகம்தான் அம்மையப்பன்
என அருளிய
அம்மையப்பனின் அருளுரையும்...

10 comments:

Unknown said...

உண்மைதான் என்றாகி விட்டதே ஜி :)

KILLERGEE Devakottai said...

உண்மை எல்லாம் விரைவாகி விட்டது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கணிப்பொறி இல்லையெனில் உலகின் இயக்கமே இல்லையென்றாகிப் போன இன்றைய சூழலில்....//

உண்மைதான்.

ஒவ்வொருவர் கைக்குள்ளும் இன்று உலகமே அடக்கம்.

உருப்படுவதோ உருப்படாமல் போவதோ அவரவர்
இஷ்டம்போலவும், விருப்பம்போலவும் மட்டுமே.

எளிமையான சொற்களுடன் அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

Rajeevan Ramalingam said...

அம்மையப்பனின் அருளுரையும்..... இப்போது கணிணியில் வந்துவிட்டது. இல்லையா ஐயா..? :)

திண்டுக்கல் தனபாலன் said...

அதே... அதே...

K. ASOKAN said...

எல்லாம்.அவன்.செயலே

G.M Balasubramaniam said...

சில ஆண்டுகளுக்கு முன் நினைத்தே பார்த்திருக்கவில்லை. நானும் கணினியைக் கையாளுவேனென்று

ராமலக்ஷ்மி said...

மௌஸ்..
மூஸிக..

நல்ல ஒப்பீடு:). உள்ளங்கையில் இருக்கும் உலகம் குறித்து அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆம் ஆம்!! மூஷிக வாகனன் தான் இப்போது நம்மை உலகைச் சுற்ற வைக்கிறானோ இருந்த இடத்தில் இருந்தே!!!! உலகம் சிறியதாகிவிட்டதோ??!! ஒப்பீடு மிக அருமை!!!

கீதா

கோமதி அரசு said...

கணிப்பொறி இல்லையெனில்
உலகின் இயக்கமே
இல்லையென்றாகிப் போன
இன்றைய சூழலில்//

உண்மை.
அருமை.

Post a Comment