"வரம் கொடுத்தவன்
தலையிலேயே
கைவைக்க முயற்சித்த
அசுரன் கதையில்
எனக்கு நம்பிக்கையில்லை"
என்றார் அந்த முதியவர்
"எனக்கும் அப்படித்தான்
அரக்கனே ஆயினும் கூட
அப்படிச் செய்ய மனம் வருமா ?"
என்றார் அடுத்தப் பெரியவர்
அடுத்திருந்தப் பெரியவர் மட்டும்
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது
முயற்சித்த இல்லை
கைவைத்த....."
என்றார் விரக்தியாய்
பெரியவர்கள் இருவரும்
ஒரு பத்தாம்பசலியைப்
பார்ப்பதுப் போல
அவரைப் பார்க்க...
அவர் இப்படிச் சொன்னார்
"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"
என்றார் மெல்லச் சிரித்தபடி
சிறிது நேரம் யாரும்
பேசிக் கொள்ளவுமில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்ளவுமில்லை
மெல்லக் கனத்த இருள்
சூழத் துவங்கியது
வெளியிலும்....
தலையிலேயே
கைவைக்க முயற்சித்த
அசுரன் கதையில்
எனக்கு நம்பிக்கையில்லை"
என்றார் அந்த முதியவர்
"எனக்கும் அப்படித்தான்
அரக்கனே ஆயினும் கூட
அப்படிச் செய்ய மனம் வருமா ?"
என்றார் அடுத்தப் பெரியவர்
அடுத்திருந்தப் பெரியவர் மட்டும்
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது
முயற்சித்த இல்லை
கைவைத்த....."
என்றார் விரக்தியாய்
பெரியவர்கள் இருவரும்
ஒரு பத்தாம்பசலியைப்
பார்ப்பதுப் போல
அவரைப் பார்க்க...
அவர் இப்படிச் சொன்னார்
"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"
என்றார் மெல்லச் சிரித்தபடி
சிறிது நேரம் யாரும்
பேசிக் கொள்ளவுமில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்ளவுமில்லை
மெல்லக் கனத்த இருள்
சூழத் துவங்கியது
வெளியிலும்....
15 comments:
//"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"//
மிகவும் நியாயமான பேச்சு. :)
இதெல்லாம் ஒரு சுற்று வட்டம் தான். அனுப்பி வைத்தவரின் மகனே அதே இடத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
வரம் கொடுத்தவர் தலையில் கை வைக்க முயற்சி செய்தால் என்ன நடக்கும் என்றும் கதை இருக்கிறதே
மெல்லக் கனத்த இருள் சூழத் துவங்கியது
வெளியிலும்மட்டுமல்ல நம் மனதிலும்தான்
அவரவர் மனத்தைப் பொறுத்தே.
உண்மை
உண்மை
தம+1
இந்தக் காலத்தில் பெற்றோர்கள் எல்லாம் தனிமையில் தான் இருக்கிறார்கள், அவர்கள் வசதிக்கே மூத்த குடிமக்கள் இல்லங்கள்.
காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.
மூத்த குடிமக்களின் நிலை, இளைய குடிமக்களுக்கும் எதிர்காலத்தில் வரும் அல்லவா?
bro these senior citizens do not know that a huge sum has already been paid by their sons to perform the last rites.... yes the last rites will be earnestly pewrformed by the OLD AGE HOME......

அர்த்தம் பொதிந்த படைப்பு! அருமை!
மனதைத் தொட்ட பகிர்வு..... இப்படியான இல்லங்கள் பெருகி வருவது வேதனை.
நல்ல அர்த்தமுள்ள வரிகள். மனம் கனத்தது. யதார்த்தமும் அப்படியாகிப் போயிற்றே
Post a Comment