Sunday, August 19, 2012

கவிதையும் குழந்தையும்

விரும்பி வருந்தி
அணைக்க அழைக்கையில்
பழுப்புக்காட்டி ஓடி மறையும்
எதிர்பாரா நேரத்தில்
மனம் குளிர
மடியில் விழுந்து புரளும்......

சில சமயம்
பெரிய தோரணைக்காட்டி
சின்னஞ்சிறு கதைகள் பேசும்
பல சமயம்
கைக்கடக்கமாய்க் கிடந்து
பல அரியதை உணரக் காட்டும்....

கடலாய் மலராய்
காவியமாய் ஓவியமாய்
ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்
அவரவர் மன நிலையளவே
தன்னுயரம் காட்டும்
இன்சுவையும் கூட்டும்.....

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
ரசித்துப் படைத்தவனுக்கு
பேரின்பப் பெட்டகமாய்
உருமாறித் தன் முகம் காட்டும்
உணர்வுக்குள்  சொர்க்கத்தைச் சேர்க்கும் ...

சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடியாத தெனினும்
தன் சிறு அசைவால்
இருளோட்டி ஒளிகூட்டிப்  போகும்
துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்.....

குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?

38 comments:

அம்பாளடியாள் said...

அருமையாகச் சொன்னீர்கள் தாய்க்கும் கவிஞனுக்கும்
என்ன வித்தியாசம் உள்ளது இரு வேறு படைப்புகளிலும்!...தொடர வாழ்த்துக்கள் ஐயா .

குறையொன்றுமில்லை. said...

குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?

ஆமா ரொம்ப சரியா சொன்னீங்க.

குறையொன்றுமில்லை. said...

த. ம. 3

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

super sir .... keep it up

geevanathy said...

அருமை.
தொடருங்கள்.....

Unknown said...

குழந்தை ஒரு கவிதை தான், கவிதை கவிஞனுக்கு குழந்தை தான்.. நன்று அய்யா!

ரம்ஜான் சிறப்பு கவிதை...
உங்கள் பார்வைக்கும் கருத்துரைக்கும் அன்புடன் அழைக்கிறேன்.நன்றி....
http://ayeshafarook.blogspot.com/2012/08/blog-post_371.html

அன்பு உள்ளம் said...

அன்பு உள்ளம் தங்களை வாழ்த்துகின்றது ஐய்யா .

அன்பு உள்ளம் said...

இன்னொரு வாழ்துக்காகவும் காத்திருக்கின்றது என் தளம் .

Jothisri said...

யாராலும் மறுக்க முடியாத அழகு குழந்தையும் கவிதையும்தான்...கவி பாடி கூட குழந்தையை வரையறுக்க முடியாது..ஆனால் குழந்தைதான் கவிதையை வரையறுக்க முடியும்.ஏனெனில் அழகாக இருக்க வேண்டுமல்லவா.எப்படியாயினும் நம் நோக்கம் சந்தோசமே..

நன்றி.

Rasan said...

அருமையான வரிகள்.
// ரசிக்கத் தெரிந்தவனுக்கு
மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
ரசித்துப் படைத்தவனுக்கு
பேரின்பப் பெட்டகமாய்
உருமாறித் தன் முகம் காட்டும்
உணர்வுக்குள் சொர்க்கத்தைச் சேர்க்கும் ... //
ரசனையான கவிதை. உண்மை தான்.
குழந்தையின் அழகில் தன்னை மறக்கிறான்
கவிதையின் அழகில் உலகை மறக்கிறான்
தொடருங்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

கிருபன் said...

குழந்தை,உங்கள் கவிக்குழந்தை மிகவும் அருமை ஐயா,வாழ்த்துக்கள்...

Angel said...

//ரசித்துப் படைத்தவனுக்கு
பேரின்பப் பெட்டகமாய்//
குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?//


அருமையான படைப்பு .குழந்தையும் கவிதையும் ஒன்றுதான் .


ஸாதிகா said...

குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?//மிக அழகாய் சொன்னீரக்ள்

Anonymous said...

வாழ்க்கையை உயிர்ப்புடன் வைக்கும் மிகச்
சில விஷயங்களில் இந்த [கவிக்]குழந்தையும்
ஒன்று.

ஸ்ரீராம். said...

நம்மால் படைக்கப் படும் யாவும், ரசிக்கப் படும் யாவும் நம் குழந்தைகள்தானே! நன்றாய்ச் சொன்னீர்கள்!

Unknown said...

கவிதைகள் ...குழந்தைகள் இரண்டுமே அழகு தான்!

நன்று..வாழ்த்துக்கள்!

Thozhirkalam Channel said...

ரசித்தோம்....... இனிமை

நிலாமகள் said...

ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்
அவரவர் மன நிலையளவே
தன்னுயரம் காட்டும்

இர‌ட்டுற‌ மொழிந்த‌ அழ‌கிய‌ க‌விதைக்குழ‌ந்தை!

பூங்குழலி said...

குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன

இரண்டையும் சொன்ன விதம் மிக மிக அருமை

Seeni said...

arumai arumai!

veru vaarthai illai...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?//

படைப்பாளிக்கும், கவிதை ரஸிகனுக்கும்,
கவிதை தான் குழந்தை.

மழலைப் பிரியர்களுக்கும், சம்சார சாஹரத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு, குழ்ந்தைகளே கவிதைகள்.

நல்ல பதிவு.. பாராட்டுக்கள்.. vgk

Anonymous said...

''...சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடியாத தெனினும்
தன் சிறு அசைவால்
இருளோட்டி ஒளிகூட்டிப் போகும்
துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்...'''
இப்போது அனுபவிக்கிறேன்.
நல்ல சிறப்பான படைப்பு. பாராட்டுகள்.

பால கணேஷ் said...

வரிக்கு வரி சிறப்பு. அனைவருக்கும் ஏற்புடைய கருத்து. மிக ரசித்தேன். நன்று ஐயா.

Manimaran said...

கலக்கல் கவிதை..

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து வரிகளையும் ரசித்தேன்...

/// குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ? ///

இதற்கு மேல் என்ன வேண்டும்... ?

வாழ்த்துக்கள்... நன்றி... (TM 9)

சென்னை பித்தன் said...

படைத்தவனுக்குத்தானே தெரியும் அந்தப் பிரசவ வேதனையும், பிந்தைய மட்டற்ற மகிழ்ச்சியும்,கவிதையும்,குழந்தையும் ஒன்றுதான்!
அருமை!

சென்னை பித்தன் said...

த.ம.10

ஆத்மா said...

அழகு சார் அழகு வரிகள் பிரமாதம் (11)

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஓப்பீடு! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

மாதேவி said...

உங்கள் கவிக்குழந்தை அருமை.

அருணா செல்வம் said...

ஆமாம்... ஆமாம்...
கவிஞன் ஆண்மகனாயினும்
கவிதையைச் சுமர்ந்து பெற்றவனாகிறான்.
தான் பெற்ற குழந்தையை விட
தான் பேற்றுவித்த
கவிதை குழந்தை அதனிலும்
உயர்ந்தது தான் ஐயா.
நன்றிங்க ரமணி ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

Seeni said...

இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

வருகை தாருங்கள்-
அய்யா!

மூத்தவர்கள்,,

G.M Balasubramaniam said...


குழந்தையைக் கவிதை என்றால் என்ன, கவிதையைக் குழந்தை என்றால் என்ன, காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.

அப்பாதுரை said...

கடைசி வரிகள் வரை யோசிக்க முடியவில்லை. சுவையான உருவகங்கள்.
இரண்டில் ஒன்று என்றைக்கும் குழந்தையானதால் அதிக இன்பமோ?

வெங்கட் நாகராஜ் said...

//சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடியாத தெனினும்
தன் சிறு அசைவால்
இருளோட்டி ஒளிகூட்டிப் போகும்
துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்.....//

அருமை.... த.ம. 12

யுவராணி தமிழரசன் said...

///
ரசிக்கத் தெரிந்தவனுக்கு
மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
ரசித்துப் படைத்தவனுக்கு
பேரின்பப் பெட்டகமாய்
உருமாறித் தன் முகம் காட்டும்
உணர்வுக்குள் சொர்க்கத்தைச் சேர்க்கும் ...
///
அருமையான வரிகள் சார்! கவிதையை குழந்தையாகவும்!!! குழந்தையை கவிதையாகவும் வர்ணித்திருப்பது உள்ளத்தில் உருகி உணரும்படியான உணர்வுகளை தந்துவிட்டுப்போகிறது!

Post a Comment