Monday, November 26, 2012

நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

ஈட்டி எறியவும்
வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாது திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

புதையாது ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில் எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
மதம் கொள்வதே இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததை தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்
எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்
நாங்கள் என்றும்  எப்போதும்
துளியும் மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

24 comments:

தி.தமிழ் இளங்கோ said...

// நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ? //

நாங்கள் ஜனநாயகக் கடமையாற்றும் வாக்காளர்கள்!

வெங்கட் நாகராஜ் said...

என் ஊகம் சரியா எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்....

த.ம. 2


கவியாழி said...

அருமை.
நம்பிக்கை படகு

திண்டுக்கல் தனபாலன் said...

மதம் பிடித்து அலைபவர்களுக்கு / தன்னைத்தானே பகுத்தறிவாதி என்று நினைப்பவர்களுக்கு சரியான சாட்டையடி... tm4

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Easy (EZ) Editorial Calendar said...

கவிதை மிகவும் அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ADHI VENKAT said...

பொறுத்திருந்து தெரிந்து கொள்கிறேன்....:)

த.ம. 5

r.v.saravanan said...

கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

மாறாததொன்றே மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

அருமை ரமணி சார் வரிகளின் ஜாலம் என்னை ஈர்க்கின்றது

முனைவர் இரா.குணசீலன் said...

இறந்து போன மீன்கள் மட்டுமே ஆற்று நீரில் அடித்துச்செல்லப்படும்..

அதுபோல

உணர்ச்சியற்ற மனிதர்கள் மட்டுமே வாக்களிக்கும் இயந்திரங்களாக இருக்கமுடியும்.

சராசரி மனித வாழ்வியலை மிக அழகாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள்..

அன்றாடப் போர்களில்
அடிபடாது திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

மிக நன்று.

சின்னப்பயல் said...

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

ஆத்மா said...

மதம் கொள்வதே இல்லை//////

பதிவுலகமும் தொடர்புபடுகிறதோ..... (7)

Admin said...

யூகிக்க முடிகிறது..

அருணா செல்வம் said...

எங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறது
உங்களின் “நாங்கள்“ யாரெனத் தெரிகிறதா .. கவிதை.

அருமையான கவிதை இரமணி ஐயா.

ஸ்ரீராம். said...

பலமறியா ஆஞ்சநேய யானைகள்! தமிழ்பட வடிவேலுகள்! :))

குட்டன்ஜி said...

கண்ணாடியில் பார்க்க வேண்டுமோ!
அருமை

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

அதான் முதலிலேயே அடையாளம் காட்டிவிட்டீர்களே - கனவில் கூட கிரீடம் எண்ணாதவர்கள்.

எத்தனை சோகமான அடையாளம்!

தனிமரம் said...

யானையாக யார் என்பதை கவிதைமூலம் அருமையாக சாடிய கவிதை ரசித்தேன் ஐயா!

சேக்கனா M. நிஜாம் said...

யூகிப்பதில் இத்துணை மாற்றங்கள் !

கவிதைக்கு கிடைத்த சிறப்பு என்பேன்

தொடர வாழ்த்துகள்....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கோமதி அரசு said...

தன் பலமறியா மக்கள் தானே!
கவிதை அருமை.

Seeni said...

jananaayakam. .

poruththam ena ninaikkiren....

ஹேமா said...

விதி,நம்பிக்கை என்று சொல்லிக்கொள்ளலாமோ ?

Post a Comment