மன்னர் காலங்களில் சிற்பக் கூடங்கள் ஏ
அதிகம் இருக்கும்.அந்தச் சிற்பக் கூடம் ஒரு
தலைமைச் சிற்பியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்
சிற்பத்திற்குகந்த கற்களைத்
தேர்ந்தெடுத்துச் சேர்த்தல்,
தேர்ந்தெடுத்துச் சேர்த்தல்,
சிற்பக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தல் ,
வடிவமைத்தல்,முதலான அனைத்திற்கும்
அந்தத் தலைமைச் சிற்பியே முழுப் பொறுப்பேற்பார்
ஓரளவு பயிற்சிப் பெற்றப் பின்புதான புதிய
சிற்பிகள் சிலை வடிக்க அனுமதிக்கப்படுவார்கள்
ஆயினும் புதிய்வர்கள் என்பதால் எப்படியும் புதிதாகச்
செய்கையில் சிறு சிறு தவறின் காரணமாக
சிலைகள் சேதமுறவோ,இறுதி கட்டத்தில்
சிறு சிறுத் தவறுகள் நேர்ந்து விடவோ வாய்ப்பது
நிச்சயம் அதிகம் உண்டு
அது போன்று தவறுகள் நேரும் போது
பயன்ற்ற சிலைகள் அதிகம் சிற்பக் கூடத்தில்
சேர்ந்து விடவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு
மூளியான சிலைகள் சிற்பக் கூடத்தில் இருத்தல்
ஆகாது என்பதாலும்,
புதியவர்கள் அதனை உடனடியாக
பிள்ளையாராக மாற்றிவிட்டால் தவறுக்கான
தண்டனையில் இருந்து விலக்களிக்க
உத்திரவாதம் இருந்ததாலும்,
பிள்ளையாராக எந்தச்
சேதமுற்ற சிலையையும் மாற்றுதல் மிக மிக எளிது
என்பதாலும்
புதிய சிற்பிகளுடன் தவறு நேர்ந்தவுடன்
உடனடியாக தலைமைச் சிற்பியின் கவனம்படும்முன்
அதனை பிள்ளையாராக உருமாற்றம் செய்து விடுவர்
எந்த ஒரு சிற்பியும் சிற்பிக்கான பயிற்சி முடித்ததும்
செய்கிற முதல் சிலை பிள்ளையாராக
இருக்கும் என்பதால்
இருக்கும் என்பதால்
எந்த ஒரு சேதமுற்ற சிலையையும் உடன்
பிள்ளையாராகச்செய்துவிடும் திறன்
அனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்
பிள்ளையாராகச்செய்துவிடும் திறன்
அனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்
இப்படி அன்றாடம் சேருமின்ற பிள்ளையாரை
வெளியேற்றுதலையே பிரதானப்
பணியாகக் கொண்டால்சிற்பக் கூடத்தின்
பிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்
பணியாகக் கொண்டால்சிற்பக் கூடத்தின்
பிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்
எனவே அதனை மக்களாகவே எடுத்துச்
செல்லும் விதமாக
செல்லும் விதமாக
ஆலமரம் அரசமரம் பிணைந்த இடம்,
குளக்கரை,நேர்க்குத்து உள்ள இடங்கள்,
கோவில் அரசமரத்தடி
குளக்கரை,நேர்க்குத்து உள்ள இடங்கள்,
கோவில் அரசமரத்தடி
என பிள்ளையாருக்கான தேவையையும்
அதிகம் இருக்கும்படியான நம்பிக்கையையும்
உருவாக்கி வைத்திருந்தார்கள்
அனுமதி பெற்றுக் கேட்டு எடுத்துச் செல்வது என்பது
இருக்குமாயின் அதற்கான கால விரயம்,
சம்ரதாயம் அக்கறையின்மைக்குச்
சாத்தியம் என்பதால் கேட்காமலே
எடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்
இந்தச் சலுகையைக் கொடுத்திருந்தார்கள்
எடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்
இந்தச் சலுகையைக் கொடுத்திருந்தார்கள்
காலப் போக்கில் கேட்காமல் எடுத்துச் செல்வதைத்
திருடுவது என்கிற அர்த்தமாக எடுத்துக் கொண்டு
அப்படி எடுத்துக் கொண்டு வைத்த பிள்ளையாருக்கு
திருடி வைத்த பிள்ளையார் என்றும் அதற்குத்தான்
அருளும் சக்தி மிக அதிகம் எனவும் (எல்லா
பிள்ளையாருக்கும் உண்டு என்றாலும் )
ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்ததால்தான்
நாம் அதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட
சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்படுகிற
பிள்ளையாரைத் தவிர மற்ற இடங்களில் இன்னமும்
எங்கிருந்தோ பிள்ளையாரை கடத்தி வந்துத்தான்
(திருடித்தான் )வைத்துக் கொண்டிருக்கிறோம்
(சிறு வயதில் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டது
சுவாரஸ்யமாகவும், லாஜிக் சரியாகவும் இருந்ததால்
இப்போதுவரை என் நினைவில் இருந்ததால்
அதனை பதிவு செய்துள்ளேன் )
9 comments:
சுவாரஸ்யமான தகவல். ஆனால் 'பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்த' கதைதான் கேள்விப்பட்டிருக்கிறோம்!
:))
அறியாத தகவல் ஐயா
தம +1
அறியாத புதிய தகவல். அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.
தங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/
ஸ்வாரஸ்யம். எல்லா பழக்கங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். பிள்ளையார் திருடுவதற்கும் ஒரு காரணம் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
இது நான் கேள்விப்பட்ட கதை அல்ல என்றாலும், தாங்கள் சொல்லியுள்ள காரணங்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளன.
பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.
சுவாரஸ்யமான தகவல், லாஜிக் இடிக்கலை :-)
அருமையான பதிவு
மிக மிக சுவாரஸ்யமான தகவல். ஒவ்வொன்றிற்கும் ஏதோ காரணம் இல்லையா... பகிர்வுக்கு மிக்க நன்றி
Post a Comment