Tuesday, September 13, 2016

வன்முறைகளுக்குத் தீர்வு
முன்பு திருடர்களும், கொள்ளைக்காரர்களும்,
கொலைக்காரர்களும்,வன்முறையாளர்களும்
பயந்துப் பயந்துத் தங்களை மறைத்தபடி
எதிர்பாராதவிதமாக,தங்கள் பித்தலாட்டச்
செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்

அவர்களிடம் தர்ம, நியாயப் பயமற்றுப் போயிரிந்தாலும் கூட
சட்டப் பயம் ,தண்டனை பயம் இருந்தது

இன்று தர்ம நியாயப் பயம், சட்டத் தண்டனைப் பயம்
முற்றிலும் அழிந்து போனதன் காரணமே
இத்தனை வன்முறைகளுக்குக் காரணம்

இது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்கிற
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது
நடவடிக்கை எனப் புகுந்தால்,
எல்லா அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும்
கூட்டுக் களவாணிகளாக இருப்பதால்
அரசியல் ரீதியாக அவர்களுக்குள் ஒரு
மறைமுக உடன்பாடு இருப்பதால்
இதற்குஒரு கமிஷன் எனப் போட்டு,விஷயத்தை
நீர்த்துப் போகவிட்டு, பின் ஏதுமற்றதாக
ஆக்கி விடுகிறார்கள்

அதற்குள் அந்த அந்தப் பகுதியில் வன்முறையை
அரங்கேற்றியவர்கள் ஒரு தாதா வாகி
அரசியல் செல்வாக்கும் பெற்றுவிடுகிறார்கள்

 எந்த மா நிலமாயினும் இதுதான் ஒரு
தொடர்கதை போலத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது

இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது இருக்க
வேண்டுமாயின் உடன் அரசு ஒரு சட்டத்தை
நிறைவேற்றலாம்

முன்பு போல இப்போது வன்முறையை
பொது இடங்களில் நிகழ்த்திவிட்டு
யார் கண்ணிலும் படாது ஓடிவிடச் சாத்தியமில்லை

இந்த பெங்களூரு வன்முறையில் கூட
தான் தான் செய்கிறேன் என்பது தெரியும்படியாகவே
வண்டியை சேதப்படுத்துபவர், தீவைப்பவர்,
ஆடையைக் கலைகிறவர் என அனைவரின்
புகைப்படங்களும் காணொளிகளும்
பகிரப்பட்டுள்ளன

அரசு எந்த ஜால்சாப்பும் சொல்லாமல் உடன் அந்தத்
தனி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து
சிறையில் அடைப்பதுடன்,அவர் செய்த
சேதாரத்திற்கானத்தொகையை
அவரிடமே வசூலிக்கும்படியாக உடன்
ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால்
இனி ஒரு அரசியல் கட்சியோ , அல்லது
ஒரு அமைப்போபோராட்டத்தைத்
தூண்டினாலும் கூட இதுபோன்ற
வன்முறைச் சம்பவங்களில் தனி நபர்கள் நிச்சயம்
ஈடுபடமாட்டார்கள்


ஒரு காணொளியை ஆதாரமாகக் கொண்டு
உடன் அந்த வன்முறை அரங்கேற்றும் நபரைக்
கைது செய்யும் அதிகாரத்தை காவல் துறைக்கு
அதிகாரம் வழங்கப் படுமாயின், ந்ச்சயமாக
இது போன்ற வன்முறைகள் இந்தியாவில் நடைபெற
சாத்தியமற்றுப் போகும்

(இப்போது எல்லோரிடமும் புகைப்படம் எடுக்கும்
அமைப்புடன் இருக்கும் கைபேசி இருப்பதால்
நூற்றுக்கு தொன்னூறு வன்முறை நிகழ்வுகள்
பதிவாகிவிட சாத்தியம் அதிகம்)

அரசு இதை பரிசீலிக்கும்படியாக நாம்
பொதுக் கருத்தை உருவாக்கலாமா ?

அதே சம்யம் பொது நல நோக்கமுடைய
அமைப்புகள் அல்லது சட்டவல்லுநர்கள்
இந்த காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொடுத்து
உடன் அந்தத் தனி நபர்களை கைதுசெய்யும்படி
பொது நல  வழக்குகள் பதிவு செய்யலாமா ?

17 comments:

vimalanperali said...

பிச்சைக்காரர்களை ஒழித்து விட்டதாக சொல்லும் தேசத்தில் வன்முறையாளர்கள் பெருகிப்போனார்கள்/

Unknown said...

//அரசு எந்த ஜால்சாப்பும் சொல்லாமல் உடன் அந்தத்
தனி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து
சிறையில் அடைப்பதுடன்,அவர் செய்த
சேதாரத்திற்கானத்தொகையை
அவரிடமே வசூலிக்கும்படியாக உடன்
ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால்
இனி ஒரு அரசியல் கட்சியோ , அல்லது
ஒரு அமைப்போபோராட்டத்தைத்
தூண்டினாலும் கூட இதுபோன்ற
வன்முறைச் சம்பவங்களில் தனி நபர்கள் நிச்சயம்
ஈடுபடமாட்டார்கள்//

நல்ல கருத்து. விஜயன்

G.M Balasubramaniam said...

அரசே மறைமுக ஆதரவு தரும் தைரியம்தான் அவர்களை இச்செயல்கள் புரிய வைக்கிறது என்பது என் கருத்து. அரசியல் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பகிரங்கமாக வன்முறையைத் தூண்ட/செய்யத் தயங்குவார்கள்

V Mawley said...

தங்கள் ஆலோசனை மிக்க நன்று ..ஆனால் எவ்வளவு 'சிக்கலற்ற கேஸையும் ' வருஷக்கணக்கில் இழுத்தடிக்கும்
"வல்லமை " நமது சட்ட வல்லுனர்களும் ,வழக்குரைஞர்களும்
specialise செய்திருக்கிறார்கள் ..தங்களுடைய ENTHUSIASM-தை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை ...சாரி ..

மாலி

V Mawley said...

our JUDICIARY HAS ALLOWED ITSELF BE HIGH-JACKED BY
RANK CROOKEDNESS,I OFTEN WONDER WHETHER WE ARE LIVING IN A CIVILIZED SOCIETY...

MAWLEY.

சிவகுமாரன் said...

செய்ய மாடடார்கள் யாரும். அரசியல்வாதிகளுக்கு அப்பாவித் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை. அவர்களது சானல் அங்கு விலைபோகாதே என்ற கவலை அவர்களுக்கு.

Yaathoramani.blogspot.com said...

Vimalan Perali//

உடன் முதல் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

இப்படி வன்முறையை தூண்டிவ்டுவதே அரசியல் தலைவர்கள்தானே அப்படி இருக்க அவர்கள் எப்படி இப்படிபட்ட சட்டத்தை கொண்டுவருவார்கள்

Yaathoramani.blogspot.com said...

. விஜயன்//

உடன் வரவுக்கும்
மிகத் தெளிவான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

எல்லா நல்ல விஷயங்களும்
இப்போது நீதிமன்றங்களின் மூலம்தான்
நடைபெறவேண்டியது என ஆகிப் போன
நிலையில் இதுதான் எனக்கு
ஆகக் கூடிய தீர்வாகப் படுகிறது
தங்கள் வரவுக்கும் மனம் திறந்த
பின்னூட்டதிற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

சில நல்ல விஷயங்களும்
நீதி மன்றங்களின் மூலமே
நடைபெற்றுள்ளது
V Mawley //

சில பத்திரிக்கைச் செய்தியை கூட
மனுவாக ஏற்று நீதிமன்றம்
வழ்க்கு நடத்திய நிகழ்வுகளும்
நடந்த ஞாபகம்...பார்ப்போம்

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

பேசவேண்டியவர்களின்
வாயடைத்துப் போயிருக்கையில்
நம் நம்பிக்கை இன்னும்
குலையத்தான் செய்கிறது
ஆயினும் என்ன செய்வது
நாமாவது ஊதுகிற சங்கை
ஊதி வைப்போம்

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

நீங்கள் சொல்வது சரிதான்
அதற்காகத்தான் இரண்டாவதாக
பொதுவழக்குக் குறித்தும்
யோசிக்கலாமா என எழுதி இருக்கிறேன்


கரந்தை ஜெயக்குமார் said...

செய்யக் கூடாத செயலைச் செய்வதற்கு அவர்கள் ஒற்றுமையாய் நிற்கிறார்கள்
ஆனால் நாமோ பிரிந்து இன்னும் அரசியல் செய்துகொண்டே இருக்கிறோம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என
உலகுக்கு அறிவுறுத்திய நமது நிலைமை
வேதனை

Thulasidharan V Thillaiakathu said...

இந்த வன்முறைக்கு மறைமுகமான காரணகர்த்தாக்கள் அரசியல்வாதிகள்தானே. அப்புறம் எப்படிச் சட்டம் வேலை செய்யும்...

”தளிர் சுரேஷ்” said...

வன்முறை அரசியல்வியாதிகளால் பெருகிவிட்டது! வியாதிகள் மருந்துகளை விரும்புவது இல்லை!

வெங்கட் நாகராஜ் said...

அரசியல்வியாதிகளே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்க, இப்படி சட்டங்களை ஏற்படுத்துவார்களா....

ஒவ்வொரு மாநிலத்திலும் இதே வேதனை தான்.

Post a Comment