Friday, August 4, 2017

இனி நாம்...

இனி நாம்...

மாடி வீடு வைத்திருக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

கார் வைத்திருக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

மாதம் 1 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள வேட்பாளருக்கு
 ஓட்டு போடக்கூடாது..

1 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் வேட்பாளருக்கு 
ஓட்டு போடக்கூடாது.
.
அரசியல் பாடத்தில் முதுநிலை பட்டம் 
பெற்றிருப்போருக்கு மட்டுமே எங்கள் ஓட்டு..

வேட்பாளரின் மகன்/மகள் தனியார் பள்ளி/கல்லூரியில்
 படிப்பவர்களாக இருந்தால் ஓட்டு போடக்கூடாது
..
குடும்பத்தில் எவரேனும் அரசு வேலையில் பணிபுரிந்தால் 
அந்த குடும்ப வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

கொடுமையான சட்டமியற்றி மக்களை சிரமப்படுத்தும் 
ஆட்சியாளர்களை நாமும் நம்மால் முடிந்த எதிர்ப்பினை 
ஒற்றுமையுடன் வெளிப்படுத்துவோம்.👍👍👍

வாட்சப்பில் வந்தது

11 comments:

KILLERGEE Devakottai said...

மொத்தத்தில் யாருக்கும் ஓட்டு போடகூடாது நல்லதுதான்.

Unknown said...

யாருக்கு ஓட்டுப் போயட்டலும் இன்றைய நிலை மாறாது!எங்கே நீண்ட நாள் காண வில்லை!நலமா! த ம 3

Unknown said...

நோட்டாவுக்கே எங்கள் வோட்டு :)

bandhu said...

இன்று அரசியல் என்பது எவ்வளவு செலவு பிடித்த விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். வெறும் டீ குடித்துவிட்டு நாளெல்லாம் வேலை செய்யும் தொண்டர்கள் கம்யூனிஸ்ட் கட்சி தவிர வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. வெற்றுப் பேச்சை கேட்கும் கூட்டம் வருவதில்லை. பணம் + பிரியாணி + க்வார்ட்டர் என்று கொடுத்து கூட்டத்தை சேர்க்க வேண்டியிருக்கிறது.

இவ்வளவு செலவு செய்த பணத்தை எப்படி எடுப்பது. லஞ்சம் தான்.
பதவியில் இல்லாத ஒரு அரசியல் வாதியின் நிலையை நினைத்துப் பாருங்கள். எப்படி வாழ்க்கை நடத்துவார்?

நாமெல்லாம் ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை நடத்தவேண்டும். ஆனால் அரசியல் வாதி தன் நலன் சாராது நாட்டுக்கு உழைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி?

பேசாமல் லஞ்சத்தை அமேரிக்கா போல லாபியிங் என்ற பெயரில் சட்டப்படி செய்து விட வேண்டியது தான்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனை.

ராஜி said...

நல்ல யோசனை... இனி அப்படியே செய்வோம்

ராஜி said...

தம 6

G.M Balasubramaniam said...

ஊழலும் ஏமாற்று வேலையும் நம் ரத்தத்தில் ஊறிவிட்டது போட்ட பணத்தை மீட்க எதுவேண்டுமானாலும் செய்கிறார்கள் இன்க்லூடிங் மருத்துவர்கள் அது அதற்கு ஒரு ரேட் வைத்து விட்டால் மாறுதல் வருமோ

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல யோசனைதான் அப்போ யாருக்கு ஓட்டுப் போடுவது??!!!!!

கீதா

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் போடா விட்டால், உங்கள் ஓட்டை அவர்களே போட்டு விடும் காலம் இது.

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

Post a Comment