Friday, September 16, 2016

ஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....

ஆலயம் விட்டு
ஆண்டவன்
அவசரமாய் வெளியேறிக் கொண்டிருந்தான்

"எங்கே இவ்வளவு அவசரமாய்.."
என்றேன் அதிர்ச்சியுடன்

"ஆடம்பரமும், ஆரவாரமும்
மிக அதிகமாகிவிட்டது
சகிக்கவில்லை..அதுதான் "
என்றான்

"அப்படியாயின்
மீண்டும் காடு நோக்கி
அல்லது மலை நோக்கி அப்படித்தானே "
என்றேன்

"இல்லையில்லை
அங்கு அமைதி இருக்கும்
அன்பு கிடைக்காது
எனக்கு இரண்டும் வேண்டும் "
என்றான்.

நான் குழம்பி நின்றேன்

பின் காதோரம் இரகசியமாய்..

"ஓலைக் கூரையோ
ஓட்டு வீடோ
ஒட்டுக் குடித்தனமோ
விஸ்தீரணம் முக்கியமில்லை எனக்கு "என்றபடி
கூட்டத்தினில் மாயமாய்
மறைந்து போனான்

நானும் ஆலயம் விட்டு
அவசரமாய் வெளியேறினேன்

அவன் இல்லாத இடத்தில்
எனக்கும் இனி எப்போதும்
வேலையில்லை என்பதனாலும்..

அவன் வரவுக்காக
என்னையும் என்வீட்டையும்
சீர் செய்ய வேண்டும் என்பதற்காகவும்..

15 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அன்பும்
அமைதியும் இருக்குமானால்
அவ்விடம் சொர்க்கமே
நன்றி ஐயா
தம+1

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆண்டவனைக்கூட இப்படி அலைய விடுகிறார்களே. அருமை ஐயா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆண்டவனைக்கூட இப்படி அலைய விடுகிறார்களே. அருமை ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தத்தைப் பகிர்ந்த விதம் அருமை.

G.M Balasubramaniam said...

ஆண்டவன் எங்குமிருக்கிறானே அவன் இல்லாத இடம்தான் ஏது

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. ரசித்தேன்.

சீராளன்.வீ said...

வணக்கம் !

ஆலயத்தை ஆண்டவன் காலிசெய்து விட்டான் எப்போதோ நாம்தான் தேடிட்டு இருக்கிறோம்

தம+1

Bhanumathy Venkateswaran said...

அருமை!

Bhanumathy Venkateswaran said...

அருமை!

Unknown said...

மனசாட்சியில் ஆண்டவன் வருவதாய் இருந்தால் நானும் வரவேற்கிறேன் :)

நெல்லைத் தமிழன் said...

'நன்றாக இருக்கிறது. இதையே வேறு மாதிரிப் படித்துள்ளேன். காலையில் நடை திறந்ததும் பழனி முருகன் உடனே வெளியில் கிளம்பிவிடுவானாம். நடை சாத்தும்போது திரும்ப உள்ள வருவானாம். கேட்டதற்கு, உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் தாங்கமுடியாத பிரச்சனை இருக்கிறது போலும். அதைச் சொல்லுவதற்காக என்னிடம் வருகிறார்களே தவிர என்னைத் தரிசிக்க அல்ல. அதனால் நானும் 'நடை திறந்ததும் வெளிக்காற்றை சுவாசிக்க கோவிலை விட்டு வெளியே சென்றுவிடுகிறேன் என்று.

Unknown said...

ji it is very much true

Unknown said...

ji it is very much true

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் ரசித்தோம் வரிகளை. ஆம் உண்மைதானே ஆண்டவனிடம் அன்பு செலுத்தியா நாம் வணங்கச் செல்கின்றோம்? அவரிடம் பல வேண்டுதல்களை அல்லவா வைத்து வியாபாரி போல் நடத்துகின்றோம்...

Post a Comment